Tuesday, August 6, 2019

அண்ட பிண்ட ரகசியம் | The Secret of the Universe and Human



அண்ட பிண்ட ரகசியம்

படித்து பாருங்கள் கரைந்து போவிர்கள்


அண்ட பிண்ட ரகசியத்தை சித்தர்கள் எப்படி கண்டறிந்தனர்?
இப்படிப்பட்ட இன்பமும், துன்பமும், ஏற்படுகின்ற இந்த வாழ்க்கைக்கு வழியே
இல்லையா?
நிரந்தரமான மகிழ்ச்சி கிடைக்காதா? என்ற கேள்வி எழ ஆரம்பித்தது.
எனக்குள்ள அந்தக் கேள்விக்கு மனிதன் கண்டெடுத்த
முத்துகளாகிய பிரபஞ்ச அண்ட பிண்டத் தத்துவம்.
இன்னும் ஆழமாகப் புரிய ஆரம்பித்தது. அதன் முடிவு எங்கு தோற்றமோ?  
அங்கேதான் முடியும் ? என்பதை புரிந்து கொண்டேன் ஆராய முற்பட்டேன்
அதன் விளைவு வெட்டவெளி தோன்றியது. அதிலிருந்து தோன்றிய ஜோதி என் கண்முன்
தோன்றின.அதிலே முளைத்து எழுந்த அணுவே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
ஆகி ஓரறிவு ஐந்தறிவு பிராணி ஆறறிவு மனித ஜீவன் வரையுள்ள பரிணாமத்தைக்
கண்டேன் கடைசியாகத் தன்னைத்தானே ஆராய முற்பட்டான். அதன் விளைவு தன்னுடைய இடத்திலே இருக்கும் மூல ஆற்றலை உணர்ந்தேன் எங்கோ தொடங்கிய மூல ஆற்றல்அண்டங்களாக பேரண்டங்களாக வியாபித்துள்ள பூரனமாய் நிறைந்துள்ள அந்த ஆற்றலைகண்டேன் பிரபஞ்சத்தின் சிறிய அணுவான மனிதன் மூல சக்தி என்கிற கயிற்றின் நுனியைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக பிரபஞ்ச பேராற்றலின் பரமாணுவை அடைந்து அதோடு ஐக்கியமாகமுடியும் என்று கண்டுபிடித்தேன் கண்டுபிடித்து அடைந்தவன் சித்தன்.
வெட்டவெளியில் ஜோதியாக இருபவனும் சித்தனே. வெட்டவெளியில் ஜோதியாக
இருபவனும் சித்தனே. அதுவேபிரம்மரகசியம் ! அதை அறிந்தவனே பிரம்மரிஷி.

பரமாணுவில் தொடங்கி அணுக்கள் கூட்டம் கூட்டமாக பல்வேறுபட்ட இயக்கங்களை
அண்டங்களாக, பிண்டங்களாக நடந்து கொண்டு இருக்கின்ற பேரியக்க மண்டலமே
(Universe) அதனுடைய முதல் நிலை ஆகாயம் எனப்படும்.
அதன் அடுத்த நிலையே காற்று எனப்படும். இவை இரண்டும் மோதிக் கொள்வதால்
ஏற்படும்போது உண்டான வெப்ப நிகழ்ச்சியே நெருப்பாகும். நீரகவாயு, பிராணவாயு என்ற இருவகையான வாயுக்கள் குறிப்பிட்ட அளவில் சேருகின்ற போது நீர் ஆகிறது. நீரின் இறுகிய நிலையே மண்.இவ்வைந்து நிலைகளும் ஐந்து பௌதிகப் பிரிவுகள் ஆனபடியால் அவற்றை
பஞ்சபூதங்கள் என்கிறோம். மேற்கண்ட பூதங்கள் பேரியக்க மண்டலத்தில் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர்,மண் என்று முறையே தோன்றியது . இதே வரிசைக் கிராமமாகத்தான் தாயின் வயிற்றில் பிண்டமான குழந்தையும் வளரும்.
அண்டம் : -------- பிண்டம் : ---------------
குழந்தை :
# ஆகாயம் ---> தலைபாகம் (ஆகாயம்)---> ஆக்ஞை
# காற்று -----> கழுத்து (காற்று)--->  விசுத்தி
# நெருப்பு --------> இருதயம் (நெருப்பு) ---> அநாதகன்
# நீர் --------------> தொப்புள் (நீர்) -----> மணிபூரகம்
# மண் ------------>வயற்றில் (சுக்கில சுரோணித இடம்)---> சுவாதிஷ்டானம்
மேற்கண்ட விளக்கத்தின் மூலம் அண்டத்தின்

செயல்பாடு முறைக்கு ஏற்ப பிண்டத்திலும் செயல்படுகிறது என்பதை ஏளிதாக அறியலாம்.
பரமானுவிலிருந்து தொடங்கி கூட்டம் கூட்டமாக இயங்குகின்ற நிகழ்ச்சிகளின் குணங்களை ஐந்து வகையாகப் பிரிகின்றோம். உணர்வு, ஒலி, ஒளி, சுவை, மணம். இந்த ஐந்து குணங்களும் எப்படித் தோன்றின? என்பதை காணும்போது கவர்ச்சியாக உள்ள அழுத்த இயக்கம் நடைபெறும் இடம் ஆகாயம் என்றும்,ஒலி உண்டாகும் இடத்தை காற்று என்றும், ஒளி உண்டாகும் இடத்தை நெருப்பு என்றும்,சுவை உண்டாகும் இடத்தை நீர் என்றும், மணம் உண்டாகும் இடத்தை மண்
என்றும் அறிந்து கொள்ள வேண்டும். இன்றைய விஞ்ஞானிகள் கூறும் 92 வகையான
மூலக்கூறு(Elements)களும் இவ்வைந்து பூதங்களில் அடங்கியுள்ளன.
எழுவகை பிறப்பு எப்படி உண்டாயிற்று?
பூமி என்பது ஐந்து பூதங்களின் ஈர்ப்புச் சக்தி கொண்ட கோள்.அது ஐந்துவிதமான அணுக்கூட்டத்தின் தொகுப்பு. இந்த அணு தொகுப்பு பூமி அதிலுள்ள அணுக்களுக்குத் தானே முளைக்கின்ற செயல்படுகின்ற ஆற்றல் இல்லை. இது செயல்படுவதற்க்கு சூரியனின் ஒளிசக்தி
ஆற்றல் தேவைப்படுகிறது.சூரியகதிர்களின் வீச்சில் பூமியில் ஜீவராசிகள் உண்டாயின.
எழுவகை பிறப்பு உண்டான விபரமானது.ஜடப்பொருளான பஞ்சபூதம் ஐந்தும் அதோடு சூரியன்,சந்திரன் என்கிற இரண்டும் சேர்ந்து ஏழு ஆற்றல்களும் ஏழுவகையான பிறப்பை உண்டாக்கின. இந்த ஏழுவகைப் பிறப்பு ஒரே மாதிரியாகப் பிறக்காமல் ஏன் மனிதன், தேவர்,
தாவரம்,விலங்கு,ஊர்வன,பறப்பன,நீர்வாழ்வன என்ற வேறுபாடோடு தோன்றியது எப்படி?
என்று ஆய்வு செய்கின்ற போது சூரியனானது தன்னுடைய சூரியக் குடும்பத்தில் உள்ள ஏழு ஆற்றல்களை கிரகித்தது பூமிக்கு அனுப்புவதால் அந்த ஒளிக்கதிர்கள் பூமியில் படும்போது
பூமியில் உள்ள பஞ்சபூதத் தத்துவ அணுக்களின் ஈர்ப்பு தன்மைகேற்ப ஏழுவகையான பிறப்பாக தோன்றியது. இந்த ஏழுவகை பிறப்பானது பஞ்சபூத ஆற்றலும்,சூரியக் குடும்பங்களின் ஆற்றலும் ஒருங்கிணைந்து அந்த அணுக்களின் ஈர்ப்பு தன்மையால் உண்டான தன்மைக்கு ஏற்ப
பிறப்பு பேதங்கள் உண்டாயின. பிறப்பு பேதங்கள் எனப்படுவதுமனிதன்,தேவர், தாவரம்,விலங்கு,ஊர்வன,பறப்பன,நீர்வாழ்வன என்ற பேதம் உண்டாயின.

பிண்டத்தில் உடலின் இயக்கம் எப்படி செயல்படுகிறது? பூமியில் எப்படி நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து சக்திகள் ஒன்றை ஒன்று ஈர்த்து பூமியாகி செயல்படுகிறதோ அதே போல் இந்த உடலில் கீழ்கண்டவாறு பஞ்சபூத சக்திகள் செயல்படுகின்றன.

1) ஆகாயம் காமம், குரோதம், மோகம், மதம், மாச்சர்யம்
2) காற்று இருத்தல், நடத்தல், படுத்தல்,எழுதல் , ஓடல்
3) நெருப்பு பயம், சோம்பல் , பசி , உறக்கம்,புணர்ச்சி
4) நீர் உதிரம், மூளை , உமிழ்நீர், கொழுப்பு,சுக்கிலம்
5) மண் மயிர், தோல், நரம்பு , எலும்பு,தசை


பூமியின் இயக்கத்திற்கு இரவு,பகல் மாறி
மாறி சூரிய சந்திரர்கள் செயல்படுவதால் பூமியின் செயலும், ஜீவராசிகளும்
வாழ்கின்றன . அதே போல மனித உடலான பிண்டத்திலும் இடகலை என்கிற
சூரியகலையும், பிங்கலை என்கிற சந்திர கலையும் மாறி மாறி சுவாசம்
நடைபெறுவதால் மனித பிண்டம் இயங்குகிறது.பூமியில் 12 மணி நேரத்திற்கு ஒருமுறை
இரவும் பகலும் மாறி மாறி செயல்படுவதுபோல் இந்த மனித உடலில் சூரியகலை, சந்திரகலை, சுவாசம், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாறி மாறி செயல்படும். ஆகவே மேற்கண்ட விளக்கத்தின் மூலம் எந்த சூரிய, சந்திரன் ஆற்றல் பூமியை இயக்குகிறதோஅதே ஆற்றல்தான் இந்த மனித உடலையும் இயக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

பிண்டத்தில் (உடலில் ) நவகிரக செயல்பாடு:- பூமி என்பது பிண்டம். பூமிக்கு அண்டம்
சூரியக் குடும்பம் என்கிற நவகோட்கள். அதேபோல் மனித உடலில் தலைக்கு
கீழ்ப்பகுதி பிண்டம் தலைப்பகுதி அண்டமாகிறது. அண்டத்தில் எழு கிரகம் செயல்படுகின்றன.
அதேபோல் பிண்டத்தில் அதாவது தலைப் பகுதியில் ஏழு துவாரமும் செயல்படுகிறது.
கிரகம் என்றால் என்ன ? கிரகம் என்றால் கிரக்கின்ற பொருள் என்பதாகும். நமது மனித உடலில் தலைப்பகுதியில் உள்ள கண் -2 , காது -2 ,மூக்கு துவாரம் -2, வாய் -1 ஆக இந்த ஏழு துவாரங்களும் கிரகிக்கின்ற தன்மையுள்ளவை. கண் காட்சியை கிரகிக்கிறது. வாய் சுவையை
கிரகிக்கிறது. கிரகிக்கின்ற தன்மை அண்டத்தில் உள்ளது போல் பிண்டத்திலும் நடைபெறுவது
நமக்குத் தெளிவாகப் புரிகிறது. அடுத்த நிழல் கிரகம் என்று ஏன் ? ராகு , கேது என்று இரண்டு கிரகத்தை வைத்தார்கள் ? ஆய்வு செய்யும்போது பொது நியதிப் படி ஒரு பொருளை கிரகிக்கின்றபோது மற்றொரு புறம் வெளியே தள்ளுகின்ற செயலும் நடைபெற வேண்டும் என்பது விதி. அந்த அடிபடையிலே தலைப்பகுதியில் கிரகித்து அனுபவித்த அத்தனையும், சுக்கிலம், மலம் , மூலமாக மனித உடல் வெளியேறுகிறது. எதற்காக ராகு என்றால் விஷம் என்று பாம்பின் தலையும் , கேது என்றால் பாம்பின் உடலும் வைத்தார்கள் ? என்ற கேள்வி எழுவதுஇயல்பு. பாம்பின் தலை என்றால் விஷத்தைக் குறிப்பிடுகிறது. மனித உடலில் விஷத்தை என்பது மலத்தை என்பது பொருள். மலத்தை தள்ளும் இடமே விஷமாகும்.
அதைதான் மனித உடலில் எருவாயை ராகு என்றனர். அதேபோல் கேது என்பது பாம்பின்
உடலைக் குறிப்பிட்டர்கள். உடல் என்பது படைப்புக்கு உரியது.படைப்புக்கு காரணமாவது சுக்கிலம் என்பதால் சுக்கில துவாரத்தை மனித உடலில் கேது பாகம் என்றனர். தவிர படைப்பதற்க்கு உரியவையாக இருப்பதால் ஞானகாரகன் என்றும் கூறினர். மேற்சொன்ன சூரியக் குடும்பமாகிய ஏழு கிரகங்களும் வானவில் காட்சியில் ஏழு நிறங்களாகக் காட்சி தந்த அந்த ஏழு நிறங்களே நமது மனித உடலில் ஏழு ஆதார பீடத்திலும் காட்சியளிகிறது. அதேபோல் ஏழு ஆற்றல்களே ஏழு ஆதாரமாக செயல்படுகிறது. இந்த ஏழு சக்திகளும் நமது உடலிலே சப்த தாதுக்களாகச் செயல்படுகின்றன. இப்படி ஒவ்வொரு செயலும் எப்படி நடைபெறுகின்றன என்பதை துல்லியமாக கனகிட்டோமானால் அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் இல்லை. பிண்டத்தில் இல்லாதது அண்டத்தில் இல்லை என்றே தெளிவாக உணரலாம். கர்மவினை என்பது உண்மையா? விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் மூலத்தை,மூலசக்தியை ஆராய எத்தனை எத்தனைக் குழப்பங்கள், கணிப்பு, கருவிகள் என்று தேடுகிறான், தேடுகிறான் தேடிக் கொண்டே இருக்கிறான். ஆனால் சித்தன் அதைக் கண்டுபிடித்து சொல்லி உள்ளான். அதை ஏன் ஏற்க யோசிக்கிறார்கள் விஞ்ஞானிகள்?
சுப்பிரமணியர் ஞானம் என்ற நூலில் ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
என்று இந்த பிரபஞ்சம் முதன் முதலில் (ஜோதி) கனலில் இருந்து கொப்பளித்து வந்த
கனலே. குளிரும்போது அது அணுவாக மாறி இப்பிரபஞ்சம் உண்டாவதற்கு காரணமானது
என்று அன்றே கூறியுள்ளார்கள். ஆக முதலிலே பிறந்தது சத்தம்”. சத்தம் என்றால் ஒலி
என்று பொருள். ஒலி உண்டாகும் இடத்திலே ஒளியும் உண்டாகும். இது இயற்கை.
இப்பிரபஞ்சத் தொடக்கதிற்கு அடிப்படையான முதல் காரணமாக இருப்பது ஒளியும்,
ஒலியும் தான். அந்த அடிப்படையில் பஞ்சபூத பூமியின் இயக்கத்திற்கு காரணமாக இருப்பது சந்திரன், சூரியன் என்கிற ஒளியும், ஒலியும் தான். மனிதனுக்கும் சூரியகலை, சந்திரகலை இயங்குகிறது. அவ்வளவு ஏன் ? இன்றைய விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள்ஜடப்பொருள்கள் இயங்குவதற்கு ஒலி, ஒளி இல்லை என்றால் நடைபெறுமா? நிச்சயமாக நடைபெறாது. எரிபொருளால் ஒலி, ஒளி உண்டாக்கத்தானே இயந்திரங்கள் இயங்குகின்றன.  ஆக ஒலி, ஒளி, அதன் அதிர்வு இம்மூன்றும் சேர்ந்ததுதான் மூலசக்தி. அதைத்தான் சித்தர்கள் (A U M) அ, , ஓம்என்று பெயர் வைத்து, எல்லா இயக்கங்களுக்கும் ஓம் என்ற மூல சக்திதான்காரணம் என்றனர். இது விஞ்ஞானமில்லையா? இது என்ன மூடத்தனமான கொள்கையா ? சிந்தியுங்கள் அன்பர்களே

சிலை வடிப்பவன் எவனொருவன் சிலை முழுவதும் வடித்து சின்னஞ்சிறு உளிகளால் நெளிவு சுளிவு அனைத்தையும் வைத்து சிலை முடிகின்றானோ, அவனால்தான் அந்த
சிலையின் அத்தனை ஆற்றலையும் உணர முடியும், கூறமுடியும். அதே போல இந்த பிரபஞ்சக் கணக்கீட்டை கண்டுபிடித்து பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும், ஜீவராசிகள், தாவரங்கள்அத்தனைக்கும் உரிய ஒப்பீடு தத்துவங்களை அறிந்து, இந்த பிரபஞ்சம் இதனை யுகங்களில்அழியும் என்று எவன் சொல்கிறானோ? அவனே அந்தக் கொள்கையில் முழு உண்மையை அறிந்தவனாவான். ஆகவே பிரபஞ்சத்தை கணக்கிட்டு ஆயுள் நிர்ணயம் செய்து பிரபஞ்சம் அழிவதையும், கணக்கிட்டவன் சித்தன். சித்தர்கள் சொன்ன எந்த உண்மையும் காலத்தால் அழிக்க முடியாதது. சமீபத்தில் கிடைத்த செய்தி. மூளையின் பதிவுகளை கண்டுபிடித்த கருவியானது, மூளையில் இன்னொரு அதிர்வலைகள் இருக்கின்றன என்பதை கருவி காட்டியது, அது என்ன? என்ற கேள்விக்கு, விஞ்ஞானிகள் கூறுவது கர்மவினை அதிர்வு கோடு (Intronce) என்றார்களாம். ஆகவே கர்மவினை என்பதை என்றைக்கு ஒத்துக் கொண்டானோ! அப்போதே சித்தர்கள்சொல்லியதை ஒத்துக் கொண்டாக வேண்டும்! முன்பிறப்பு, அடுத்த பிறப்பு உண்டு என்பதைஒத்துக் கொண்டாக வேண்டும். கர்மவினை என்பதே முற்பிறப்பின் தொடர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஓம்என்ற மூலசக்தியே இந்த பிரபஞ்ச இயக்கப் பேரியக்க மண்டலத்தின் மூலசக்தி என்பதை கோரக்கர் முதல் கொங்கணர், அகத்தியர், ஏன் அனைத்து சித்தர்களும் ஒத்துக் கொள்கிறார்கள். ஓம்தான் மூலசக்தி என்பதில் எந்த சித்தருக்கும், ஞானிகளுக்கும் வேறுபாடு இல்லை. ஏனென்றால் அவர்கள் அத்தனை பேரும் உண்மையை கண்டவர்கள். ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் மத்தியில் ஏன் இத்தனை கருத்து வேறுபாடு? ஆய்வு, ஆய்வுப் பொருள் எல்லாம் என்ற கேள்விக்கு விஞ்ஞான மனிதனுடைய அறிவுக்கு எட்டியவை, அவ்வளவுதான். எத்தனைத்தான் கருவி கரணாதிகள் வைத்துச் செய்தாலும், இவன் அறிவின் எல்லைக் கோட்டின் அளவின் அடிப்படையிலேதான் அந்த கருவிகள் நிர்மாணிக்கப்படும். மனித அறிவுக்கு உண்டான கருவி அதற்கேற்றாற் போல் அந்த அளவிலேயே நமக்கு பதில் சொல்லும். ஆகவே விஞ்ஞானம் முழுமைநிலை பெறவில்லை என்பதே நமக்கு கிடைக்கும் பதில்.பிண்டம் பற்றிய சிந்தனை இது: அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது‘ இவ்வாக்கியத்தின் பொருள் உலகத்தில் எது இருக்கின்றதோ, அது நமது உடலிலும் இருக்கின்றது என்பதே.
அண்டம் -- உலகம்
பிண்டம் -- உடல்
இறை நம்பிக்கையாளர்களின் கூற்றின் படி இறைவன், உலகை பஞ்ச பூதங்களைக் கொண்டு உருவாக்கினான். அறிவியலாளர்களின் கூற்றின் படி, உலகம் பஞ்ச பூதங்களால் உருவாகி இருக்கின்றது. பஞ்ச பூதங்களைக் கொண்டு உலகம் இருக்கின்றது என்பதில் அவர்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அப்பஞ்ச பூதங்கள் எனப்படுபவை,
நீர்
நெருப்பு
காற்று
நிலம்
ஆகாயம் ஆகிய ஐந்தாகும்.
இப்பொழுது அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்கின்றார்களே அது சரியா?
நெருப்பு - நம்முடைய உடல் ஒரு குறிப்பிட்ட அளவு சூட்டுடனேயே இருக்க வேண்டி
இருக்கின்றது. வெப்பம் கூடினாலோ குறைந்தாலோ (காய்ச்சல் அல்லது நோய்கள்)
உடலுக்கு தீங்கு வந்து விடுகின்றது. வெப்பமே இல்லாத உடல் சடலமாக மாறி
விடுகின்றது. எனவே உடல் இயங்க வெப்பம் தேவைப் படுகின்றது. அதாவது நெருப்பு.
அது உடலில் இருக்கின்றது. நீர் - திரவங்கள் நமது உடலில் இருக்கின்றன. அவைகள்
இல்லாது போனால் உடலின் இயக்கம் நின்று விடும்.உடல் பழுதடைந்து அழிந்து விடும். எனவே நீரும் உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாது இருக்கின்றது. காற்று - உடல் இயங்க காற்று மிக முக்கியமானதொன்றாகும். காற்று இல்லையெனில் சுவாசிக்க முடியாது. சுவாசிக்காது உடலால் இயங்க முடியாது. ஆகாயம் - வெற்றிடம். உடலினுள் வெற்றிடங்கள் இருக்கின்றன...சுவாசப் பைகள் போன்றவைகள் உதாரணத்திற்கு. வெற்றிடங்களும் உடலின் இயக்கத்திற்கும் அமைப்பிற்கும் இன்றியமையாது இருக்கின்றன. நிலம் - உலகம் நிலத்தால் அமைந்து இருப்பதனைப் போல மனித உடலும் நிலத்தைப் போலவே அமைந்து இருக்கின்றது.
உயிர் இருக்கும் வரை இயங்கிக் கொண்டு இருக்கும் உடல், உயிர் பிரிந்தப் பின்னர் சில
நாட்களுக்குள் மண்ணோடு மண்ணாகி விடுகின்றது. அதாவது நிலம் நிலத்தைச் சேர்ந்து விடுகின்றது. இதன் மூலம் உலகம் எதனைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கின்றதோ அவற்றை வைத்தே தான் உடலும் வடிவமைக்கப்பட்ட இருக்கின்றது என்பது தெரிகின்றது.
அதாவது, உலகம் - பேருடல் - பெரிய உடல் மனித உடல் - சிற்றுடல் - சிறிய உடல் அண்டத்தில் உள்ள உலகங்கள் எல்லாம் பிண்டத்தில் இருக்கிறது என்று அபிதான சிந்தாமணி பட்டியலிட்டிருக்கிறது அவை :
....................................................................

அண்டத்தில் உள்ளவை எல்லாம் பிண்டத்தில்உண்டு என்பது புராண உண்மைகளுள் ஒன்று.
எவ்வகையெனின்; உள்ளங்கால்- அதலம், கணைக்கால்- விதலம், முழந்தாள் -சுதலம், அதற்கு மேல் -நிதலம், ஊருதலாதலம், குஹ்யம்- ரசாதலம், இடை -பாதாளம், நாபி - பூலோகம், வயிறு -புவர் லோகம், இருதயம்- சுவர்க்கம், தோள் -மகாலோகம், முகம்- ஜனலோகம், நெற்றி-போலோகம், சிரம் - சத்தியலோகம், திரிகோணம் -மேரு, கீழ்க்கோணம் -மந்தரம், அக்கோணத்துக்கு வலப்பக்கம்- கைலை, இடப்பக்கம் -இமயம், மேற்பக்கம் -நிஷதம், தென்பக்கம் -கந்தமாதனம்,
இடக்கையின் உள்ளங்கைகளில் உள்ள ரேகைகள் -வருண பருவதம், எலும்பு -நாவலந் தீவு,
மேஷத் -சாகத்தீவு, தசை- குசத்தீவு, நரம்பு- கிரௌஞ்சத் தீவு, தொக்குச் -சான்மலித் தீவு,
மயிர்த்திரள் -பிலக்ஷத்தீவு, உகிர் புஷ்கரத்தீவு, மூத்திரம்- உப்புக்கடல், நீர்- பாற்கடல், கபம் -சுராக்கடல், மச்சை - நெய்க்கடல், வாய் நீர்- கருப்பங்கடல், இரத்தம் - தயிர்க்கடல், வாயில் உண்டாம் மதுரப்புனல் - சுத்தோதகம், சரீரத்தில் இரண்டு சக்கரங்கள் உள்ளன. அவற்றில் நாதசக்கரத்தில்- சூரியனும், பிந்து சக்கரத்தில்- சந்திரனும் நேத்திரங்களும் -அங்காரகனும், இருதயத்தில் - புதனும், வாக்கில் -குருவும், சுக்கிலத்தில் - சுக்கிரனும், நாபியில் -சனியும், முகத்தில் - ராகுவும், காலில் -கேதுவும் இருக்கின்றனர் - என்கிறது அபிதான சிந்தாமணி.
............................................................
திருமூலர் கருத்து:
வாயுவு மேலே மருவிற்று ஆகாசம் காயுமோர் அண்டத்தில் கண்டகுறிப்பிது
பாயுமோர் ஆயிரத் தெட்டுக்கும் இப்படி பாயுமோர் பிண்டம் பரிந்துநீ பார்த்திடே.


திருமூலர் – 476
இவ்வண்டத்தின் மேல் பூமியும் பூமியின்மேல் நீரும், நீரின்மேல் அக்கினியும்,அக்கினியின்மேல்
வாயுவும்,வாயுவின் மேல் ஆகாசமும் நிற்கிறது. இது ஒரு அண்டத்தை பற்றியதாகும். இதுபோல் ஆயிரத்தெட்டு அண்டங்கள் உள்ளன என்று கூறுகிறார். இனி பிண்ட உற்பத்தியை கேள் என்று பார்த்திடு மாங்கிக்ஷம் பரித்த பிருதிவி வார்த்திடு ரத்தம் வழலையில் நீராச்சு
தோற்றிடு வாய்வு சுழண்டேறிப் புக்கிற்று காற்றோடு தீயுங் கலந்தே விரும்பிற்றே.

திருமூலர் – 477
இவ்வுடலில் உள்ள மாமிசங்கள் பூமியின் தத்துவமாகும், சளி,ரத்தம் நீரின் தத்துவமாகும், உடலை சூடு உண்டாக்குவது அக்கினியின் தத்துவமாகும், நாம் விடும் மூச்சு வாயுவின் தத்துவமாகும். நம் உடலில் அக்கினியானது வாயுவுடன் கூடியே உள்ளே செல்கிறது.கலந்தே செவிக்குள்ளே கண்டு துவாதச மலந்தே இடையின் ரண்டாச்சு வாரிதி குலந்தே சுழிமுனை கூடிற்று மேருவாய்த் தலந்தே பிண்டத்தில் சார்ந்த முறையாச்சே.

திருமூலர் – 478
அதாவது அண்டமான வெளிமண்டலங்கள் பிண்டமான நம் உடலிலும் உள்ளது என்பதை
கூறுகிறார். பூமி மாமிசமாகவும் நீர் இரத்தமாகவும் நெருப்பு நம் உடல் சூடாகவும்.
ஆகாயம் கேட்டுக்கும் சக்தியாகவும். கடல் வியர்வையாகவும், சிறுநீராகவும் மாகாமேரு (பூமியின் மேற்ப்பக்கம்) - கழுமுனையாகவும்


வள்ளலார் கருத்து:
அண்டமும் பிண்டமும் கடவுளும் ! அண்டம் எல்லாம் பிண்டம் எல்லாம் உயிர்கள்
எல்லாம் பொருள்கள் ஆன வெலாம் இடங்கள் எல்லாம் நீக்கமற நிறைந்தே கொண்டவெலாங் கொண்ட வெலாங் கொண்டு கொண்டு மேலும் கொள்வதற்கே இடங் கொடுத்துக் கொண்டு
சலிப்பின்றிக் கண்டமெலாங் கடந்து நின்றே அகண்டமதாய் அதுவுங் கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம் ஒண்டகு சிற்றம்பலத்தே யெல்லாம் வல்லவராய் ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டேகண்டீர் ! கிளக்கின்ற மறை அளவை ஆகமப் பேரளவைக் கிளத்திடு மெய்ச் சாதனமாம் அளவை அறிவு அளவை விளக்கும் இந்த அளவைகளைக் கொண்டு நெடுங்காலம் மேலவர்கள் அளந்து அளந்து மெலிகின்றார் ஆங்கே அளக்கின்ற கருவிகள் எல்லாம் தேய்ந்திடக்கண்டாரேல் அன்றி ஒருவாறேனும் அளவு கண்டார் இலையே
துளக்கமுறு சிற்றறிவால் ஒருவாறு என்று உரைத்தேன் சொன்ன வெளிவரை யேனும் துணித்து
அளக்கப் படுமோ ! நாம் வாழும் அண்டம் போல் பல கோடி அண்டங்கள் உள்ளன .அதில் உயிர்கள், உயிர்கள் வாழும் உடம்புகள்,அதற்கு தேவையான பொருள்கள்,அதற்கு உண்டான இடங்கள்,எல்லாம் இடைவெளி இல்லாமல் நிறைந்து கொண்டும் மேலும் மேலும் விரிந்து கொண்டும்,இடம் கொடுத்துக் கொண்டும் சலிப்பு இல்லாமல் கடந்து நின்றே செயல் பட்டுக் கொண்டே இருக்கும் ஒரு மெய்ப் பொருள் உண்டு.அது பலகோடி அண்டங்களிலும் பலகோடி வெளிகளில் உள்ள எல்லா அணுக்களிலும், உள் இருந்து செயல் பட்டுக் கொண்டு இருக்கின்றது.அது இயங்கும் இயக்கம் இடமானது அருள் பெரு வெளியில்,எல்லா அண்டங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு செயல்படும் சிற்றம்பலம் என்னும் இடத்தில் எல்லாம் வல்லவராய் ,ஓங்கி இடைவிடாது செயலாற்றிக் கொண்டு இருக்கும் தனிக் கடவுள் ஒருவரே ! அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்னும் ஒளிக் கடவுளாகும் என்கிறார் வள்ளலார்

எல்லாம் அவன் கையில் இல்லை எல்லாம் உங்கள் கையிலே இருக்கு.

Wednesday, June 12, 2019

WHO ARE ELIGIBLE TO DONATE BLOOD?

WHO ARE ELIGIBLE TO DONATE BLOOD?



Any healthy adult, both male and female, can donate blood . Men can donate safely once in every three months while women can donate every four months.
 


Good health of the donor must be fully ensured. 

The Universally accepted criteria for donor selection are


Health conditions

The donor should be in a healthy state of mind and body they should fulfill the following criteria:
  • Past one year  - not been treated for Rabies or received Hepatitis B immune globulin.
  • Past six months - not had a tattoo, Ear or skin piercing or acupuncture , not received blood or blood products, no serious illness or major surgery, no contact with a person with hepatitis or yellow jaundice.
  • Past three months - not donated blood or been treated for Malaria.
  • Past one month - had any immunizations.
  • Past 48 hours - taken any antibiotics or any other medication s (Allopathic or Ayurveda or Sidha or homeo).
  • Past 24 hours - taken alcoholic beverages.
  • Past 72 hours - had dental work or taken Aspirin.
  • Present - not suffering from cough, influenza  or sore throat, common cold.
  • Women should not donate  pregnant or breast feeding her child.
  • Women donor should not donate during her menstrual cycles.
  • Free from Diabetes, not suffering from chest pain, heart disease or high BP, Cancer, blood clotting problem or blood disease, unexplained fever, weight loss, fatigue, night sweats, enlarged lymph nodes in armpits, neck or groin, white patches in the mouth etc.
  • Ever had TB, bronchial asthma or allergic disorder, liver disease, kidney disease, fits or fainting, blue or purple spots on the skin or mucous membranes, received human pituitary - growth hormones etc.

Who are the eligible to blood donate? | இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள் யார்?





மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...