Tuesday, March 2, 2021

சுரைக்காயின் நன்மைகள்| BOTTLE GOURD BENIFITS

 

சுரைக்காயின்  நன்மைகள்| BOTTLE GOURD BENIFITS

சுரைக்காய் என்றால் பலரும் இதில் என்ன சத்துகள் இருக்க போகிறது என்றே நினைத்து கொள்கிறார்கள். சுரைக்காயின் பயன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

சிறுநீரக கோளாறு, உடல் சூட்டை குறைக்கும் சுரைக்காய்

சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துகளை கொண்டுள்ளது. நீர்சத்து 96.07 %, இரும்புச் சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற சத்துகளை கொண்டுள்ளது சுரைக்காய்.

சுரைக்காயின் சதைப் பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது.



அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும்.

கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைபகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.

சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும்,வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது.

மனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் பயன்படுத்தலாம்.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும்



சுரைக்காய் ஜூஸ் தயாரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான அமிலம் மட்டுப் படுத்தப்படும் மற்றும் சுரைக்காயில் சக்தி வாய்ந்த சிறுநீர்ப் பெருக்கியாக செயல்படுகிறது.

ஜீரண சக்தியை அதிகரிக்க சுரைக்காய் ஜூஸை குடித்தால் கல்லையும் ஜீரணுக்கும் சக்தியை கொடுக்கும்.

கோடை கால வெப்பம் நமது உடல் சூட்டை அதிகரிப்பதோடு, தோல் சம்பந்தமான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. சுரைக்காய் பக்குவம்  செய்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் தாக்காமல் காப்பதோடு நமது தோலுக்கு மினுமினுப்பையும் கொடுக்கும்.



உடல் எடையை குறைக்க நினைப்பவர்கல் சுரைக்காய் ஜூஸ் அதிக நீர்ச்சத்து கொண்டது. இது கொழுப்புகளைக் குறைக்கும். வளர்சிதை  மாற்றத்தை அதிகரிக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க, சுரைக்காய் மற்றும் தேன் இரண்டையும் கலந்து சாப்பிடலாம். இதனால் ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை தூண்டச் செய்வதால் ஆரோக்கியம் மேம்படும்.

கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம். இரும்பு சத்து, விட்டமின் இருப்பதால், இதனை கர்ப்பிணிகள் எடுத்துக் கொண்டால் கருவின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இவற்றை மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று எடுத்துக் கொள்ளுவது நல்லது.

மன அழுத்தத்தை போக்வதோடு, நரம்புகளில் உண்டாகும் இறுக்கங்களை போக்குகிறது. ஸ்ட்ரெஸ் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்துகிறது.

கல்லீரலில் உண்டாகும் பிரச்சனைகளை சரிப்படுத்தும். வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றும். அல்சர் வராமல் தடுக்கும்.

நல்ல செரிமானம் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளை தீர்க்கும். சுரைக்காயானது அதிக அளவு நார்சத்தினைப் பெற்றுள்ளது. இந்த நார்சத்தானது செரிமானம் நன்கு நடைபெறச் செய்கிறது. மேலும் உடலானது ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.

குடலில் உள்ள நச்சுப்பொருட்களை கழிவாக வெளியேற்றுவதிலும் நார்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இக்காயில் உள்ள நார்சத்து மற்றும் நீர்சத்து மலச்சிக்கல், செரிமானமின்மை, வாயு தொந்தரவு ஆகியவை ஏற்படுவதையும்  தடைசெய்கின்றது



சுரைக்காயானது அதிக அளவு நீர்ச்சத்துடன் குறைந்தளவு எரிசக்தியையும், உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இதனால் இக்காயை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதுடன் குறைந்த அளவு எரிசக்தியும்  கிடைக்கிறது.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இக்காயினை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டு உடல் எடையைக்  குறைப்பதோடு ஆரோக்கியத்தையும் பெறலாம்.

 சுரைக்காயினை வாங்கும்போது மேல்தோலை நகத்தினால் கீறினால் மேல்தோல் எளிதாக வரவேண்டும். இக்காயனது இளம்பச்சை வண்ணத்தில் இளமையானதாக அளவில் பொதுவானதாக இருக்க வேண்டும்.

#BOTTLE_GOURD

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTAHM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan PG Dip in Yoga and Holistic Heath.....

கோடை வெயிலை சமாளிக்க

 

கோடை  வெயிலை  சமாளிக்க



அடிக்கிற வெயில் நம்மை பயமுறுத்தவே செய்கிறது ..

நீர் கடுப்பு

கல் அடைப்பு

மூல கடுப்பு

உடல் அரிப்பு

வேர்க்குரு முதல் பெரிய தோல் நோய்கள்

வைரஸால் வரக்கூடிய அம்மை நோய்கள்

உடல் எரிச்சல்

திடீர் மயக்கம்

உடல் சோர்வு

தூக்கமின்மை

நரம்பு தளர்ச்சி

வயிற்று புண்

மெட்ராஸ் ஐ போன்ற கண் நோய்கள்..


இந்த வெயிலுக்கு காரணம் என்ன ?

மரம் நட மனதில்லாமல் ,செயற்கை குளிரூட்டிகள் பல வைத்து ஏ சி ரூம் இரவு தூங்கி ,ஐஸ் வாட்டர் பருகி.. காசுக்கு தக்கவாறு –கோடை வெயிலின் திடீர் கடைகளின் எசன்ஸ் சர்பத்துகளை அருந்தும் ,விவசாயத்தை அசிங்கம் என்று நினைக்கும் சாராசரி மனிதன் தான் காரணம் .



இயற்கையை நாம் அழிக்க அழிக்க தாக்கத்தை நமக்கு திருப்பி அடிக்க காத்து கொண்டே இருந்து பழி வாங்கி கொண்டிருக்கிறது .

எப்படி சமாளிக்கலாம் ?


கோடை காலத்திற்கேற்ற உணவு வகைகள்

கோடை கால வெயிலுக்கு சின்னம்மை, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். வெயிலின் தாக்கத்தால் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து விடுகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, நீர்க்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் உருவாகும். இதில் இருந்து தப்பிக்க தினசரி, 2½ முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடையில் குழந்தைகளுக்கு தடிமனான ஆடைகளை உடுத்தக் கூடாது.

தோல் வறட்சியானால், சிறுநீர் சரியாக கழிக்க முடியாது. வியர்வை அதிகமாக வரும்போது, வியர்க்குருவும் வரும். இதனால் உடலில் தடிப்பு போன்று இருக்கும். அதை தவிர்க்க, தினமும் காலை, மாலை என இரண்டு முறை குளிக்க வேண்டும்.



வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்த உடன், குளிர்ந்த தண்ணீரை குடிக்க கூடாது. வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தலாம்.

கோடையில் சிறுநீர்க்கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கிய காரணம் ஆகும். உடலில் தண்ணீரின் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி, சிறுநீர் பாதையில் படிகங்களாக படிந்துவிடும்.

இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு. அதிகளவு தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சினை இருக்காது.

வெயில் காலத்தில் இளநீர், மோர், பதநீர், நுங்கு போன்ற குளிர்ச்சியானவற்றை எடுத்துக்கொள்ளலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம் ஆகிய தாதுக்கள் உடலில் உள்ள வெப்பத்தை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்ப நிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தை குறைக்கிறது.



அத்துடன் தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, கிர்ணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறுகளையோ சாப்பிடலாம்

 கண்ட கண்ட எனர்ஜி ட்ரிங்க்சை விட நமது பானாகாரம்  மிகவும் நல்லது

 

ஆயுர்வேத மருத்துவத்தின் படி .

பார்லி, கோதுமை, தேன், மண்பானையில் சேகரித்த நீர், மோர், இளநீர், திராட்சை,மாதுளம், பேரிச்சம்பழம், ஏலக்காய், இலவங்கப்பட்டை..பழங்களில் நுங்கு மிகவும் நல்லது 

தவிர்க்க வேண்டியவை:-

அதிக காரம், எண்ணெய் பொருட்கள், தயிர், புளித்த உணவு வகைகள், குளிர்சாதன பொருட்கள், மதுபானங்கள். கோழி கறி,மைதா உணவுகள் ,எண்ணையில் பொறித்த உணவுகள் ..



தினமும் செய்ய வேண்டியவை..

உடலின் நீர் சக்தி குறையாமல் பார்க்க வேண்டும் –தேவையான அளவு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும் ..

கருங்காலி தண்ணீர் என்று மூலிகை குடிநீர் உடலுக்கு குளிர்ச்சி தரும் தண்ணீரை பருகுதல் நலம்..


மதியம் ஒரு மணி நேரம் படுத்துறங்குதல்

– பகல் உறக்கம்

– இந்த வெயில் காலத்தில் நல்லது...

இரவும் சீக்கிரம் தூங்க வேண்டும்..

வியர்வை அதிகம் வர வைக்கும் எந்த பயிற்சியும் செய்ய கூடாது

தேவை என்றி வெளியில் அலையவே கூடாது

கொளுத்தும் அனல் காற்றை வென்றெடுக்க சொல்லும் ரகசியம்



எண்ணெய் குளியல் நல்லெண்ணெய் தேய்த்து அதன் விதி முறைப்படி வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தால் நாம் அக்னியை வெல்லலாம்.


Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTAHM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan PG Dip in Yoga and Holistic Heath.....

 

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...