Friday, September 28, 2018

HOW TO STRENGTHEN YOUR NERVOUS SYSTEM | நரம்பு மண்டலத்தின் வலிமைக்கு



‘’என் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்’’ 
நரம்பு மண்டலம் மூளையை தலைமையக கொண்டு செயல்படும் நரம்புத் தொகுதி இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. இவை, மைய நரம்பு மண்டலம், (Central nervous system) புற நரம்பு மண்டலம், (Peripheral nervous system), என்பனவாகும். நரம்பு மண்டலம் ஒரு சிக்கலான பிணையம் (complex network), இது தன்னியக்க, மோட்டார் மற்றும் உணர்ச்சி நரம்புகளின் தொகுப்பு. இது உங்கள் உடலின் எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இதய இயக்கம், சுவாசத்தின் சூழற்சி, வெப்ப கட்டுப்பாடு மற்றும் சிரன மண்டலம் செயல்பாடு என முக்கியமான அனைத்தையும் ஒருங்கினைப்பது நரம்பு மண்டலம். நரம்புத் தொகுதியில் சில காரணங்களால் பாதிப்பு எற்படுகின்றது அவைகள் குறைவான இரத்த சுழற்சி (poor blood circulation), அதிர்ச்சி (TRAUMA), அல்லது சுருக்கம் (compression), பிறழ்ச்சி (nerve dysfunction). விஷ தன்மையுள்ள பொருள்கள் மற்றும் மருந்துகளின் பக்கவிளைவு, விட்டமின்,மெக்கனிசம் (Magnesium) போன்ற ஊட்டச்சத்து (nutritional) குறைபாடு. நீண்ட நாள் மனஅழுத்தம், மனகவலை நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றது. இதன் விளைவு இதய அழுத்தம்(Cardiovascular stress) தசை பதற்றம் (Muscle tension), அதிகப்படியான செயல்படுகள் இதனால் நரம்பு செல்கள் சிதைவு, நரம்பு மண்டல சீரழிவிற்க்கு வழிவகுக்கின்றது. உடலில் ஏற்படும் பதிப்புகள் மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி, அளவுக்கு அதிகமான வியர்வை, தசைகள் தளர்ந்துவிடுதல், ஞாபகமறதி, கவனக்குறைபாடு, நரம்புகள் இழுத்தல்(Twitching),உடலில் வலி, உணர்வுவற்று மரத்துபோதல், மற்றும் கைகள்,கால் பாதங்களில் எரிகின்ற உண்ர்வு. நரம்பு மண்டலத்தை வழுப்படுத்த நாம் வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மூலம் தீர்வு காணலாம். நரம்பு மண்டலத்தை வழுப்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கைக்காண தீர்வுகள்

                                                1. மூச்சு பயிற்சி, (Breathing Practice) 



மூச்சு பயிற்சி நரம்பு மண்டலத்தை வழுப்படுத்த மிக எளிமையான முறை.

 1.அமர்ந்த அல்லது மல்லாந்து படுத்தநிலையில் கைகளை உங்கள் வயிற்றில் வைத்துகொள்ளவும். கண்கள் மூடியிருக்கட்டும், கவனம் அடி வயிற்றில்.
2.உங்கள் மூக்கின் வழியாக மெதுவாக காற்றை இழுக்கவும், உங்கள் விரிவடைவது கைகளில் தெரியும் அப்பொழுது நுரையிரல் முழுவதும் காற்று நிரம்புவதை உணரவும். 
3. மூச்சை 3 வினாடிகள் நிறுத்தவும் பின் மூச்சை மெதுவாக வாய் வழியே விடவும் வயிற்று பகுதி பழைய நிலைக்கு வரும். மூச்சை பலவந்தமாக அடக்க வேண்டாம். 
4. மெதுவாக தொடர்ந்து மூச்சை உள்ளே இழுப்பதும், வெளிவிடுவதும் 5 முதல் 10 நிமிடம் செய்யவும். 
5. மேலே கூறியது போல் 2 அல்லது 3 சுற்றுக்கள் செய்யவும். இதன் மூலம் நரம்பு மண்டலம் முழுவதும் இறுக்கமற்ற நிலையை அடைகின்றது. 


2.சூரிய வெளிச்சம்(Sunlight) 



     உடலில் வைட்டமின் டி தயாரிக்க உதவுவதன் மூலம் சூரிய ஒளியை நரம்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்துகிறது. வைட்டமின் டி குறைபாடு மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் நோய்களின் அதிகரிக்கும். மைய நரம்பு மண்டல செயல்பாட்டில் வைட்டமின் D3 வகையை முக்கியமாகக் காட்டியுள்ளது, 
 தினமும் அதிகாலை சூரிய ஒளியில் 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை உலவுதல் முலம் வைட்டமின் டி அளவை உயர்த்திகொள்ளாம். 
 நீங்கள் சில உணவுகளில் வைட்டமின் D ஐ பெறலாம். மீங்கள் (சால்மன் , டுனா), பால், முட்டை மற்றும் தானியங்கள் வைட்டமின் டி நிறைந்தவற்றை காலை உணவில் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் மருத்துவரின் ஆலோசணைப்படி உண்வை எடுத்துக்கொள்ளலாம்.


 3.காலணி இல்லாமல் நடப்பது (Barefoot Walking)




  தினமும் 30 நிமிடங்களுக்கு ஈரமான பூமி, மென்மையான புல் அல்லது மணல் கடற்கரையில் வெறுங்காலுடன் நடைபயிற்சி உங்கள் நரம்பு மண்டலம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பெரிதும் நன்மை அடையலாம். உங்கள் நரம்பு மண்டலத்தை சமப்படுத்த, குறிப்பாக காலையில், புல் மீது வெறுங்காலுடன் நடந்து கொள்ளுங்கள்.



 நீங்கள் வெறுங்காலுடன் நடந்து செல்லும் போது, பூமியின் மேற்பரப்பு எலக்ட்ரான்கள் உடலில் மாற்றப்பட்டு உடலியல் மாற்றங்கள் மற்றும் மேம்பட்ட ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். 
  சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதார பத்திரிகையில் வெளியிடப்பட்ட 2012 ஆய்வில், இதய துடிப்பு மாற்றம், வீக்கம், இதய இயக்கவியல், சிறந்த தூக்கம், தன்னியக்க நரம்பு மண்டல சமநிலை மற்றும் குறைந்த மன அழுத்த நிலை போன்ற முன்னேற்றங்கள் போன்ற உயிரினங்களின் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்துகிறது. 
 #காலணியில்லாமல் நடப்பதை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசணை செய்து கொள்ளகவும் 


 4.யோகா மற்றும் தியானம் (Yoga and Mediation)



    உங்கள் நரம்பு மண்டலத்தை பலப்படுத்த உங்கள் யோகா மற்றும் தியானம் செய்யலாம். யோகாவின் மூன்று உறுப்புகள், ஆசனம் , தியானம் மற்றும் சரியான சுவாச நடைமுறை (பிராணயாமா) ஆகியவற்றை இணைப்பது, புற நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. 
    மேலும் யோகா மனநிலையை உயர்த்துவதற்கும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் ஒட்டுமொத்த உடல் மற்றும் மன நலத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. 
     
   யோகா சில நரம்பு மண்டலத்திற்கு சாதகமானவை என்பவை 


 

     



அதோ முகச் சவானாசாம், 
விபரிதா தன்டாசனாம், 
அதோ முக விருச்சாசனம், 
சேது பந்தா சர்வங்கசானா, 
சர்வங்கசானா, பச்சிமோத்தாசனம், 
விபரிதகரணி மற்றும் ஷவசானா. 
   யோகா முறையானது சரியான விதத்தில் செய்ய வேண்டியது அவசியம் என்பதால், ஒரு யோகாசிரியரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள், பின்னர் அவற்றை தினமும் கடைப்பிடிக்கவும்.


5. மெக்னீசியம் (Magnesium) 



      மெக்னீசியம் ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கு ஒரு முக்கியமான கனிமமாகும். இந்த கனிம குறைபாடு நரம்பு செல்கள் இடையே சிக்னல் பரிமாற்றத்திற்கு சிக்கல் ஏற்படுதுகிறது. மேலும், இது நரம்பு மண்டலத்தைத் தளர்த்தும், மனநிலையை சீராக வைக்கவும் செரோடோனின் உற்பத்திக்கும் உதவுகிறது.  இது தசையின் தளர்வு ஊக்குவிக்கிறது. கீரை, கறுப்பு சாக்லேட், வாழைப்பழங்கள், ஆப்ரிக்காட், பாதாம், அக்ரூட் பருப்புகள், பருப்புகள், பழுப்பு அரிசி மற்றும் பூசணி விதைகள் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். 
       
    மெக்னீசியம் போதியளவு கிடைக்கவில்லை எனில் மருத்துவரை அனுகி மத்திரை வடிவில் (magnesium supplement) எடுத்துக்கொள்ளலாம். 


 6.ஒமேகா-3 (Omega-3) 

     பலவீனமான நரம்பு மண்டலத்தின் அபாயத்தை குறைக்க, ஒமேகா 3-ல் நிறைந்த உணவை சாப்பிடுங்கள். ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் - ஈகோஸ்பேப்டெனொயோனிக் அமிலம் (Eicosapentaenoic acid) மற்றும் டாடோசாஹெக்சேயோனிக் அமிலம் (Docosahexaenoic acid) - மைய நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டுக்கு முக்கியமானவை.

  இந்த கொழுப்பு அமிலங்கள் முறையான நரம்பணு செயல்பாட்டிற்கு தேவையானவை மற்றும் நரம்பு பரவுதலை மேம்படுத்துகின்றன.
   • உங்கள் உணவில் ஒமேகா -3 ல் நிறைந்த உணவுகள் அடங்கும், ஆலி விதை (flax seeds), சியா விதைகள், அக்ரூட் பருப்புகள், மத்தி மீன், சால்மன் மீன், முளைகட்டிய தானியம் (Sprouts), காலிஃபிளவர், மற்றும் கீரை போன்றவை.


 7.எண்ணெய் கொப்பளித்தல் (Oil pulling)


   தினமும் காலை எழுந்த உடன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் (organic) 1tea spoon வாயில் ஊற்றி 10 முதல் 15 நிமிடம் வரை நன்கு கொப்பளிக்கவும். 
எண்ணெய் கொப்பளிப்பதால் நரம்பு செல்களின் சிக்னல் பரிமாற்றத்திற்கு உதவுகின்றது.




Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.🙂

By Nathan PG Dip in Yoga and Holistic Heath.....

Thursday, August 16, 2018

Rivers Inter Link is a Betrayal of Total Nature|நதிகளை இணைப்பது என்பது ஒட்டு மொத்த இயற்கைக்கும் செய்யும் துரோகம்




நதிகளை இணைப்போம் அணைகளில் திறந்துவிடப்படும் நீர் வீணாக கடலுக்கு போய் கலக்குது பாரு'
- இப்படி பேசும் ஆட்கள் ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான்..
ஆற்று நீர் கடலில் கலப்பது 'வேஸ்ட்' என சிலர் எந்த அடிப்படையில் பேசுறாங்க.?


 வேளான் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார்

‘‘நாமும் இயற்கையின் ஒரு அங்கம். நாம் மட்டுமே அதை சொந்தமாக்கிக்கொள்ளும்போது இயற்கையின் தொடர் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கை சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்கு புரிவதில்லை...’’
                             
  

ஆற்று வழி தடத்தில் நீர் காலம் காலமாக ஓடி கொண்டிருக்கிறது  நீரின்றி வறண்டு போகும் போது அங்கு வாழும் மீன், தவளை, நண்டு இன்னும் பிற உயினங்கள் அழிந்து போகும்.
மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வேஸ்ட். ஆனால் மனித சக்திக்கு தொடர்பில்லாத., இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீரை., அது காலம் காலமாக பயணித்து., கடலில் கலந்ததை தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டும் அல்லாமல் அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது என சொல்லி., அது கடலில் கலப்பது வேஸ்ட் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப்போகும் விஷ விதை....,

இந்தியா என்ற ஒரு நாடு.,

தமிழ்நாடு என்றவொரு மாநிலம்.,

காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகள் என எல்லாமே இந்த ஒரு நூறாண்டுகளுக்குள்தான் இருக்கும்...

ஆனால் காவிரி என்ற ஆறு
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதை உடையது. குடகு மலையில் பிறந்து கர்நாடக மேட்டுநிலப்பகுதியை தாண்டி., மேட்டூருக்கு கீழே சமவெளிப்பகுதியில் பரந்து விரிந்து., வண்டல் மண் டெல்டாவில் ஓடி., பூம்புகார் வழியே காலங்காலமாக கடலில் கலந்துவந்தது...

மனித தேவைகளுக்காக காவிரியில் பல அணைகள் கட்டி., காவிரி நீர் கடலுக்கு போகும் அளவு தடுக்கப்பட்டது. அதாவது கடல் குடித்துவந்த நீரை மனிதன் தட்டிப்பறித்துக்கொண்டான்...

இயற்கை சுழற்சியை மனிதன் தடுத்தான். ஆறானது கடலில் கலக்கும். நன்னீர் கடலில் கலக்கும்போது கடல் நீரில் உள்ள உப்பின் அளவு மாறுபடாமல் இருக்கும். அது நடக்காதபோது கடல்நீரில் உப்பின் அளவு அதிகரிக்கும். கடல்வாழ் தாவரங்கள்., மீன்வளங்கள் பாதிக்கப்படும். இயற்கையான சுழற்சி தடைபடுவதால் பருவமழை பெய்யும் காலமும் அளவும் மாறிமாறி வரும். சமயத்தில் மழைப்பொழிவே இருக்காது...

ஒவ்வொரு கடலிலும் சில பிரத்யேகமான கடல்வாழ் உயிரினங்கள் உண்டு. தமிழக கடற்பகுதியில் காணப்படும் சில மீன் இனங்கள் அரேபிய வளைகுடாவில் காணப்படாது. அதற்கு காரணம் அந்தந்த கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தி. கடல் நீர் உப்பின் அடர்த்தியை சீராக வைத்திருக்க உதவுவது அதில் கலக்கும் ஆற்று நீர்...

அதைவிட முக்கியமாக கடற்கரையோர பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் ஊடுருவும்..




சந்தேகம் இருப்பவர்கள் சீனா மஞ்சாளாற்றின் குறுக்கே கட்டிய பிரமாண்டமான அணையையும் அந்த அணையினால் பெருமளவு தண்ணீர்(பொஹாய் கடல்) கடலுக்கு போகாததால் மஞ்சாளாற்று கழிமுக பகுதிகளில் கடல்நீர் ஊடுருவி தற்போது புல்பூண்டுக்கூட முளைக்காத பாலைவனமாக மாறிப்போன நிகழ்வையும் தேடிப்படியுங்கள்...

நல்ல நிலங்கள் பாலைவனமாக மாறியதால் அதை சரிசெய்ய சீனா தற்போது கடுமையாக போராடி வருகிறது. தற்போது அணையில் பாதியளவு மட்டுமே தண்ணீரை வைத்துக்கொண்டு மீதியை கடலுக்கே விட்டுவிடுகிறது...

இதே போல நம் முந்தைய தலைமுறையில் நடந்த நிகழ்விலிருந்தும் நாம் பாடம் கற்கவில்லை. ரஷ்யாவின் ஏரல் கடல் என சொல்லப்பட்ட பிரம்மாண்டமான ஏரி மறைந்துபோன கதை தெரியுமா.?


'ஏரல் கடல்' நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட இந்த பிரம்மாண்டமான ஏரி ஒரு காலத்தில் (1950க்கு முன்பு) உலகில் உள்ள 4 மிகப்பெரிய ஏரிகள் ஒன்று...
இன்று.?


முந்தைய வல்லரசான சோவியத் ரஷ்யா இந்த ஏரிக்கு சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகளை நீர்ப்பாசனத்திற்காக திசை திருப்பியது. இப்போது இந்த ஏரிப்பகுதி மனித வாழ்விடத்திற்கே மிக சிரமமான பகுதியாக மாறியிருக்கிறது...

ஏரல் கடலுக்கு ஏற்பட்ட நிலைமை காவிரி பாயும் கடற்கரையோர மாவட்டங்களுக்கு ஏற்பட இதேபோன்று யோசித்தாலே போதும் 'காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது'என...

காவிரி நீர் என்பது கர்நாடக தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது ஒட்டுமொத்த இயற்கைக்குமானது. நாமும் இயற்கையின் ஒரு அங்கம். நாம் மட்டுமே அதை சொந்தமாக்கிக்கொள்ளும்போது இயற்கையின் தொடர் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கை சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்கு புரிவதில்லை...

மனித தேவை., மனிதனின் சுயநலம் இது இரண்டு மட்டும் காலம் காலமாக இயற்கையின் கட்டமைப்புகளை சிதைத்து வந்திருக்கிறது. இதனால் கடைசியாக பாதிக்கப்படபோவது நாம்தான்...


காவிரி டெல்டாவின் நில அமைப்பு பற்றி தெரியாதவர்கள்தான் நிறைய உளறுகிறார்கள். கர்நாடகாவில் 3 அணைகள் இருக்கிறதே நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறதே என்ற புரிதல் இல்லாத உளறல்தான் அது...

முதலில் ஒரு அணையை கட்ட எந்த மாதிரியான நில அமைப்பு இருக்க வேண்டும் என யோசித்தாலே இதற்கான பதில் கிடைத்திருக்கும்...



பொதுவாக அணைகள் மேட்டுப்பாங்கான நிலத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையில்தான் கட்டப்படும். கர்நாடகாவிலிருக்கும் 3 அணைகளும் நம் மேட்டூர் (மேட்டூர் - பெயரிலேயே அர்த்தம் இருக்கே?) அணையும் அப்படி கட்டப்பட்டதுதான்...

மேட்டூருக்கு கீழே அதுபோன்ற அணைகள் கட்டக்கூடிய நில அமைப்பு கிடையாது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டிணம் போன்றவை சமவெளிப்பகுதிகள். சமவெளியில் அணைகளை கட்டமுடியாது. ஏரி, குளங்களைதான் அமைக்க முடியும். அதனால்தான் நம் முன்னோர்கள் நிறைய ஏரி, குளங்களை காவிரி டெல்டா பகுதியில் வெட்டினார்கள்...

சிலர் வந்து காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா என கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்காதவர்களாகத்தான் இருப்பார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரை தேக்கி வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது. காவிரியில் வரும் நீரை தடுத்து உள்ளாறு(கொள்ளிடம்)., காவிரி., வெண்ணாறு., புது ஆறு என நான்காகப் பிரித்து அனுப்பும் பிரம்மாண்டமான மதகுதான் கல்லணை...



அக்காலத்தில் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து பயிர்களை பாதுகாக்க கட்டப்பட்டதுதான் கல்லணை. காவிரியில் வெள்ளம் வரும்போது அது கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படும். கொள்ளிடம் வெள்ள நீர் எவ்வளவு போனாலும் தாங்கும். அந்த வெள்ளநீரை பயன்படுத்திக்கொள்ள வெட்டப்பட்டதுதான் கடலூர் மாவட்டத்திலிருக்கும் வீராணம் ஏரி...

காவிரியில் கர்நாடகா கட்டியிருக்கும் 3 அணைகளின் மொத்த கொள்ளளவு 112 டி.எம்.சி. (ஓரு டிஎம்சி என்பது ஆயிரம் மில்லியன் கியூபிக் ஃபீட் அதை சுருக்கி டிஎம்சி எங்கிறார்கள். தெளிவாக புரியும்படி சொன்னால் 100 கோடி கன அடி நீர். ஒரு கனஅடி நீர் என்பது 28.3 லிட்டர். ஒரு டிஎம்சிக்கு 2830 கோடி லிட்டர்.) தமிழ்நாட்டிலிருக்கும் மேட்டூர் அணையின் கொள்ளளவு மட்டுமே 93 டி.எம்.சி.

நமக்கு மேட்டூர் அணை மட்டுமே போதும். ஏனென்றால் மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவதற்கான தண்ணீரே நமக்கு கிடைப்பதில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்திலிருந்து (1934) தற்போதுவரை வெறும் 33 முறை மட்டுமே அணையின் முழு கொள்ளளவான 120 அடிவரை நீர் நிரம்பியிருக்கிறது...

நாம் செய்யவேண்டியது இருக்கக்கூடிய நீர்நிலைகளை பாதுகாத்து.,
ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கி., நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியது மட்டும்தான். மழைநீர்தான் நமக்கான நீர்., ஆற்றுநீர் நமக்கும் கடலுக்குமான நீர்...
இனி யாராவது ஆற்றுநீர் வீணாகப்போய் கடலில் கலக்கிறதே என சொன்னால்., அவர்களின் அறியாமையை நினைத்து பரிதாபப்படுங்கள்...


"எனவே நதிகளை இணைப்பது நம் அடுத்த தலைமுறைக்கு செய்யும் துரோகம்”  
''ஒட்டு மொத்த இயற்கைக்கும் செய்யும் துரோகம்''

"மரம் வளர்ப்பதும் மற்றும் நீர் நிலைகளை பாதுகாப்பதும் அவசியம்’’

''மரம் வளர்ப்பதே உண்மையான நதி நீர் இணைப்பு. கங்கை நீர் ஆவியாகி காவிரியில் கலக்கும்''


Tuesday, July 31, 2018

முளைப்பாரி திருவிழா (Seed Sowing Festival)



ஆடி மாதம் வந்தால் மாரி அம்மன் கோயில்களில் கொண்டாடும் முக்கியமான திருவிழா முளைப்பாரி திருவிழா இன்றும் கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளிம் கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும்.

மாரி என்றால் மழை என பொருள் மழையை கொண்டாடுவதால் மாரியம்மன் திருவிழா என அழைக்கபடுகின்றது எனவே முளைப்பாரியாய் மாரியம்மனாக பார்ப்பார்கள்.

முளைப்பாரி வரலாற்று சான்று கோவலன், கண்ணகி திருமணவிழாவில் பெண்கள் முளைப்பாரி (முளைப்பாலிகை என குறிப்பிடுகிறது) எடுத்து வந்தாக சிலப்பதிகாரம் கூறுகிறாது. 



விழா துவங்குபோது வேப்பிலை காப்பு கட்டுவர். எதிர்மறை சக்திகளிடமிருந்து (Negative Energy) பாதுகாப்பதாக நம்பிக்கை. அதே நேரத்தில் ஊரில் திருவிழா விழா எடுக்கும் போது வேறு வேலையாக வெளியூர் சென்றால் ஊரில் விழா தொடர்பான வேலை ஆட்கள் தேவை. எனவே கொடித்தடை என கூறுவர்.


இன்று நாம் விவசாயம் செய்ய விதையை ஆய்வுக்கு ( Seed Testing Lab) கொண்டு சென்றால் இந்த விதை எந்த மண்ணில் எவ்வளவு மகசூல் தரும் என ஆய்வு செய்து கூறிவிடுவர்.


நம் முன்னோர்கள் ஆய்வுக்கூடம் இல்லாத காலத்தில் விதையின் தன்மை அறிய முந்தைய ஆண்டு சேமித்த தானியம், இன்னும் பிற பயறு வகைகளை விவசாயம் பற்றி நன்கு அறிந்த வயது முதிர்ந்தவர்களிடம் கொடுத்துவிடுவர். அவர்கள் ஊருக்கு பொதுவான இடத்தில் காற்று மற்றும் வெளிச்சம் புகாத குடில் அமைத்து அங்கு சிறு சிறு மண் சட்டிகளில் இந்த விதைகளை தரம் பிரித்து வளர்த்து வருவர்.


தாவரங்கள் தன் உணவை பச்சையத்தை (Chlorophyll) கொண்டு சூரிய ஒளிச்சேர்க்கை மூலம் தயாரிக்கும், அவ்வாறு சூரிய வெளிச்சம் இல்லாமல் வளரும் விதை தரமானது.


தினமும் சூரிய மறைவுக்குபின் வெளியே எடுத்து பெண்கள் அதனை சுற்றி கும்மி கொட்டுவர். பின் இரவே இருளில் வைத்துவிடுவர். பத்து நாட்கள் பராமரித்து எது விளைச்சலுக்கு ஏற்றது என அறிந்தபின் அவ்வாறு வளர்த்த தாவரங்களை எடுத்து ஊர் முழுவதும் சுற்றி வந்து நீர் நிலைகளில் கரைத்துவிடுவர்.


                

மறுநாள் அனைவரும் மஞ்சள் பொடியை நீரில் கரைத்து ஒருவர் மீது ஒருவர் ஊற்றி விளையாடுவர். இது மகிழ்ச்சிக்காக செய்வதாக இருந்தாலும் இதன் அறிவியல் பின்புலம் விழா எனும்போது பலர் ஒரே இடத்தில் ஒன்று கூடும் போது எச்சில், வேர்வை, மற்றும் பல கழிவுகள் சேரும் போது தொற்று எற்பட வாய்ப்புகள் அதிகம் மஞ்சள் நல்ல கிருமிநாசினியாக (Antibiotic) செயல் படும்.




அடுத்து பொது விருந்து நடைபெறும் இதில் ஊரில் உள்ள அனைவரும் சேர்ந்து உணவருந்துவர். இதனால் சமத்துவம் வளரும்.

இவ்வாறு ஒவ்வொரு செயலையும் நம் முன்னோர்கள் ஆய்ந்து செய்தனர் இன்று நாம் அதை விடுத்து அர்த்தமில்லாமல் தெருவுக்கு தெரு முளைப்பாரி விழா என கொண்டாடி வருகின்றனர். இங்கு வசூல் செய்யும் பணம் முறையாக செலவு செய்யப்படுவதில்லை மேலும் பல பிரச்சனைகலளை உருவாக்கி வருகின்றனர்.


விவசாயப் பின்னணியில்லா நகர்ப்புற பகுதியில் விழா எடுக்கும் போது வசூல் செய்யும் பணத்தை புறநகர் பகுதியில் மரம் நடலாம், அல்லது அருகில் உள்ள கிராமத்திற்கு விவசாயத்திற்கு தேவையான பொருள் உதவி செய்யலாம்

இதனால் மழை வளம் பெறலாம். இது போன்ற மாரி திருவிழாவும் கொண்டாடலாம் அனைவரும் மகிழ்ச்சியாக. 


மரம் வளர்ப்பதே உண்மையான நதி நீர் இணைப்பு. 
கங்கை நீர் ஆவியாகி காவிரியில் கலக்கும்.
                                         -வேளான் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார்

             மரம் வளர்ப்போம், மழை பெருவோம்.

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...