Wednesday, February 24, 2021

 

முட்டைக்கோஸின் பயன்கள்



கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்.

அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்

உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.



வயிற்று புண்

முட்டைகோஸில் வயிற்றுப்புண்ணை ஆற்ற கூடிய ஆற்றல் கொண்டது. இந்த முட்டைகோஸ் சாற்றை 3 அவுன்ஸ் வீதம், நான்கு முறை குடித்து வந்தால் வயிற்று புண் குணமாகும். இதில் வயிற்றுப்புண்ணை குணப்படுத்தக் கூடிய குளுட்டமைல் உள்ளதால், வயிற்றுப்புண்ணால் அவதிப்படுபவர்கள் இதனை சாப்பிட்டால், குணம் பெறலாம்.

முட்டைகோஸில் புற்றுநோய் செல்களை அழிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. மேலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

நமது உடலில் நோய் எதுவும் ஏற்படாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமான ஒன்று. முட்டைகோஸை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, நோய் அண்டாமல் நமது உடலை பாதுகாக்கலாம்.



ரத்த அழுத்தம்:

மனிதர்கள் அனைவருக்குமே அவர்களின் வயதை பொறுத்து ரத்த அழுத்தம் மாறுபடுகிறது. 30 வயதை கடந்த பலரையும் உயர் ரத்த அழுத்தம் மற்றும், குறைந்த ரத்த அழுத்தம் நோய் இன்றைய காலங்களில் பாதிக்கிறது. இப்பாதிப்பு ஏற்பட்டவர்கள் முட்டைகோஸை தங்களின் உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த குறைபாடுகள் வெகு விரைவில் நீங்கும்.



நீரிழிவு

மனித உடலில் எப்பொதும் நீர் சத்து ஒரு குறிப்பிட்ட அளவில் இருப்பது அவசியம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுலபத்தில் நீர் சத்தையும், உடல் பலத்தையும், ரத்தத்தில் அவசியமான சத்துக்களையும் இழந்து விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு முட்டைகோஸ் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் முட்டைகோஸ் அதிகம் சாப்பிட்டால் மேற்கூறிய பிரச்சனைகள் சுலபத்தில் தீரும்.



நச்சுகழிவுகள்

இன்றைய காலங்களில் நாம் சாப்பிடும் எத்தகைய உணவுகளும் ஏதேனும் ஒரு வகையில் நச்சு தன்மை கொண்டதாகவே இருக்கிறது. நாம் உண்ணும் உணவுகளில் உள்ள பல நச்சுகழிவு பொருட்கள் நமது உள்ளுறுப்புகளில் சேர்ந்து கொள்கின்றன. வாரத்திற்கு ஒரு மூன்று முறையாவது முட்டைகோஸ் உணவுகளை நாம் சாப்பிடுவதன் மூலம் நமது உடலிலுள்ள நச்சுகழிவுகள் நீங்கும்.

முட்டைகோஸை நாம் சாப்பிடுவதன் மூலம் மூட்டுவலி, கால் வீக்கம்,கால் குடைச்சல்,கால் சுளுக்கு,முட்டி தேய்மானம், போன்ற பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது





மிகினும் குறையினும் நோய்செய்யும்

அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்

Our You tube channel    https://www.youtube.com/channel/UC5JnF35lejkpAt2ogpYyfHg

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTAHM

Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.🙂

By Nathan PG Dip in Yoga and Holistic Heath.....




Tuesday, February 23, 2021

 

கொய்யா பழத்தின் (GUAVA FRUIT) நன்மைகள்





மற்ற வகையான உணவுகளை சாப்பிட்டு உயிர் வாழும் உயிரங்களை விட, இயற்கை உணவுகளை அதிகம் உண்ணும் விலங்குகள், மனிதர்கள் அதிகம் ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன இயற்கை உணவுகளில் ஒன்று தான் பழங்கள் மனிதர்கள் உண்பதற்கேற்ற சத்துக்கள் நிறைந்த பழவகைகள் ஏராளம் இருக்கின்றன. வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் விளையும் கொய்யா பழம் பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு பழ வகையாகும். கொய்யா பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.



இப்பொழுது வாழ்கை முறை காரணமாக அனைவருக்கும் மலசிக்கல் பிரச்சினை ஏற்படுகின்றதுஇதற்க்கு முக்கிய கரணம் ஆரோக்கியமற்ற உணவு முறைகள் மற்றும் நார்சத்து குறைபாடு ஆகும். கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதனை தினமும் உட்கொண்டு வந்தால் உங்களுக்கு மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் மேலும் உங்களின் குடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும்.

நோயின் ஆரம்பமே மலச்சிக்கல் தான். அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்து தான் தொடங்கும். நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல் நீங்கும்.





கொய்யா பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதனை தினமும் நீங்கள் எடுத்துக்கொண்டு வரும்போது உங்களுக்கு இரத்த சோகை போன்ற பிரச்சினை வராமல் காக்கும். மேலும் உங்கள் உடலில் இரத்த உற்பத்தியினை அதிகரிக்கும்.



கொய்யாப்பழத்தின் தோல் பகுதியிலுள்ள வைட்டமின் ‘சி’ பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்களைப் போக்க வல்லது. பழுக்காத கொய்யாக்காய் வயிற்றுக் கடுப்பையும், வயிற்றோட்டத்தையும் தடுக்கும்.

கொய்யா பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இதனை தினமும் உண்டு வரும்போது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கொய்யாப்பழத்தின் தோல் பகுதியிலுள்ள வைட்டமின் ‘சி’ பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்களைப் போக்க வல்லது. பழுக்காத கொய்யாக்காய் வயிற்றுக் கடுப்பையும், வயிற்றோட்டத்தையும் தடுக்கும்.

குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும். தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகின்றன. இதைப் போக்க, உணவுக்குப் பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள் கொய்யாப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் மூல நோய் தீர்ந்துவிடும். கொய்யா கோடைக் காலத்தில்தான் அதிகமாக விளையும்.

தற்போது உயிரித் தொழில்நுட்ப முறை தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகின்றன. இதைப் போக்க உணவுக்குப் பின் கொய்யாப் உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடலின் பித்தத் தன்மை மாறுபடும். இதனால் உடல்நல பாதிப்பும் ஏற்படும்.



இதைத் தவிர்த்து, கல்லீரலைப் பலப்படுத்த அடிக்கடி கொய்யாப்பழத்தை உண்பது நல்லது. சர்க்கரை நோய் ஏற்பட்டாலே, அதைச் சாப்பிடக்கூடாது, இதைச் சாப்பிடக் கூடாது என்று அநேக கட்டுப்பாடுகளை விதிப்பார்கள்ஆனால் நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.

 ரத்தத்தில் இரும்புச் சத்து குறையும்போது ரத்தசோகை ஏற்படுகிறது. இந்தியக் குழந்தைகளில், அதுவும் பெண் குழந்தைகளில் 63.8 சதவீதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இக்குறையை பழங்களும், கீரைகளும் நிவர்த்தி செய்யும். குறிப்பாக கொய்யாப்பழம், ரத்த சோகையை மாற்றும் தன்மை கொண்டது. குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் சி’ சத்து கொய்யாப் பழத்தில் அதிகம் உள்ளது.

குழந்தைகளுக்கு அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்துவந்தால் அவர்களின் எலும்புகள் பலப்படும். பற்கள் பலமடையும். அறிவுத்திறன் அதிகரிக்கும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும்.

நரம்புகளைப் பலப்படுத்தி, உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். அதிக ரத்த அழுத்தம், அதிக கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொலஸ்ட்ரால் குறையும். இதயப் படபடப்பையும் கொய்யா போக்கும்.



கொய்யா மரத்தின் பட்டை மற்றும் வேரைக் கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம், சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கைத் தடை செய்யும்.

இலையை மட்டும் கஷாயமாக செய்து அதை வாயிலிட்டுக் கொப்பளித்தால் ஈறு வீக்கம் கட்டுப்படும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மலக்குடல் பிதுக்கத்திற்கு கொய்யா இலையை அரைத்துப் பற்றுப் போட நல்ல பலன் கிடைக்கும்

மிகினும் குறையினும் நோய்செய்யும்

அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்   


Our You tube channel    https://www.youtube.com/channel/UC5JnF35lejkpAt2ogpYyfHg


Our Facebook https://www.facebook.com/A2ZAMUTAHM



மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...