Tuesday, March 23, 2021

பச்சைப் பட்டாணியின் நன்மை GREEN PEAS BENEFITS

 பச்சைப் பட்டாணியின் நன்மை


அசைவ உணவை சாப்பிடாதவர்கள் தங்கள் உடலுக்கு தேவையான சத்துகளை தாவர உணவுகளிலிருந்தும் பெற முடியும். காய்கள், பழங்கள், பருப்பு வகைகள் என ஏகப்பட்ட உணவு வகைகள் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இருக்கின்றன. அந்த வகையில் மனிதர்களுக்கு தேவையான பல சத்துக்களை அளிக்கும் உணவாக பச்சை பட்டாணி இருக்கிறது. பச்சை பட்டாணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்

மனிதனின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு பெரிதும் உதவும் தானியங்களில் ஒன்றுதான் பட்டாணி.

ஆராச்சியாளர்களின் ஆராய்ச்சியின் படி, பச்சை பட்டணியில் உள்ள Coumestrol எனப்படும் Phytonutrients புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் ஒன்றாகும்.

இதனை நாள்தோறும் உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்று புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக அமையும்.



என்னென்ன சத்துக்கள் உள்ளன?

பச்சை பட்டாணியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. 8 விதமான உயிர்சத்துக்களும், 6 விதமான தாது உப்புகளும் மற்றும் நார்சத்து, புரதம் அதிகம் உள்ளது. புரதம் அதிகளவாக 15.5 முதல் 39.7 சதவீதம் வரை காணப்பசத்துக்கள்

100 கிராம் பச்சை பட்டாணியில் உள்ள சத்துக்கள்

நீர்ச்சத்து 75.6 சதவீதம், 

புரதம் 6.2 கிராம், 

கொழுப்புச்சத்து 0.4 கிராம், 

கார்போஹைட்ரேட் 16.9 கிராம், 

நார்சத்து 2.4 கிராம், 

கால்சியம் 32 மில்லி கிராம், 

பாஸ்பரஸ் 102 மி.கிராம், 

இரும்புசத்து 1.2 மி.கிராம், 

சோடியம் 6 மி.கிராம், 

பொட்டாசியம் 350 மி.கிராம், 

பீட்டாகரோட்டீன் 450 மி.கிராம், 

தையாமின் 34 மி.கிராம்,

ரிபோளேவின் 16 மி.கிராம், 

நியாசின் 2.7 மி.கிராம், 

அஸ்கார்பிக் அமிலம் 26 மி.கிராம், 

விட்டமின்ஏ 680 ஐயு.

மருத்துவ பயன்கள்

பச்சை பட்டாணியில் நிகோடினிக் அமிலம்(Nicotinic Acid) என்ற வேதிப்பொருள் இருப்பதால் இது ரத்தத்தில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருந்தால் அதை குறைக்கிறது. 

பச்சை பட்டாணியில் லேக்டின்(Lactin) என்ற புரதப்பொருள் இருப்பதால் ரத்த சிவப்பு அணுக்கள் உறைந்து ரத்தக் கட்டுகளாக மாறுவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கலாம்.

பச்சை பட்டாணியில் அதிகளவு விட்டமின் சி இருப்பதால் எல்லா வகையான புற்று நோய்களால் நாம் பாதிக்காதவாறு பாதுகாக்கிறது பச்சை பட்டாணியில் கரையாத நார்சத்து இருப்பதால், கொழுப்பு சத்தை குறைத்து இதயநோய், பக்கவாதம் வராமல் தடுக்கிறது.

பச்சை பட்டாணியில் லுட்டின்(Lutin) என்ற கரோட்டீனாய்டு(carotenoid) இருப்பதால் வயதானவர்களுக்கு கண்ணில் ஏற்படு புரை வளர்தலை குறைக்கிறது

பச்சை பட்டாணியில் அதிகளவு இரும்புசத்து இருப்பதால் நம் உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகையை போக்கி உடல் சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், கவனக்குறைவு ஆகியவற்றை போக்குகிறது

விட்டமின் கே இருப்பதால் எலும்புகளை பலப்படுத்தி, பாதுகாக்கிறது

பச்சை பட்டாணியில் விட்டமின் சி இருப்பதால் ரத்த புற்று, நுரையீரல் புற்று, ஆசனவாய் புற்று போன்ற எல்லா புற்று நோய் வராமல் தடுக்கிறது.

பச்சைபட்டாணியில் உள்ள விட்டமின் பி6 ரத்த குழாய் சுவர் சுருங்குதலைத் தடுத்து, இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது

பச்சைபட்டாணியில் விட்டமின் பி6, இரும்பு சத்து இருக்கிறது. இவை இரண்டுமே ஹோமோசிஸ்டைன்(Homocysteine) என்ற ஆபத்தை விளைவிக்கும் வேதிப் பொருள் உடலில் உருவாவதை தடுக்கிறது.

இந்த வேதிப்பொருள் தான் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் எலும்பு பலம் குன்றல் ஏற்பட காரணமான மூலப்பொருள்

எனவே மாதவிடாய் நின்ற பெண்கள், வயதானவர்கள் பச்சை பட்டாணியை உட்கொண்டால் எலம்பு பலமடையும். மூட்டு வலி, எலும்பு முறிவு வராமல் தடுக்கலாம்.



கேரட் பட்டாணி சாதம்

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் சூடாக்கி, கிராம்பு, பிரியாணி இலை, பட்டை வதக்கவும்.

வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதில் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும். கேரட் துருவல், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

கேரட் நன்கு வேகும் வரை மூடி வைக்கவும். பிறகு அதில் பட்டாணி சேர்க்கவும். தயாராக உள்ள சாதத்தை சேர்த்து மெதுவாகக் கிளறவும். தீ குறைத்து, 5 நிமிடம் கிளறவும். ரெய்த்தாவுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.

பயன்கள்

கேரட் கண்களுக்கு குளிர்சியை தரும் உணவாகும், மேலும் இதனை பட்டாணியுடன் சேர்த்து சேர்த்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இரண்டிலும் கால்சியம் சி நிறைந்துள்ளதால் வளரும் குழந்தைக்கு இந்த சாதத்தை கொடுப்பதன் மூலம் உடல் வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி ஏற்படும்.

பச்சை பட்டாணியை வேகவைத்து உப்பு, மிளகு சேர்த்து வாரம் 2 முறை வளரும் குழந்தைகளுக்கு தர உடல், மனம் பலப்பட்டு ஆரோக்கியமாக காணப்படுவர்

பச்சை பட்டாணி, கேரட், புதினா, பீன்ஸ் சேர்த்து வேகவைத்து உப்பு சேர்த்து சூப்பாக சிற்றுண்டிக்கு பதில் குழந்தைகளுக்குத் தரலாம்.

மனிதர்களின் உடலுக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது எலும்புகள். அவை ஒரு மனிதனுக்கு பலமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியம். பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்து அதிகம் நிறைந்துள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் மாற்றும் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.

சருமம்

மனிதர்களுக்கு இளமை காலங்களில் தோலில் பளபளப்பும், இளமை தன்மையும் அதிகம் இருக்கும். வயதுஏறிக்கொண்டு செல்லும் காலத்தில் தோலில் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும். இந்நிலைக்கு முக்கிய காரணம் நமது உணவில் மக்னீசியம் சத்து குறைவதே ஆகும். பச்சை பட்டாணியில் இந்த மக்னீசியம் அதிகமுள்ளது. பட்டாணி தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோல் சுருக்கங்கள் ஏற்படுவது தள்ளிப்போகிறது.

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் நார்ச்சத்து இருப்பது அவசியமாகும். இந்த நார்ச்சத்து தான் நமது உணவு எளிதில் செரிமானம் ஆகி மலச்சிக்கல், வயிறு கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பச்சை பட்டாணி சாப்பிடுபவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைப்பதால் செரிமான கோளாறுகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கிறது.

கொலஸ்ட்ரால் என்பது உணவில் இருக்கும் தீமையான கொழுப்புகள் உடலில் ரத்தத்தில் படிந்து எதிர்காலத்தில் இதயம் சம்பந்தமான கோளாறுகளை ஏற்படுத்துகிறது. பச்சை பட்டாணியில் பீட்டா குலுக்கன் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது. உடல் எடை அதிகமாகாமல் தடுக்கிறது.

நமது ரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்கள் குறைகிற போது நமக்கு ரத்த சோகை ஏற்படுகிறது இதை போக்க சத்து நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடுவது அவசியம். பச்சை பட்டாணியில் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்களின் பெருக்கத்தை தூண்டும் சத்துகள் அதிகமுள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை நீங்கும்.

நமது உடல் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமோ, அதே அளவிற்கு மனநலமும் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். மேலை நாடுகளில் நடைபெற்ற ஆய்வுகளில் தினமும் 100 கிராம் பச்சை பட்டாணி சாப்பிட்டு வந்த மனநலம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மனநிலை மற்றும் உடல் நிலையில் சிறந்த குணம் ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....

Monday, March 22, 2021

மார்ச் 31க்குள் இதை கட்டாயம் செய்யுங்க..!

 மார்ச் 31க்குள் இதை கட்டாயம் செய்யுங்க..!



உங்களது பான் எண்ணை ஆதாருடன் இணைத்து விட்டீர்களா? அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்கானது அல்ல.

ஒரு வேளை இதுவரை இன்னும் லிங்க் செய்யவில்லை எனில் இது கட்டாயம் உங்களுக்கான செய்தி தான்.

உங்கள் பான் நம்பரை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடுவானது வரும் மார்ச் 31ம் தேதியோடு முடிவடைகிறது.


மீண்டும் அவகாசம் கிடைக்குமா?

இதற்கு முன்பே வருமானது வரித்துறையானது கெடு விதித்திருந்தது? உங்கள் பான் நம்பரை ஆதாருடன் இணைக்காவிட்டால், அது செல்லாமல் போகும். கூட 10,000 ரூபாய் அபாதாரமும் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால் இன்று வரை பலர் இணைக்கவில்லை என்பதே உண்மை. ஏற்கனவே பல முறை போதிய அவகாசம் கொடுத்த நிலையில் மீண்டும் அவகாசம் கிடைக்குமா? என்பது சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகிறது.

பான் செல்லாமல் போக வாய்ப்பு

அப்படி இருக்கையில் உங்கள் பான் எண் செல்லாமல் போக வாய்ப்புள்ளது. செயலற்ற பான் எண்ணை வைத்திருப்பதும், இல்லாமல் இருப்பதும் ஒன்று தான் என கூறியுள்ள வருமான வரித்துறை. அதன் பின்பு மீண்டும் நீங்கள் பான் எண்ணுடன் இணைக்கப்பட்ட பின்பு தான், பான் எண் உயிர் பெறும். சரி ஆதார பான் எண்ணுடன் எப்படி இணைப்பது வாருங்கள் பார்க்கலாம்.

மொபைல் எஸ்எம்எஸ் மூலம் இணைக்கலாம்

ஆதார் எண் பான் எண் ஆகியவற்றை இணைக்க இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று எஸ்எம்எஸ் மூலம் இணைத்துக் கொள்ளலாம். 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைத்து கொள்ளலாம். சரி இதை எப்படி செய்ய வேண்டும். உங்கள் மொபைல் எண்ணில் இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண் 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து மேற்கூறிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

இணையம் மூலமாகவும் இணைத்துக் கொள்ளலாம் இல்லையெனில் http://incometaxindiafiling.gov.in என்ற வருமான வரித்துறையின் வலைதளம் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணை[ப்பது வாருங்கள் பார்க்கலாம். முதலில் ஆன்லைன் வழியாக வருமான வரித்துறையின் வலைதளத்திற்கு செல்ல வேண்டும்.

1) அடுத்து வலைதளத்தில் இடது பக்கத்தில் உள்ள ஆதார் லிங்க் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்

2) அதன் பின்பு உங்களின் பான் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கும். அதில் உங்கள் பெயரினை பிழையில்லாமல் பதிவிட வேண்டும்.

3) இதனை அடுத்து உங்கள் பிறந்த தேதி உள்ள ஒரு சிறிய டிக் பாக்ஸ் இருக்கும் அதனை க்ளிக் செய்ய வேண்டும்.

4) இதன் பின்பு அங்குள்ள captcha எண்ணினை பதிவு செய்து க்ளிக் செய்தால், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிக்கு ஒரு ஓடிபி வரும். இதனை பதிவு செய்த பின்னர் கடைசியாக லிங்க் ஆதார் என்பதை க்ளிக் செய்தல் வேண்டும்.


படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTAHM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....


மாதுளை பழத்தின் நன்மைகள் | POMEGRANATE BENEFITS

மாதுளை பழத்தின் நன்மைகள்



மாதுளை பல நோய்களைக் கட்டுப் படுத்தி உடலை வளமாக்க பயன்படுகின்றது. மாதுளையில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுபவை.

பூ, பழத்தோல், பட்டை ஆகியவை துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பழம் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பூ, பழத் தோல் ஆகியவை இரத்தப் போக்கைக் கட்டுப் படுத்தும். துவர்ப்புச் சுவையைக் கூட்டும். பழம் குளிர்ச்சி உண்டாக்கும். பூ பசியைத் தூண்டும். மரப்பட்டை வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். விதை ஆண்மையைப் பெருக்கும். குடல் புழுக்களைக் கொல்லும்.

மயக்கம், தலைசுற்றல், தொண்டை வறட்சி, புளிச்ச‌யேப்பம், வாந்தி தீர

மாதுளம் பழச்சாறு 100 மிலி அளவு காலையிலும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். பிரயாணத்தின் போது சிலருக்கு வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படலாம். அப்போதும் இதனை சாப்பிட்டு பயன் பெறலாம்.

மாதுளம் பழச் சாறு குடிப்பது கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி உடனே நிற்க பயன் விளைவிக்கும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு இரத்த சோகையும் ஏற்படக் கூடும். இதற்கும் மாதுளம் பழச் சாறு உகந்தது. நோய்வாய்ப்பட்ட பின்னர் ஏற்படும் உடல் சோர்வைப் போக்க மாதுளம் பழச் சாறுடன் சிறிதளவு கல்கண்டு சேர்த்து சாப்பிட்டு குணம் பெறமுடியும்.

மாதுளை பிஞ்சை நன்றாக அரைத்து பசைபோலச் செய்து கொண்டு நெல்லிக்காய் அளவு ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளைகள் இவ்வாறு செய்தால் வயிற்றுப் போக்கு, பேதி தீரும்.

மாதுளை பூச்சாறு 15 மிலி சிறிதளவு கற்கண்டு சேர்த்து காலையில் மட்டும் குடித்து வர வேண்டும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்து வர இரத்த மூலம் கட்டுப்படும்.

ஒரு டம்ளர் அளவு பழச்சாற்றை தேவையான அளவு கற்கண்டு சேர்த்து காலையில் குடிக்க உடல் குளிர்ச்சி பெறும்.

மாதுளம் பூக்களைச் சேகரித்து உலர்த்தி தூள் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை ½ தேக்கரண்டி அளவு ¼ டம்ளர் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண், தொண்டை இரணம், வலி தீரும்.

பல்லுக்கு உதாரணமாக மாதுளை விதைகளைக் கூறுவார்கள். நன்கு முற்றிய மாதுளம் பழத்தை உடைத்தாலே உள்ளே முத்துப் பற்கள் போன்று அழகாக அடுக்கி வைக்கப்பட்டிக்கும் விதைகள் அனைவரையும் அதிசயிக்க வைக்கும். பற்களையும், ஈறுகளையும், பாதுகாக்க மாதுளம் பழம் சாப்பிடுவது மிகவும் அவசியமாகும்.

 

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று வகை சுவைகள் உள்ளன.

இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு வகை மாதுளையும் சக்தியளிக்கும். பழத்தில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.

மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

 

மாதுளம் முத்துக்களில் சிறிதளவு மிளகுப் பொடியும் சேர்த்துச் சாப்பிட்டால் அனைத்து வகையான பித்தரோகமும் தீரும்.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம்பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.

மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் போட்டு அதின் உள்ளே சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கி விடும். நீடித்த இருமல் குணமாகும்.

பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சீனியை இதில் கலந்து வைத்து அரைமணி நேரம் வரை இருந்தால், முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும். இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால், ஒரு கிலோ சீனியை பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன் மாதுளம் பழச்சாற்றைக் கலந்து வைத்துக் கொண்டு மீண்டும் பாகுபதம் வரை சூடு செய்து பத்திரப்படுத்திக் கொண்டு தினசரி 30 மில்லி அளவு எடுத்து, தண் ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்தநோய்கள் நீங்கும். ஆயாசம் அகலும். வீரிய விருத்திக்கான டானிக் ஆகும். நினைவாற்றல் பெருகும்.

பொதுவாக மாதுளம்பழச்சாற்றுக்கு நான்கில் ஒரு பாகம் சீனி கலந்து சாப்பிட்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மூக்கில் இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள், மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால், இரத்தம் கொட்டுதல் நின்று விடும். பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கிற்கு இதே மருந்தை மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும். மாதுளம் பழத்தோலை உலர்த்தித் தூள் செய்து காலை, மாலை 15 மில்லி அளவில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, குடல் இரைச்சல், வயிற்றுப் பொருமல் தீரும்.

மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண் ணீ ர் சேர்த்து பாதியாகச் சுண்டக் காய்ச்சியதை, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும்.

மலராத மாதுளம் மொட்டுக்களைக் காய வைத்து பொடித்துக் கொண்டு இதில் சிறிதளவு ஏலம், கசகசாவையும் பொடித்துக் கலந்து 10 கிராம் அளவில் நெய்யில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் வயிற்றுப் போக்கும் சீத பேதியும் குணமாகும்.

உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்துக் கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தைக் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். கொப்பளிப்பது தொண்டை வரை செல்ல வேண்டும். இவ்வாறு கொப்பளித்தால் தொண்டைப்புண், தொண்டைவலி, வாய்ப்புண் குணமாகும். மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் பூக்கள், அருகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம், சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும். அலர்ஜியை நிவர்த்திக்கும் மூலச்சூடும் வெட்டை நோயும் நீர்க்கடுப்பும் நிவர்த்தியாகும்.

மாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து 200 கிராம் பசு நெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இரண்டு மாதத்தில் கடுமையான சயரோகப்பாதிப்பு, படிப்படியாகக் குறைந்து விடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூலநோயும் தீரும்.

மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண் ரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் நீடிக்குமாம்.

புளிப்புமாதுளம் பழத்தோல், சாதிக்காய் சமமாகச் சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2-5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.

துவர்ப்பு மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து புண்களின் மீது போட்டு வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும். மாதுளம் மரப்பட்டையை கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் ஆடும் பற்கள் கெட்டிப்படும். ஈறுகளின் நோய் தீரும். பற்களின் வலி குறையும். மாதுளை ஒரு பல்முனை நிவாரணியாகப் பயன்படுகிறது.

மாதுளம்பழ தோல், அதனுள் இருக்கும் முத்து, விதை ஆகியவற்றை உள்ளடக்கிய பதப்படுத்தப்பட்ட பொருள் 60 பேருக்கு ஒரு மாத காலத்துக்கு வழங்கப்பட்டது. அவர்களுடைய உடலில் நடைபெறும் ரசாயன மாற்றங்களை இத்தகைய பொருள் சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடப்பட்டது.

மாதுளம் பழத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளை சாப்பிட்டர்களின் உடல் செல்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது தேய்வடைவது குறைவாக இருந்தது. அதாவது மூளை, தசை, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் செயல் பலவீனமாவதை குறைக்கிறது.

மேலும் முதுமைக்கு முக்கியமான அறிகுறியாக விளங்கும் தோல் சுருக்கத்துக்கு காரணமாக உள்ள செல்களின் டிஎன்ஏவை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் வயது அதிகமானாலும், தோலில் சுருக்கம் ஏற்படாது. இதனால் இளமையுடன் இருக்கலாம்.

இதய நோய் வராமல் தடுக்கவும், மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் மாதுளம் பழம் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக வெறும் முத்துக்களை சாப்பிடுவதைவிட அதன் தோல் மற்றும் விதை ஆகிய அனைத்தையும் பதப்படுத்தி சாப்பிடுவது கூடுதல் பலனளிக்கும்.

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTAHM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan PG Dip in Yoga and Holistic Heath.....

 

 

Saturday, March 20, 2021

சிட்டுக்குருவிகள் பற்றிய அரிய தகவல்கள்!

சிட்டுக்குருவிகள் பற்றிய அரிய தகவல்கள்! 



மார்ச் 20 – உலக சிட்டுக்குருவி தினம்!


1.மனிதர்களின் நீண்டகாலத் துணை சிட்டுக்குருவிகள்.

  

2.சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் 13 ஆண்டுகள்.


3.சிட்டுக்குருவிகள் நம் வீடுகளில் பாதுகாப்பான இடத்தில் கூடுகட்டி வசிக்கும்.

          

4.மரத்தில் கூடு கட்டினால் அதனுடைய முட்டைகளையும்,


5. குஞ்சுகளையும் அதைவிட பெரிய பறவைகள் எடுத்து சாப்பிட்டுவிடும். 


6.முன்பு கூரை வீடுகளும், ஓட்டு வீடுகளும்தான் அதிக அளவில் இருந்தன.

அந்த வீடுகளில் மேற்கூரையின் கட்டைகளுக்கு இடையே குருவிகள் கூடுகட்டின.


7.தற்போது பெரும்பாலான வீடுகள் கான்கிரீட் கட்டிடங்களாகிவிட்டன.


8.இவை சிட்டுக்குருவிகள் வாழ ஏற்றதாக இல்லை.


9.#சிட்டுக்குருவிகள் அழிய செல்போன் கோபுரங்கள் மட்டுமே காரணம் இல்லை.

காடுகள், வயல்வெளிகள், மரங்கள், தாவரங்கள் போன்றவற்றின் அழிவுக்கும்


10.#சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைவதற்கும் நிறைய தொடர்பு உண்டு.


11.#முன்பு சாக்கு மூட்டைகளில் தானியங்கள் சேமித்து வைக்கப்படும்.

அவற்றை குருவிகள் கொத்தி சாப்பிடும்.


12.#தற்போது தானியங்களை பிளாஸ்டிக் பைகளில் சேமித்து வைக்கின்றனர்.


13.#வடகம், அரிசி என வீடுகளில் உணவுகளைக் காய வைக்கும் பழக்கம் இருந்தது.

குருவிகளுக்கு அதனால் உணவு கிடைத்தது. இப்போது நம் உணவுக் கலாசாரமும்,


14.#வாழ்விடமும் மாறிவிட்டன. இதனால் குருவிகளுக்கு உணவும் உறைவிடமும் கிடைப்பதில்லை. 


15.#அந்தக் கால வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கு பரண்,மச்சு          என   பல மறைவிடங்கள் இருந்தன.

16.#வீட்டின் பின்புறம் தோட்டம் இருந்தது.


17.#நீர்நிலைகளில் தண்ணீர் இருந்தது. தற்போது அதுபோன்ற சூழல் இல்லை.


18.#உணவுக்காக இவை நீண்ட தூரம் செல்லாது. கூடு கட்டும் வசதியும்,

உணவும் இருக்கும் இடங்களுக்கு அவை தேடிவரும்.

19.#சிட்டுக்குருவிகளை பாதுகாக்க மரம், மூங்கில் அல்லது மண்       கலயங்களைக் கொண்டு கூடுகளை தயார் செய்து, வீடுகளின் முன்         தொங்கவிடலாம். சிறிய கலயங்களில் தண்ணீர் வைக்கலாம்.

20 . #விளைநிலங்களில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் உரம்,

21.பூச்சி மருந்துகள் போன்றவையும் சிட்டுக்குருவியின் மறைவுக்குக் காரணமாகிவிட்டன.

சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை அதிகரிக்க, அவை வாழ்வதற்கான

சூழலை ஏற்படுத்தித் தருவதுதான் நாம் செய்ய வேண்டியது.



வெயில் காலம் வருகிறது எங்களுக்கு தண்ணீர் வைக்க மறக்காதீர்கள்..

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTAHM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan PG Dip in Yoga and Holistic Heath.....



வெங்காயத்தின் பயன்கள் ONION BENEFITS

 வெங்காயத்தின் பயன்கள் ONION BENEFITS

வெங்காயம் (தாவர வகைப்பாடு Allium cepa) குடும்பத்தைச்சேர்ந்த ஒரு தாவரம். இது இந்தியா,பாக்கிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான், ஈரான், ஆகிய நாடுகளில் பரவலாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

வெங்காயத்தில் 89%  நீரும், 9%  மாவுப் பொருளும் (இதில் 4% இனிப்பு, 2% நார்ச்சத்து)

சிறிதளவு கொழுப்புப் பொருட்களும் உள்ளது. வெங்காயத்தில் மிகக் குறைந்த அளவே ஊட்டச்சத்துகள் உள்ளன. 100 கிராம் எடையுடைய வெங்காயத்தில் 166கி.ஜூ (KJ)

(40 கலோரிகள்) சக்தி அடங்கியுள்ளது.

வெங்காயம் இன்றி இந்திய சமையலே கிடையாது அந்த அளவுக்கு எல்லா சமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது. தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும்.

இவர்கள் ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்று விடும்.

வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள் அப்படியே பச்சையாக வெங்காயத்தை சாப்பிடலாம் சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும்.

பொடியாக நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.

மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர்மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும்.

வெங்காயத்தில் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும். வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

வெங்காயம் இரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும். தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.

வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

மாரடைப்பு நோயாளிகள், இரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.



வெங்காயத்தையும் ,வெங்காயப்பூவையும் சேர்த்துஅரைத்து ஒரு அவுன்ஸ் சாறு எடுத்து இரவில் வெறும்வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காசநோய்குணமடையும்.

வெங்காயப்பூக்களையும் வெங்காயத்தையும்,

பொடியாக நறுக்கி தயிரில் ஊறப்போட்டு சாப்பிடமூலம் தொடர்புடைய எரிச்சல், குத்தல் குணமடையும்.

கண்நோயால் பாதிக்கப்பட்டு பார்வை மங்கலாகஇருப்பவர்கள் வெங்காயப்பூவைக் கசக்கி சாறுபிழிந்து எடுத்து இரண்டு சொட்டு சாறுகாலை, மாலைகண்களில் விட்டுவர மூன்று நாட்களில் கண்பார்வைதெளிவடையும்.

பல்வலியால் அவதிப்படுபவர்கள் சம அளவுவெங்காயம் மற்றும் வெங்காயப்பூ எடுத்து அரைத்துசாறுபிழிந்து தினமும் வாய்கொப்பளித்து வரபல்மற்றும் ஈறு தொடர்புடைய நோய்கள் குணமடையும்.

ஒரு கைப்பிடியளவு வெங்காயப்பூ எடுத்துபொடிப்பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டுஅதில் அரைடம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துசூடேற்றவும். வெங்காயப்பூ நன்றாக வெந்தவுடன்இறக்கி ஆறவைத்து சிறிதளவு உப்பு சேர்த்துஉட்கொள்ள வயிற்று வலி உடன் நிற்கும்.

வெங்காயம் சேர்த்து சமைக்கும் உணவுகளில்வெங்காயத்திற்கு பதிலாக வெங்காயப்பூவையும், வெங்காயத்தாளையும் சிறியதாய் நறுக்கிப் போட்டுசேர்க்கலாம். இதுபசியை தூண்டும். குடலில் உள்ளதேவையற்ற வாயுவை அகற்றும். வெங்காயப்பூவினைஏதாவது ஒரு வகையில் பக்குவம் செய்து சாப்பிடகீழ்வாதம்   குணமடையும்

வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவ மறைந்துவிடும்.

திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில்

வெங்காயச்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

வெங்காயம் நறுக்கும் போது அதன் இதழ்களில் காணப்படும் ஆலினேஸ் என்ற நொதி அந்த இதழ்களில் காணப்படும் புரோப்பினிசிஸ்டைன் சல்பாக்சைடு என்ற பொருள் மீது வினை புரிந்து புரோப்பின் சல்பினிக் அமிலமாக மாறுகிறது. இந்த அமிலம் எளிதில் ஆவியாகி காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து உறுத்துகிறது. அதன் விளைவாக கண்ணீர் சுரப்பியிலிருந்து நீர் சுரந்து வெளியேறுகிறது.

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTAHM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan PG Dip in Yoga and Holistic Heath.....

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...