Tuesday, May 18, 2021

நார்த்தங்காயின் நன்மைகள் | Citron Benefit

உடல்சூடு தணிக்கும் நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்திநன் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும் கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது

கனிந்த கனிகள்  இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசி தூண்டுவி, தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நாரத்தை பழத்தின் மேல் தோலை தேன் ல்லது ர்க்கரைப் பாகில் ஊற வைத்து ன்கு றியபின்சீதக் ழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க ல்ல பலன் தரும்.

உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.



பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறதுஇதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும் இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும்நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.



கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும் சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும் இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்

நாரத்தங்காய் இலைகைளை நரம்புநீக்கி ல்லெண்ணெய்விட்டு வதக்கி அதனுடன் வெள்ளை உளுந்தம் பருப்பு கடலைப் பருப்பு, தேங்காய் துருவல் வறுத்து சேர்த்துமிளகாய் ப்பு, புளி பெருங்காயம் றிவேப்பிலையும் சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன்பிசைந்து சாப்பிடலாம் ப்படி சாப்பிட்டு வரபித்தம் குறையும். ர்ப்ப காலத்தில் ற்படும் நா சுவையின்மை, குமட்டல், வாந்திநிற்கும். யி‌‌ன்மை குறைந்து ன்கு சிக்கும். பொதுவாக உணவுடன் நார்த்தங்காய் ஊறுகாய் சேர்த்துக் கொண்டால் செரியாமைபிர‌‌ச்சினை வரவே வராது. சாப்பிட்டதும் ப்பம் ந்து கொண்டிருந்தாலும், ‌‌ஜீரணமாக நெடுநேரம் ஆனாலும் நார்த்தங்காய் ஊறுகாயை சாப்பிட்டால் உடனடி பலன்கிட்டும். யிற்றில் வாயுப்பிரச்சினை ற்படும்நிலையில் ஒரு ஊறுகாய் துண்டை எடுத்து வாயில் போட்டு மென்றுதி‌‌ன்றால் வாயுக் கோளாறுவிரைவில்நீங்கும்.


யிற்றில் ற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் ல்ல மருந்தாக அமைகிறது. நாத்தங்காயை ட்ட ட்டமாய் நறுக்கி ப்பு சேர்த்து ஒரு ண் பானையில் ட்டு வாயை துணியால் மூடிவிடவும். இதனை வ்வப்போது வெ‌‌யிலில் உலர்த்தி வரவும். ப்படி 40 நாட்கள் செய்துபிறகு தில் இருந்துதினமும் ஒரு துண்டை எடுத்து காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வர யிற்றுப் புண் குணமாகும். நாரத்தங்காயை ல்லது பழத்தை ந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர த்தம் சுத்தமடையும் வாதம், குன்மம் (யிற்றுப் புண்), யிற்றுப் புழு இவைநீங்கும். சியை திகரிக்கும். நாரத்தை பழத்தின் மேல் தோலை தேன் ல்லது ர்க்கரைப் பாகில் ஊற வைத்து ன்கு றியபின்சீதக் ழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க ல்ல பலன் தரும். நாரத்தை பழத்தை சாறுபிழிந்து குடித்து வர உடல் வெப்பத்தை போக்கி குளிர்ச்சி தரும். வாந்தியையும், தாகத்தையும் ணிக்கும் 

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath...

 

Wednesday, May 5, 2021

கருமருது | ஒரு அழகு மற்றும் நிழல் தரும் மரம்| Indian laurel

 


Tenminalia spp.

ஓங்கி உயர்ந்து வளர்ந்து நிழல் தரும்

மருத மர இனத்தைச் சார்ந்த இம்மரங்களில் இரண்டு நெருங்கிய சிற்றினங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.

1.Terminalia elliptica

2.Terminalia tomentosa

இவை இரண்டையுமே தமிழில்  கருமருது என்றே அழைக்கப்படுகிறது.

Terminalia arjuna என்பதை தமிழில் மருது,வெண்மருது மற்றும் நீர் மருது என அழைக்கப்படுகிறது.

கரு மருது  தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, இந்தியா,நேப்பாளம், வங்காளதேசத்தில் அதிகம்  காணப்படுகிறது.  உயரமாக வளரக்கூடிய இதன் இலைகளைப் பட்டுப்பூச்சி உணவாக உண்கிறது.இம்மரங்கள் ஆற்றோரங்களிலும்  வயலோரங்களிலும்  செழித்து வளரும்.

வைகை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதியாக இருந்த காரணத்தால் அவ்வூர் மருததுறை என அழைக்கப்பட்டு பின்னர் மருதை எனவும் மதுரை என்றும் மருவிற்று என கூறப்படுகிறது.

ஐந்திணை நிலங்களில் மருதமரம் நிறைந்த வயல் வெளிகள் மருத நிலமாக தமிழில் வகைப்படுத்தப்படுகிறது.இதிலிருந்து நமது முன்னோர்கள் மருத மரங்களுக்களுக்களித்தமுக்கியத்துவத்தை அறிய முடிகிறது.

கருமருதின் இரண்டு வகைகளுமே தென்னிந்தியாவின் இலையுதிர் காடுகளில் 1000 மீட்டர் உயரம் வரை காணப்படுகின்றன. 

இம்மரங்கள் 30 மீட்டர் உயரமும், அடிமரம் 1 மீட்டர் குறுக்களவும் கொண்டவை.

வெண் மருதுவிற்கும் கருமருதுவிற்கும் உள்ள எளிதான வித்தியாசம் யாதெனில்,கருமருது பட்டையானது வெண் மருதைப்போல் மிருதுவாகவும்,வெண்மையாகவும் இருப்பதில்லை. இதன் பட்டைகள் வெடிப்புற்று பழுப்பு நிறத்தில் முதலைத்தோல் போல் காட்சியளிக்கும்.இதன் பட்டைகள் நெருப்பினை தாங்கும் சக்தி படைத்தவை.இதன் பட்டைகள் மருத்துவத்தில் வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்த பயன்படுகிறது.இப்பட்டைகளிலிருந்து ஆக்ஸாலிக் அமிலம் பிரித்தெடுக்கப்படுகிறது.மேலும் பட்டைகள் தோல் பதனிடும் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றன.


இம்மரங்களின் இரண்டு இனங்களுமே உறுதியான வைரப்பகுதியை கொண்டிருப்பதால்,மரச்சாமான்கள் செய்யவும்,படகு கட்டவும், கிட்டார் போன்ற இசைக்கருவிகள் செய்யவும் பயன்படுகின்றன.

Terminalia tomentosa இன கருமருத மரங்கள் தங்கள் அடிமரப்பகுதிகளில் நீரை தேக்கி வைக்கும் குணம் கொண்டவை.கோடை காலங்களில் தங்கள் தாகத்தை தணித்துக் கொள்ள காடுகளில் பயணிப்பவர்கள் இம்மரத்தில் சிறு காயங்களை ஏற்படுத்தி பீறிட்டு வரும் நீரை குடிநீராக பயன்படுத்துவர்.இக்குடிநீர் வயிறு சம்பந்தமான நோய்களை தீர்க்கவல்லது.



இதன் மலர்கள் நீண்ட காம்புகளில் மங்கலான வெண் நிறத்தில் இருக்கும்.இம்மரங்கள் சுற்றுச் சூழல் காக்கவும்,நிழலுக்காகவும், இதன் தோற்றத்திற்காகவும் பூங்காக்கள்,சாலை ஓரங்கள் மற்றும்  ஆற்றங்கரைகளில் வளர்க்கப்படுகின்றன. 

சமூக காடுகளிலும் இம்மரங்களை மற்ற மரங்களுடன் சேர்த்து வளர்க்கலாம்.

                           அரவிந்தன்

இது போன்று மேலும் பல பயனுள்ள குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath...

Thursday, April 29, 2021

தேன் பழ மரம் | ஒரு அழகு மற்றும் நிழல் தரும் மரம் | Singapore cherry


         


           Muntingia 

குடை போன்ற தோற்றத்துடன் இலேசான தொங்கு கிளைகளை கொண்ட இம்மரம் தமிழகம் முழுக்க சாலைகள் ஏரிகரைகள் மற்றும் காலியிடங்களில் காண முடியும்.இதன் சிறிய பழங்களை நசுக்கினால் நெய் போன்ற பழக்கூழ் வெளியாவதால் இதனை நெய் பழம் எனவும் அழைக்கப்படுகிறது.


இதனை சிங்கப்பூர் செர்ரி, ஜமாய்கன் செர்ரி,பனாமா பெர்ரி, பெஜ்லி மரம் மற்றும் ஸ்ட்ரா பெர்ரி மரம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

இதன் தாயகம் தென் மெக்சிக்கோவாகும். கரீபியன், மத்திய அமெரிக்கா, மேற்கு தென் அமெரிக்கா, பெரு, பொலிவியா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன.

இது 7-12 மீட்டர் உயரமுடைய கிளைகளைக் கொண்ட சிறிய மரம்.

வறட்சியையும் பல்வேறு மண் வகைகளிலும் வளரக்கூடியது.நடவு செய்த 18 மாதங்களில் விரைவாக வளர்ந்து மரமாகி பூத்து பழங்களை அளிக்க வல்லது.

விரைவாக வறண்ட நிலங்களில் பசுங்காடுகளை உருவாக்க நினைப்பவர்களும், குறுகிய காலங்களில் நிழல்தரும் மரங்களைகட்டிடங்களின் அருகில் வளர்க்க நினைப்பவர்களும் இம்மரங்களை தேர்வு செய்யலாம்.


இதன் பூ சிறியதாகவும் வெள்ளை நிறத்துடன் காணப்படும். இது சிவப்பு, இள மஞ்சள் பழங்களை விளைவிக்கின்றது. 

இதன் பழங்கள் உண்ணத்தக்கதும், இனிப்பான சாற்றைக் கொண்டுள்ளது. இதனுள் மிகச்சிறிய மஞ்சள் நிற விதைகள் அதிகமாகக் காணப்படும்.

சிங்கப்பூர் செர்ரி பழத்தைத் சாப்பிட, வௌவால் மற்றும் விதவிதமான பறவைகள் தோட்டத்துக்கு வரும். அந்தப் பறவைங்களோட எச்சம் மூலமா, சந்தனம் மாதிரியான அரிய வகை செடிகள் தோட்டத்துல வளரும்.தங்கள் பகுதிகளில்  நல்ல சுற்றுச்சூழலை உருவாக்க நினைப்பவர்கள் பறவைகள் அதிகம் கவரவும்,அவைகள் வசிக்க இருப்பிடத்தை உருவாக்கவும் இம்மரங்களை நடவு செய்யலாம்.

சிங்கப்பூர் செர்ரி மரங்களை, பழத்தோட்டத்தில் நடவுசெய்வதன் மூலம் பறவைகள் மட்டுமல்ல,அணில், குரங்கு,வௌவால்கள் முதலியவை இந்தப் பழங்களைதான் சாப்பிடும். இதனால, தோட்டத்துல இருக்கற பழங்களுக்கு

அதிக சேதம் வராது. வௌவால்களால் அதிகம் சேதம் ஏற்படும் பழ வகை தோட்டங்களின் எல்லைகளில் இம்மரங்களை விவசாயிகள் நடவுசெய்வதன் மூலம் பழங்களுக்கு ஏற்படும் சேதங்களை தவிர்க்க முடியும்.

மரம் விறகாகவும் கிராமப்புறத்தில் சிறிய கட்டட வேலை செய்யவும் பயன்படுகிறது! நார்சத்து உள்ளதால் தண்டு கயிர் திரிக்க பயன்படுகிறது. 


மரங்களை அலங்காரத்திற்கு வளர்க்கலாம். பழங்களை அப்படியே சாப்பிடலாம். பழங்களை ஜாம் செய்தும் சாப்பிடலாம். இலைகளை கொண்டு தேனீர் தயாரித்து குடிக்கலாம். இது தலைவலிக்கும் குடற்புண்ணிற்கு மருந்தாகவும் பயன்படுகிறது பழங்கள் மூச்சு கோளாறுகளை சரிசெய்யும் . 

இந்த மரம் அறுபது வகையான பறவைகள் மற்றும் சிறு விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது . 

விதைகள் மற்றும் தண்டுகள் மூலமாக இதை பெருக்கம் செய்யலாம். வேகமாக வளரும் இயல்பு மற்றும் வறண்ட நிலங்களிலும் வளரும் தன்மை உடையதால் உயரம் குறைவான மலைச்சரிவுகள் மற்றும் தரிசு நிலங்களில் புதிய காடுகளை உருவாக்க இம்மரங்களை நடவு செய்யலாம். நகர்புறங்களில் அமைக்கப்படும் 

சுற்றுச்சூழல் பூங்காக்களுக்கு இவை ஏற்றதொரு மரமாகும்.

 அரவிந்தன்

இது போன்று மேலும் பல பயனுள்ள குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath...

Wednesday, April 28, 2021

மரமல்லி அழகு மற்றும் நிழல் தரும் மரம் | Tree jasmine | பன்னீர் மரம்


          

       Millingtonia hortensis

மௌவல் எனச் சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி பன்னீர் மரம் எனவும் அழைக்கின்றனர். குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று மௌவல்.


பன்னீர் மரத்தின் கிளைகள் கொண்ட மரப் பகுதி, தக்கை போன்ற தன்மையுடையதால், மருந்துகள் சேமிக்கப்படும் புட்டிகளில், காற்றை புக விடாமல் தடுத்து காக்க, புட்டிகளின் வாய்ப் பகுதியில் வைக்கப்படும் கார்க் எனும் தக்கை தயாரிக்க பயனாகிறது.அதனால்  இந்த மரத்திற்கு இந்திய கார்க் மரம் எனவும் அழைக்கப்படுகிறது.

இதற்கான தாவரவியல் பெயரான மில்லிங்டோனியா ஹார்டென்சிஸ் என்ற பெயரில் உள்ள, மில்லிங்டோனியா என்ற சொல்லானது சர் தாமஸ் மில்லிங்டனின் நினைவாக இடப்பட்டது. இவர் இந்த இனத்தை முதலில் விவரித்த கார்ல் லின்னேயஸ் தி யங்கருக்கு உதவியாக இருந்தவர் எனப்படுகிறது. இதில் உள்ள 'ஹார்டென்சியா' என்ற சொல்லானது 'ஹார்டென்சிஸ்' மற்றும் 'ஹார்டஸ்' என்பதிலிருந்து உருவானது, இது லத்தீன் மொழியில் தோட்டத்துடன் தொடர்புடைய சொல்லாகும். 

இது வீட்டில் வளர்க்கப்படும் மரம். இந்த மலரின் அரும்புகள் மகளிரின் பல் வரிசைக்கு உவமையாகக் காட்டப்பட்டுள்ளன. இப்பூ வருடத்திற்கு இரு முறை பூக்கும். மலர்கள் மிகுந்த வாசனையை கொண்டது. இப்பூவைக் கொண்டு மாலைகளும், மலர் அலங்காரங்களும் செய்யப்படுகின்றன.இந்த மலர் இரவில் பூக்கும். மணம் மிக்கது.

இம்மரம் 18 முதல் 25 மீட்டர் வளரக்கூடியது. 6 முதல் 8 வருடங்களில் மரமாகி 40 வருடங்கள் வரை இருக்கும். பல மண் வகைகளில் வளரக்கூடியவை.சற்று ஈரப்பதமான காலநிலயை விரும்பக்கூடியவை.

இதன் உயர்ந்த தண்டுப்பகுதியில் பக்க கிளைகளும் மேல் நோக்கி இருப்பதால் இதன் தலைப்பு பகுதி பிரமிட் அல்லது தூண் வடிவில் அமைந்திருக்கும்.இதன் மரமானது மஞ்சள் கலந்த வெள்ளை நிறமாகவும்,மிருதுவாக எளிதில் உடையும் தன்மை கொண்டது.அதனால் பலமான காற்றுக்கு கிளைகள் உடைந்துவிடும்.

பொதுவாக, மரமல்லி மரங்கள் வீட்டில் இருந்தாலே, பெண்களுக்கு ஏற்படும் உடல் நலப் பாதிப்புகள் நீங்கி விடும், என்கின்றன சாத்திரங்கள்.மேலும், மலர்கள் பூக்கும் காலங்களில், மரத்தினடியில் பூ மெத்தை போல பரவி, அந்த இடங்களில் சுகந்த நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும், மரமல்லி மலர்கள், இயற்கையின் அருட் கொடை என்றே, சொல்லலாம்.இந்த மரம் ஒரு அலங்கார மரமாக கருதப்படுகிறது. மேலும் இதில் உள்ள பூக்களின் இனிய மணத்தால் தோட்ட மரமாக வளர்க்கப்படுகிறது

தற்காலம் கட்டப்படும் வீடுகளின் முன்புறம், வாஸ்து என்ற காரணத்துக்காக, வீடுகளுக்கு சுபிட்சம் தருபவையாக, மரமல்லி மரங்கள் நட்டு வளர்க்கப் படுகின்றன. அதைப்போல சிலர், இந்த மரங்கள் விபத்தை தடுக்கும் தன்மை உடையவை என்று கூறியும், வீடுகளில் வளர்த்து வருகின்றனர்.

தெருக்களில், சாலையோரங்களில், நெடுஞ்சாலைகளில் இந்த மரத்தை பரவலாக வளர்க்க, பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

இரவில் மலரும் இயல்புடைய பன்னீர் மலர்களை நாடி, பறவைகளும், வண்டுகளும், தேனீக்களும், இரவில் இந்த மரத்தைச் சுற்றி வந்து, பன்னீர் மலர்களின் தேனை உண்ணுமாம்.

மரமல்லி மலர்கள், மனிதர்களின் மனதை அமைதிப் படுத்தும் தன்மை மிக்கதால், அரோமா தெரபி எனும் வாசனை மருத்துவத்திலும், வாசனைத் திரவிய தயாரிப்பிலும் பயன் படுகின்றன. சித்த மருத்துவத்தில் மரமல்லி மலர்கள், பித்த மருந்துகளில் இணை மருந்தாக, சேர்க்கப் படுகின்றன.இதன் இலைகள் மலிவான புகையிலைக்கு ஒரு மாற்றுபொருளாக சிகரெட்டில்  சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது,

காய்ந்த பன்னீர் மலர்களை சிலர், சாம்பிராணி புகையில், இட்டு அந்த வாசனை மூலம், சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பர்.

பன்னீர் மலர்களை காய்ச்சி பருகி வர, உடல் நல பாதிப்பால், வாந்தி எடுப்பது நிற்கும். பன்னீர் மலர்களைக் கொண்டு, காய்ச்சும் நீரை பருகி வரும்போது, உடல் சூடு நீங்கி, தொண்டை வரட்சியைப் போக்கி, உடலின் பித்த பாதிப்புகளை சரி செய்து, நாவின் சுவையின்மையை நீக்கி, உணவுகளின் சுவை அறிய, வைக்கும்.

பன்னீர் மரத்தின் வேர்கள், உடல் நச்சை போக்கும் தன்மை மிக்கது, ஜுரத்தை போக்கி, மனிதர்களின் நுரையீரலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி தரும் ஆற்றல் மிக்கதாக, பன்னீர் மரத்தின் வேரை, நீரிலிட்டு காய்ச்சி பருகும் குடி நீர், விளங்குகிறது.

கும்பகோணம், திருவையாறு, சீர்காழி போன்ற ஆன்மீக இடங்களின் அருகே உள்ள பல கோவில்களில் தல மரமாக, பன்னீர் மரங்கள் திகழ்கின்றன.

இம்மரங்கள் விதைகள்,தண்டு துண்டுகள்,  வேர்குச்சிகள் மற்றும் பக்கக் கன்றுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

அரவிந்தன்

இது போன்று மேலும் பல பயனுள்ள குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....



மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...