Sunday, April 28, 2019

இந்திய தேசிய சின்னங்கள் | National symbols of India






இந்திய தேசிய சின்னங்கள் | National symbols of India


குடியரசு இந்தியவிற்கு தனி அடையாள சின்னங்கள் உள்ளன அவை ஒவ்வொரு கால கட்டத்திலும் அவற்றின் சிறப்புக்காக நாட்டின் அடையாள சின்னங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டது இனி அவைகளைப்பற்றி பார்ப்போம்.



இந்திய தேசியக்கொடி ( NATIONAL FLAG )





சுதந்திர இந்தியாவின் அடையாளமான தேசியக்கொடி சுதந்திர போராட்ட வீரர்களின் உயிர் மூச்சாக கருதப்படுகிறது. இந்திய தேசியக்கொடி 1947 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22 ஆம் தேதியில் அங்கீகாரம் பெற்றது, மூன்று வண்ணங்களை கொண்டதால் மூவர்ணக் கொடி (TRICOLOUR FLAG) என்று அழைக்கப்படுகிறது.

மூன்று வர்ணத்தின் தத்துவம், 
காவி நிறம் (SAFFRON) - பலத்தையும், தைரியத்தையும் குறிக்கும்.
வெண்மை நிறம் (WHITE) - உண்மை மற்றும் அமைதியையும் குறிக்கும்.
பச்சை நிறம் (GREEN) - வளர்ச்சி, பசுமை மற்றும் விவசாயத்தின் செழிப்பைக் குறிக்கும்.

நடுவில் இடம் பெற்றுள்ள நீல நிற அசோக சக்கரம் வாழ்க்கை சுழற்சியை குறிக்கின்றது.





தேசிய சின்னம் ( NATIONAL EMBLEM )





அசோக சாரநாத் தூண்  (Sarnath Lion Capital of Ashoka) தழுவலில் உருவக்கப்பட்டது நான்கு சிங்கங்கள் மூன்று முன்னாள் ஒரு சிங்கம் பின்னால் திரும்பி நிற்கும் தோற்றம் ஒரு மணி வடிவிலான தாமரை மீது
ஒரு யானை, நிழல் குதிரை, ஒரு காளை நடுவில் தர்மச்சக்கரம் என ஒரே பளபளப்பான கல்லில் செதுக்கப்பட்டது. 1950 ஜனவரி 26ல் இந்திய அரசால் ஏற்றுகொள்ளப்பட்டது. கீழே சத்தியமேவ ஜெயதே என்று தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

இது மத்திய அரசு அலுவலகம்கங்களில் வெவ்வெறு வண்ணங்களில் உயோகப்படுத்தபடுகிறது.


NATIONAL ANTHEM ( தேசிய கீதம் )

இந்தியவின் தேசிய கீதமான ஜன கன மன ரபீந்திரநாத் தாகூர் மூலம் பெங்காலி மொழியில் இயற்றப்பட்டது. ஜனவரி 24, 1950 இல் இந்தியாவின் தேசிய கீதமாக அரசியலமைப்புச் சட்டம் ஹிந்தியில் மொழில் பதிப்பித்தது. 
இது 1911 ஆம் ஆண்டு டிசம்பர் 27 இல் முதல் பாடப்பட்டது இந்திய தேசிய காங்கிரஸின் கொல்கத்தா மாநாட்டில் முதலில் பாடப்பட்டது.

இந்தியாவில் அணைத்து அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் வழக்கம் உள்ளது.


NATIONAL SONG ( தேசியப்பாடல்)

இந்திய சுதந்திரத்திற்கான போராட்டத்தில் மக்களுக்கு உத்வேகம் அளித்த  ''வந்தே மாதரம்''  பாடல் பாங்கிம்சந்திர சாட்டர்ஜியால் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட இது தேசிய கீதத்திற்கு சமமாக கருதப்படுகிறது.

1882ல் பங்கிம் சந்திரர் எழுதி வெளியிட்ட ஆனந்தமடம் என்ற நூலில் முதன்முதலில் காணப்பட்டது. எனினும், இப்பாடல் 1876லேயே எழுதப்பட்டுவிட்டது. அப்பொழுது, ஜாதுனாத் பட்டாச்சார்யா இப்பாடலுக்கு மெட்டமைத்துத் தந்தார்.




இந்தியாவின் தேசியப்பறவை மயில் (PEACOCK), ஒரு வண்ணமயமான பறவை,  கண்ணைக்கவரும் இறகுகளை கொண்டது, கண்களுக்கு கீழ் ஒரு வெண்மையன திட்டு மற்றும் நீண்ட மெல்லிய கழுத்து.  ஆண் மயில் பெண்மையை விட மிகவும் வண்ணமயமான, ஒரு பளபளப்பான நீல மார்பக மற்றும் கழுத்து மற்றும் சுமார் 200 நீள் இறகுகள் ஒரு கண்கவர் வெண்கல-பச்சை நிற தோகையும். பெண் பழுப்பு நிறமாகவும், ஆண் மயிலை விட சற்று சிறியதாகவும், வால் இல்லாமலும் இருக்கிறது.



NATIONAL ANIMAL (தேசிய விலங்கு )





வங்காள புலி (Panthera Tigris Tigris) இந்திய துணைக் கண்டத்தில் மட்டுமே காணப்படும் அற்புதமான புலி. அடர் மஞ்சள்,வெண்மை நிறம் கலந்து கருமையான கோடுகளுடன் கம்பிரமான, கருணை, வலிமை, சுறுசுறுப்பு மற்றும் மகத்தான சக்தி ஆகியவற்றின் கலவையானது இந்தியாவின் தேசிய விலங்கினமாக புலிகளின் பெருமையைப் பெற்றது. 

NATIONAL AQUATIC ANIMAL (தேசிய நீர் விலங்கு)



இந்திய துணைக் கண்டத்தில் மட்டுமே காணப்படும் ஒரு நன்னீர் அல்லது நதி டால்பின் ஆகும். இதில் இரு வகை உண்டு ஒன்று கங்கை நதி டால்பின் மற்றொன்று சிந்து நதி டால்பின் கங்கை நதி டால்பின் ஒரு துணிவுமிக்க,  நெகிழ்வான, உடல் பெரிய flipper மற்றும் குறைந்த முக்கோண dorsal fin கொண்டிருக்கிறது. இது 150 கிலோ எடை வரையும் வளரக்ககூடியது. கன்றுகள் பிறப்பு சாக்லேட் பழுப்பு மற்றும் ஒரு மென்மையான மற்றும் முடியற்ற தோல் கொண்ட வயது முதிர்ந்தவை சாம்பல் பழுப்புபாக. பெண் ஆணை விட பெரியவை. இது சுத்தமான நீரில் மட்டுமே வாழ முடியும். கங்கை நதி டால்பின்  புனிதத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

NATIONAL TREE (தேசிய மரம்) 



இந்திய ஆலமரம் (Indian Banyan)  இந்தியாவின் தேசிய மரம் இதன் வேர்கள் படர்ந்து விரிந்து வளரக்குடியது இதன் வேர்களில் இருந்து புதிய மரங்கள் உருவக்கும் தன்மை உடையது. புராணகாலத்திலிருந்தே இதற்கு முக்கிய பங்குள்ளது. இன்றும் கிராமங்களில் இந்த மரத்தடியில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகின்றது. ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள (Thimmamma Marrimanu) திம்மம்மா மரிமானு, உலகிலேயே மிகப்பெரிய மர மாதிரியாகும்.

NATIONAL FLOWER ( தேசியமலர் )



தாமரை (Nelumbo Nucifera Gaertn) இந்தியாவின் தேசிய மலர் ஆகும். தாமரை என்பது தூய்மை, செல்வம் மற்றும் வெளிச்சத்தின் சின்னமாகும். அழுக்கு நீரில் வளர்ந்து வந்தாலும், தாமரை எப்போதும் தூய மற்றும் அழகா உள்ளது. இதன் கலை மதிப்பு  மட்டுமல்லது,  மருத்துவ, பொருளாதார மற்றும் உணவு என பல்வேறு வகையில் பயன்படுகிறது பண்டைய இந்தியாவின் 
கலை மற்றும் புராணங்களில் ஒரு தனித்துவமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

NATIONAL FRUIT (தேசிய பழம்)





மாம்பழம் (Mangifera Indica) பழங்களின் ராஜா, இதன் ருசியான சுவை  மற்றும்  நறுமணத்திற்காக
தேசியபழமாக அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் மாம்பழங்களின் மொத்த சாகுபடியில் இந்தியா 43% உற்பத்தி செய்கிறது. நம்முடைய நாட்டிற்கு மட்டுமல்லாமல், மாம்பழம் பாக்கிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸின் தேசிய பழம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மாம்பாழத்தின் முக்கியதுவத்தை போற்றும் வகையில் டெல்லில் மாங்கனி திருவிழா கொண்டாடப்படுகிறது.


NATIONAL SPORT (தேசிய விளையாட்டு)






இந்திய விளையாட்டாக ஹாக்கி  (Hockey) கருதப்படுகிறது, இந்திய ஹாக்கி ஃபெடரேஷன் (The Indian Hockey Federation) 1925 இல் நிறுவப்பட்டது. இந்திய ஹாக்கி நியூசிலாந்திற்கு முதல் சர்வதேச சுற்றுப்பயணத்தை நடத்தியது, அவர்கள் 21 போட்டிகளில் விளையாடினர், 18 வெற்றி பெற்றனர்,  2 சமமாக முடிந்தது 1 தோல்வியில் முடிந்தது. 
நீண்ட காலமாக, ஹாக்கி ஒலிம்பிக் போட்டிகளில் அதன் நட்சத்திர நிகழ்ச்சிகளால் இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று கருதப்பட்டது. ஆனால் 2012 ஆகஸ்டில், இளைஞர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகம், தேசிய விளையாட்டு என்று அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட ஒரு விளையாட்டு இந்தியாவில் இல்லை என்று அறிவித்தது.
இந்தியாவின் தேசிய இணைய தளத்தில் கூட நாட்டில்தேசிய விளையாட்டாக விளையாட்டாக ஏற்றுக் கொள்ளப்பட்டதால் பலருக்கு இது அதிர்ச்சியாக அமைகிறது
  


NATIONAL CURRENCY (தேசிய நாணயம்)





இந்திய ரூபாயின் சின்னம் (The symbol of Indian Rupee) இந்தியாவின் சர்வதேச அடையாளங்கள் பண பரிவர்த்தனைகள் மற்றும் பொருளாதார வலிமை ஆகியவற்றைக் குறிக்கின்றன.

இந்த சின்னம் ரோமானிய எழுத்தான "R" என்ற எழுத்தில் இரண்டு இணை கிடைமட்ட கோடுகள் தேசிய கொடியை குறிக்கும்.  ஜூலை 15, 2010 அன்று இந்திய அரசால் இந்திய ரூபாய் அடையாளம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பாம்பேயின் வடிவமைப்பில் ஒரு முனைவர் பட்டம் பெற்ற உதய குமார் என்பவர் மூலம் உருவாக்கப்பட்டது. 


Reference: Books and other web source





If you have any suggestion kindly write comment section.🙂

By Nathan B Com,PG Dip in Yoga and Holistic Heath, PG Dip in Fire And Safety.....


Saturday, January 12, 2019

CURRENT STATUS STREET DOGS | தெரு நாய்களின் தற்போதைய நிலை அன்பால்வீழ்ந்தவிலங்கினம்_நாய்!



அன்பால்வீழ்ந்தவிலங்கினம்-நாய்!



ஏன் “தெரு நாய்கள்” மட்டும் எங்கும் உள்ளது..?

இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவை தானே தேடிக்கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும்.

ஆடு மாடு உள்ளிட்ட விலங்குகள் மேய்ந்து கொள்ள புற்கள் இலை தலைகள் தங்களை வழங்கிவிடுகிறது.ஆனால் இந்த நாய்கள் மட்டும் ஏன் மனிதன் கொடுத்தால்தான் உணவு உண்டு உயிர் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது.?

உங்கள் வீட்டில் மனக்க மனக்க சமையல் தயாராகிகொண்டிருக்கும் போது உங்கள் வீட்டையே ஏக்கத்துடன் சுற்றி சுற்றி ஏன் வருகிறது??வீட்டிற்க்குள் இருந்து யாராவதும் வந்து அந்த உணவிலிருந்து ஏதாவதும் ஒரு சிறு பங்கை தூக்கி வீச மாட்டார்களா என ஏன் நப்பாசை கொள்கிறது..?

சாலையோர கடையிலோ தள்ளு வண்டிகடையிலோ நீங்கள் திண்பண்டங்களை ருசித்துக் கொண்டிருக்கும் போது கல்லை தவிற வேறெதாவதும் வந்து விழாதா என வெறித்து வெறித்து பார்த்து ஏன் இடையூறு செய்கிறது..?

குறிஞ்சி, முல்லை என நகர்ந்து மருத நிலத்திற்க்கு மனிதகுலம் இடம்பெயருகிறது. மருத நிலத்தில் ஆற்றங்கரையோரம் வயல்களை உருவாக்குகி வேளாண்மை செய்து தனக்கான உணவை தானே உற்பத்திசெய்கிறது. குகையில் வாழ்ந்து பழகியவன் வீடுகட்டி வாழ பழகுகிறான். சிந்து சமவெளி மனித நாகரீகம் பிறக்கிறது. காடுகளில் இருந்து வந்த மனிதன் இன்று நாகரீக, பொருளாதார, சிந்தனை, அறிவியல், குற்ற வளர்ச்சியில் உச்சத்தை எட்டிவிட்டான்.

“தெருநாய்களுக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்” என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மூளையில் கசிந்திருக்கும்.
சொல்கிறேன்….

ஆதிமனிதன் முதன் முதலில் மருத நிலம் நோக்கி வரும்போதும் அவன் மட்டும் வரவில்லை.தனக்கு பயன்படகூடிய தன்னால் அடக்கி ஆளக்கூடிய காட்டு விலங்குகலான ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளையும் தன்னோடு அழைத்தே வந்தான்.

அவற்றுள் முதன்மையான விலங்கினம் “நாய்”.”ஆதி மனிதனுக்கு முதல் நண்பனே நாய் தான்”.


நரி, ஓநாய், செந்நாய் குடும்பவகையை சேர்ந்தது தான் நாயும். அவற்றை போல நாயும் ஒரு வேட்டையாடும் காட்டு விலங்குதான். அவைகளுக்கு இருந்த எல்லா குணமும் நாய்க்கும் இருந்தது. ஒரு குணம் மட்டும் அதிகமாக இருந்தது. அதுதான் நாயை இன்று தெருவில் அலையவிட்டிருக்கிறது. அதுதான் அன்பும் நன்றியுணர்வும்….. அன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்…

ஏன் தெரு மாடுகள் இல்லை?
ஏன் தெரு ஆடுகள் இல்லை?
ஏன் தெரு கோழிகள் இல்லை?
ஏன் தெரு பன்றிகள் இல்லை?
ஏன் “தெரு நாய்கள்” மட்டும் உள்ளது?
ஆடு மாடுகளின் காம உணர்வு மதிக்கப்படுமளவிற்க்கு நாய்களின் காம உணர்வு ஏன் மதிக்கப்படாமல் இழிவுபடுத்தப்படுகிறது? ஏன்?????….. .

ஆடுகளின் இறைச்சியும் மாட்டு பாலும் கோழி முட்டை மற்றும் இறைச்சியும் ஆதிகாலம் முதல் இன்றுவரை மனிதகுலத்திற்க்கு தேவைப்படுகிறது. மிகப்பெறிய சந்தையாகவே உருவெடுத்திருக்கிறது.

எலிதொல்லைகள் நமக்கு இருக்கும் வரை பூனை பாக்கியசாலிதான். ஆனால், அன்பை தவிற வேறு எதியுமே கொடுக்க முடியாததால் கைவிடப்பட்டு தெருவில் அலையும் தகுதியை நாய் பெற்றுவிட்டது.

வேளான்மை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் முயல், காட்டுப் பூணை போன்றவற்றை மனிதன் வேட்டையாடி பொழுதுபோக்கிற்காக நாய் தேவைப்பட்டது. இன்று வேளாண் செய்வதே போராட்டமாகவும் மீத்தேன், கெயில், ஹைட்ரோ கார்பன், காவிரி உரிமை என போராட்டமே வேளாண்குடிகளுக்கு பொழுதுபோக்காக ஆகிவிட்டது.

வீட்டை காவல் காக்கும் இடத்தை சீ.சீ.டீவிகள் (CCTV) நிரப்பியதால் வீட்டின் மதிப்பிற்கேற்ப்ப சில வீடுகளில் நாய் வீட்டிற்கு உள்ளேயும் சில நாய் வீட்டிற்கு வெளியேயும் போனது. பல நாய்களுக்கு தெருவே வீடாகி போனது.

மனிதன் social animal (சமூக விலங்கு) என்றால் நாய் கிட்டத்தட்ட semi social animal ஆகிவிட்டது. உங்களோடு அதற்கு பேச மட்டும் தான் தெரியாது. உங்கள் மொழியை புரிந்து கொள்ளும்,. நீங்கள் பேசுவதை புரிந்து கொள்ளும்,. உங்கள் நண்பர் யார் பகைவர் யார் என தெரியும்,. உங்கள் வண்டியின் சத்தத்தை இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பே கணித்து வாலாட்ட தெரியும். உங்கள் குழந்தை அழுதால் ஓடிவந்து சன்னல் ஓரத்தில் அவ்,….அவ்,…அவ்,…என சிணுங்கத்தெரியும்.

உங்கள் வீட்டு வாண்டுகள் அடித்தால் திருப்பி தாக்காமல் விளையாட்டு காட்ட தெரியும். உங்கள் வீட்டில் அக்காவோ தங்கச்சியோ அவள் வரைந்த கோலத்தை மிதித்து திட்டுவாங்கியிருக்கும் ஆனால் அவள் திருமணமாகி சென்றுவிட்டால் மூலையில் படுத்து கவலைப்படும்.

வெளியூருக்கு போய் வந்த நம் அப்பாவை பார்ததும் முன்னங்கால்களை தூக்கி மாரில் வைத்து தாடையை நக்கும். வாலை ஆட்டிக்கொண்டு மளிகை கடைக்கு அம்மாவோடு கூடவே போய்ட்டு வரும். உங்களுக்கு யாரின் மூலமாவதும் தீங்கா?.. ஒரு கை பார்த்துவிடும். இவை அத்தனையையும் செய்ய அடைக்களமாக ஒரு வீடு எல்லா நாய்களுக்கும் கிடைப்பதில்லை.

அப்போ, வீடு இல்லாத நாய்களின் நிலை???

வீடு கிடைத்தவை செல்லப்பிராணியாகி விடுகிறது. வீடு கிடைக்காதவை சமூகத்தால் தொல்லை என பார்க்க படுகிறது. பார்க்கும் இடமெல்லாம் கல்லடி படுகிறது.
தெருநாய்கள் அடிவாங்குவதற்காககவும் வண்டியில் அடிபட்டு சாகவும் படைக்கப்பட்டதாக பார்க்கப் படுகிறது. பெரிய நாய் தெருவில் அடிபட்டு சாக, நாய்குட்டிகள் அதை தேடி அலைந்துகொண்டேயிருக்கும்.

தெருவில் அலைந்து அலைந்து
வியர்வையை விட இரத்தமே அதன் உடம்பின்மீது வழிகிறது. உணவுக்கு வழியின்றி பசியில் ஏங்கி ஏங்கி எச்சிலே அதற்க்கு இரத்தமாக உடம்பில் ஓடுகிறது.

இது அத்தனையும் நடந்து கொண்டிருக்கும் அதே தெருவில் காட்டிலிருந்து அது நம்பி வந்த மனிதகுலம் எந்த சம்மந்தமும் இல்லாமல் பரபரப்பாக போய்கொண்டிருக்கும். அவர்களுக்கு ஏறெடுத்து பார்க்கக் கூட நேரமில்லை என்பதை விட ஏறெடுத்து பார்த்தாலும் அலட்சியமே மறுமொழியாக இருக்கும் என்பதை உணரும் தெருநாயின் நிலை என்னவாக இருக்கும்?..

ஒரு விலங்கை வேறோடு இடம் பெயர்த்து அடியோடு அதன் குணத்தை உணவு முறையை மாற்றி வைத்தது யார் தவறு?.. அதற்கும் மாட்டுப் பாலுக்கும் என்ன சம்மந்தம்?. அதை அவைளுக்கு உணவாக கொடுத்தது யார்??.. தற்போது அவைகளுக்கு அதை தர மறுப்பது யார்??

ஆனா பாருங்க நன்றி கெட்ட நாய் என்ற சொல்லாடலை “நாம்” வைத்திருக்கிறோம். என்ன ஒரு முரண்?அவைகளுக்கு ஆதரவா இருக்க வேண்டியது யார் கடமை?.. சுற்றுலாவிற்க்கு செல்லும்போது அங்குள்ள விலங்குகளுக்கு உணவு கொடுக்க வேண்டாம் என சொல்வது இதற்காகத்தான்.

தெருநாய்களால் இன்று காட்டிற்கு சென்று வாழவும் முடியாது. நாட்டிற்க்குள் வாழ ஆதரவும் கிடையாது. தனக்கான உணவை அடைந்துகொள்ளவும் தெரியாது.
அதனால்தான் நீங்கள் சாப்பிடும்போதும் தெருவில் நின்று உங்கள் தட்டையே வெறித்து பார்த்து நாக்கை தொங்க போட்டுக்கொண்டிருக்கிறது. அதன் நாக்கில் இருந்து சொட்டச்சொட்ட வழிவது எச்சில் அல்ல. கைவிடப்பட்ட ஓர் விலங்கின் கண்ணீர். உங்கள் உணவை பரிமாறி அதை துடையுங்கள்.

இங்கு உனக்கு மடிக்கணிணி, மிக்சி, கிரைன்டர் தருகிறவர்கள் அதிகாரத்தில் அமர்தப்படுவது ஒழிந்து சிட்டுக்குருவிக்கும் மைனாவுக்கும் காக்கைக்கும் நாய்க்கும் பூனைக்கும் அணிலுக்கும் ஆடு மாடு கோழி வண்டு தேனீக்களுக்கும் சிங்கம் புலி கரடி யானை மானுக்குமான தேவையை நிறைவேற்றும் அரசியலை செய்ய விரும்புகிறவர்கள் அதிகாரத்தில் அமர்த்தபடுவது ஒன்றுதான் இந்த துயர்களை எல்லாம் துடைக்கும். அனைத்து உயிரினங்களுக்கும் சேர்ந்ததுதான் இந்த பூமி. அரசியல் அனைத்து உயிரிகளுக்குமானது.


நன்றி ஆக்கம்: –வருண் சுப்ரமணியம்,

Wednesday, January 2, 2019

How to cure Tonsillitis | அடிநாச்சதை அழற்சியை எப்படி சரி செய்வது


 அடிநாச்சதை அழற்சி (Tonsillitis) என்பது பெரும்பாலும் சிறுவயதில் வரக்கூடியத. இன்றய மருதுவத்தில் கிருமிகள், பாக்டீரியா மூலம் வரக்கூடியது எனக்கூறினாலும் நமது உள் உறுப்புகளில் ஏற்படும் குறைகளை சரி செய்ய ஏற்படும் ஒருவிதமான வீக்கம் உதரணத்திற்கு கைகளில் புண்கள் வரும்போது தொடைப்பகுதில் ஒரு வீக்கம் (நெரிகட்டு) ஏற்படும் அதுபோன்ற ஒன்றே.



 அடிநாச் சுரப்பிகள், அடிநாச்சதை அழற்சி, ஆரம்பநிலையில் வீட்டில் சரி செய்வது என்பது பற்றி பார்ப்போம்.




  அடிநாச் சுரப்பிகள் அல்லது அடிநாச் சதை என்பது மனித உடலின் மிகப்பெரிய நிணநீர்ச் சுரப்பிகளாகும். ஆங்கிலத்தில் இதனை டான்சில் (Tonsil) என்று கூறுவர். அடிநாச் சதை தொண்டையில் உணவுக்குழலுக்கு இருபுறமும் அமைந்துள்ளன. இவை முட்டை வடிவில் உள்ளன. தசையால் ஆனவை. இவை ஒரு வகையான நிணசீர் திசுவைச் சேர்ந்தவை. இவை வாயின் உட்புறத்தில் அமைந்துள்ளன. தொண்டைப் பகுதியின் உள்சுவற்றில் மூன்று வகை டான்ஸில்கள் உண்டு. இவற்றில் மேல் அண்ண டான்சிள்களே, வழக்கத்தில் டான்ஸில்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. இவை உள் நாசியறை தொண்டைப்பகுதியில் இணையும் இடத்திலுள்ளன. நாக்கின் அடிப்பரப்பில் உள்ள நிணநீர்ச் சுரப்பிகள் நாக்குப்புற டான்ஸில்கள் எனப்படும்.  மூசுக்குழல், உணவுக்குழல் இன்னும் அடுத்துள்ள பொந்துகளில் கிருமிகள்,பாக்டீரியா மற்றும் பிற வேதிப்போருட்களின் தாக்குதலிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன. எனினும் சில சமயங்களில் அடிநாச்சதை அழற்சி அடைவதுமுண்டு. அப்போது அப்பகுதி நுண்கிருமிகள் வாழுமிடமாக மாறிவிட ஏதுவாகிறது. மேலும்  ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு மிக விரைவாக பரவுகிறது. இருமல் அல்லது தும்மல் அல்லது சமூக தொடர்பு மூலம் பாக்டீரியா அல்லது வைரஸ் பரவுகிறது. அடிநாச்சதை அழற்சி பொதுவான அறிகுறிகள் தொண்டைப்புண், காய்ச்சல், தொண்டையில்லுள்ள வீங்கிய சுரப்பிகள்,  மூக்கு ஒழுகுதல், தலைவலி, கெட்ட மூச்சு, இருமல் மற்றும் தும்மல் ஆகியவை அடங்கும் இந்த நிலை பருவகால நிலைக்கேற் மாறுபடும்  மிதமான மற்றும் கடுமையானதாக இருக்கும்.

அத்தகைய தருணங்களில் இவ்வழற்சியைப் போக்க பல மருந்துகள் உள்ளன. எனினும், நீங்கள் இயற்கை சிகிச்சைகள் பயன்படுத்தி வீட்டில் அதை சிகிச்சை செய்யலாம். வீட்டு வைத்தியம் அறிகுறிகளை நிர்வகிக்க உதவுவதோடு தொற்றுநோயை எதிர்த்து போராடும்.




உப்பு நீர் |SALT WATER




ஒரு கப் சூடான நீரில் ஒரு தேக்கரண்டி உப்பு கலந்து. அதை தொண்டை பகுதியில் வைத்து சிறிது நேரம் கொப்பளிக்கவும் விழுங்க வேண்டாம் தண்ணீர் வெளியே துப்பிவிடவும். உப்பு வைரஸ் அல்லது பாக்டீரியா கொல்ல உதவும்  இதமான சுடுநீர் வலி மற்றும் வீக்கம் குறைக்க உதவுகிறது.விரைவான நிவாரணத்திற்கு  அடிக்கடி முடிந்தவரை இதை மீண்டும் செய்யவும்.




எலுமிச்சை| Lemon







எலுமிச்சையின் ஆன்டிவைரல், ஆன்டிபாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆகியவை தொற்றுநோயையும், வீக்கத்தையும் குறைக்கினன்றன. மேலும் அதில் உள்ள வைட்டமின் சி  நோய்த்தொற்றுக்கு  எதிர்ப்பை மேம்படுத்துகிறது.



  •  1.மிதமான சுடுநீர் தண்ணீர்  எலுமிச்சை சாறுடன்,  உப்பு ஒரு சிட்டிகை மற்றும் தேன் ஒரு தேக்கரண்டி கலந்து ஒரு சில நாட்களுக்கு இரண்டு முறை தினசரி மெதுவாக குடிக்கவும்.
  •  2..மாற்றாக, நீங்கள் எலுமிச்சை துண்டுடன் சிறிது உப்பு மற்றும் மிளகு தூவி, பின்னர் எலுமிச்சை சாறுடன் உறிஞ்சவும். இது உங்கள் தொண்டைக் குழியிலிருந்து கிருமிகள் வெளியேறுவதற்கு உதவுகிறது. ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று முறை செய்யுங்கள்.



துளசி இலை| Basil Leaves





துளசி இலை அதன் ஆன்டிவைரல் (Antiviral) மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் (Anti-inflammatory properties) டான்சில்ல்டிடிஸ் நோய்க்கான மற்றொரு மிகவும் பயனுள்ள மருந்தாகிறது. மேலும் இதன் பண்புகள் வீக்கம் மற்றும் வலி குறைக்கவும் போல் குணப்படுத்தவும் உதவுகிறது.
  • 10 முதல் 12 துளசி இலைகளை  அரை கப் தண்ணீரில் சேர்க்கவும் 10 நிமிடங்கள்       கொதிக்கவும்.
  • சிறிது எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்  தேன் ஒரு தேக்கரண்டி சேர்க்கவும்.

 இதை இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிக்க வேண்டும்.




மஞ்சள் | Turmeric





மஞ்சள் வலுவான அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் (Antiseptic) குணங்களின் காரணமாக அடிநாச்சதை அழற்சி தொற்றுவதற்கு எதிராக செயல்படுகிறது மேலும் எரிச்சலூட்டும் அறிகுறிகளை விடுவிக்கின்றது.

 ஒரு டம்ளர் பாலில் சிறிது மஞ்சள் தூளுடன் ஒரு சிறிது மிளகு தூள் சேர்த்து காய்ச்சி  சுவைக்காக பன்ங்கற்கண்டு சேர்த்து இரண்டு மூன்று நாட்களுக்கு இரவில் குடிக்கவும்.







 இலவங்கப்பட்டை | Cinnamon



இலவங்கப்பட்டையில் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் (Antimicrobial properties) அதிக அளவுள்ளது பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை  தடுக்கிறது மற்றும் வீக்கம், வலி  ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது.

ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூளை நீரில் கொதிக்கவைத்து இதில் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து இளம்சூட்டுடன்ன நாள் ஒன்றுக்கு இரண்டு முறை மூன்று நாள் குடித்துவரவும்.




புதினா | Mint



புதினா ஆண்டிமைக்ரோபியல் (Antimicrobial powers) சக்திகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது, எனவே இது தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைரஸை திறம்பட தாக்குகிறது. மேலும் புதினா உள்ள Menthol சளி சவ்வுகளில் எரிச்சலிருந்து நிவாரண கொடுக்கிறது. சிறிது புதினா இலைகளை சில நிமிடம் தண்ணீரில் கொதிக்க விடவும் தண்ணீர் பாதி அளவுக்கு வரும் வரை இதை கொதிக்க விடவும்.  தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து  இளம் சூடாக இருக்கும் போது அதை குடிக்கவும். ஒரு சில நாட்களுக்கு இதை ஒன்று அல்லது இரண்டு முறை குடிக்கவும். நீங்கள் டன்சைல்டிடிஸ் இருக்கும் வரை புதினா - கொதிக்க வைத்த நீரை வாய் முழுவதும் பரவுமாறு (Mouthwash ) கொப்பளிக்கவும்.


தவிர்க்கவேண்டியவைகள்


மிகவும் குளிர்ந்த ,  மிகவும் சூடான பானம் (Ice cream, Cooling water,), உணவை  தவிர்க்கவும்.




Reference: Books and other web source
இதில் கூறப்பட்டுள்ள உணவு, ஆசனம், மற்றும் பிரணாயாமம் எங்களின் அனுபவ அடிப்படையே இதை செயல் படுத்துவது உங்கள் சுயவிருப்பமே உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.


If you have any suggestion kindly write comment section.🙂

By K P Nathan PG Dip in Yoga and Holistic Health..... 

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...