This Blog for Education and Entertainment. About Traditional, Festival, Astrology, Politics, Nature ( Water, Earth, Trees, Animals, Birds), Devotional, Health care, Yoga, Pranayamam and Meditation .
Any healthy adult, both male and female, can donate blood . Men can donate safely once in every three months while women can donate every four months.
Good health of the donor must be fully ensured.
The Universally accepted criteria for donor selection are
Health conditions
The donor should be in a healthy state of mind and body they should fulfill the following criteria:
Past one year - not been treated for Rabies or received Hepatitis B immune globulin.
Past six months - not had a tattoo, Ear or skin piercing or acupuncture , not received blood or blood products, no serious illness or major surgery, no contact with a person with hepatitis or yellow jaundice.
Past three months - not donated blood or been treated for Malaria.
Past one month - had any immunizations.
Past 48 hours - taken any antibiotics or any other medication s (Allopathic or Ayurveda or Sidha or homeo).
Past 24 hours - taken alcoholic beverages.
Past 72 hours - had dental work or taken Aspirin.
Present - not suffering from cough, influenza or sore throat, common cold.
Women should not donate pregnant or breast feeding her child.
Women donor should not donate during her menstrual cycles.
Free from Diabetes, not suffering from chest pain, heart disease or high BP, Cancer, blood clotting problem or blood disease, unexplained fever, weight loss, fatigue, night sweats, enlarged lymph nodes in armpits, neck or groin, white patches in the mouth etc.
Ever had TB, bronchial asthma or allergic disorder, liver disease, kidney disease, fits or fainting, blue or purple spots on the skin or mucous membranes, received human pituitary - growth hormones etc.
Who are the eligible to blood donate? | இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள் யார்?
இந்திய தேசிய சின்னங்கள் | National symbols of India
குடியரசு இந்தியவிற்கு தனி அடையாள சின்னங்கள் உள்ளன அவை ஒவ்வொரு கால கட்டத்திலும் அவற்றின் சிறப்புக்காக நாட்டின் அடையாள சின்னங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டது இனி அவைகளைப்பற்றி பார்ப்போம்.
இந்திய தேசியக்கொடி ( NATIONAL FLAG )
சுதந்திர இந்தியாவின் அடையாளமான தேசியக்கொடி சுதந்திர போராட்ட வீரர்களின் உயிர் மூச்சாக கருதப்படுகிறது. இந்திய தேசியக்கொடி 1947 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22 ஆம் தேதியில் அங்கீகாரம் பெற்றது, மூன்று வண்ணங்களை கொண்டதால் மூவர்ணக் கொடி (TRICOLOUR FLAG) என்று அழைக்கப்படுகிறது.
மூன்று வர்ணத்தின் தத்துவம்,
காவி நிறம் (SAFFRON) - பலத்தையும், தைரியத்தையும் குறிக்கும்.
வெண்மை நிறம் (WHITE) - உண்மை மற்றும் அமைதியையும் குறிக்கும்.
பச்சை நிறம் (GREEN) - வளர்ச்சி, பசுமை மற்றும் விவசாயத்தின் செழிப்பைக் குறிக்கும்.
நடுவில் இடம் பெற்றுள்ள நீல நிற அசோக சக்கரம் வாழ்க்கை சுழற்சியை குறிக்கின்றது.
தேசிய சின்னம் ( NATIONAL EMBLEM )
அசோக சாரநாத் தூண் (Sarnath Lion Capital of Ashoka) தழுவலில் உருவக்கப்பட்டது நான்கு சிங்கங்கள் மூன்று முன்னாள் ஒரு சிங்கம் பின்னால் திரும்பி நிற்கும் தோற்றம் ஒரு மணி வடிவிலான தாமரை மீது
ஒரு யானை, நிழல் குதிரை, ஒரு காளை நடுவில் தர்மச்சக்கரம் என ஒரே பளபளப்பான கல்லில் செதுக்கப்பட்டது. 1950 ஜனவரி 26ல் இந்திய அரசால் ஏற்றுகொள்ளப்பட்டது. கீழே சத்தியமேவ ஜெயதே என்று தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
இது மத்திய அரசு அலுவலகம்கங்களில் வெவ்வெறு வண்ணங்களில் உயோகப்படுத்தபடுகிறது.
NATIONAL ANTHEM ( தேசிய கீதம் )
இந்தியவின் தேசிய கீதமான ஜன கன மனரபீந்திரநாத் தாகூர் மூலம் பெங்காலி மொழியில் இயற்றப்பட்டது. ஜனவரி 24, 1950 இல் இந்தியாவின் தேசிய கீதமாக
அரசியலமைப்புச் சட்டம் ஹிந்தியில் மொழில் பதிப்பித்தது.
இது 1911 ஆம்
ஆண்டு டிசம்பர் 27 இல் முதல் பாடப்பட்டது இந்திய தேசிய காங்கிரஸின் கொல்கத்தா மாநாட்டில் முதலில் பாடப்பட்டது.
இந்தியாவில் அணைத்து அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல்
பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும்
வழக்கம் உள்ளது.
NATIONAL SONG ( தேசியப்பாடல்)
இந்திய சுதந்திரத்திற்கான போராட்டத்தில் மக்களுக்கு உத்வேகம் அளித்த ''வந்தே மாதரம்'' பாடல் பாங்கிம்சந்திர சாட்டர்ஜியால் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட இது தேசிய கீதத்திற்கு சமமாக கருதப்படுகிறது.
1882ல் பங்கிம் சந்திரர் எழுதி வெளியிட்டஆனந்தமடம்என்ற நூலில் முதன்முதலில் காணப்பட்டது.எனினும், இப்பாடல் 1876லேயேஎழுதப்பட்டுவிட்டது. அப்பொழுது, ஜாதுனாத் பட்டாச்சார்யா இப்பாடலுக்கு
மெட்டமைத்துத் தந்தார்.
இந்தியாவின் தேசியப்பறவை மயில் (PEACOCK),ஒரு வண்ணமயமான பறவை, கண்ணைக்கவரும் இறகுகளை கொண்டது, கண்களுக்கு கீழ் ஒரு வெண்மையன திட்டு மற்றும் நீண்டமெல்லிய கழுத்து. ஆண் மயில் பெண்மையை விட மிகவும் வண்ணமயமான, ஒரு பளபளப்பான நீல மார்பக மற்றும் கழுத்து மற்றும்
சுமார் 200 நீள் இறகுகள் ஒரு கண்கவர் வெண்கல-பச்சை நிற தோகையும். பெண் பழுப்பு நிறமாகவும், ஆண் மயிலை விட சற்று
சிறியதாகவும், வால் இல்லாமலும் இருக்கிறது.
NATIONAL
ANIMAL (தேசிய விலங்கு )
வங்காள புலி
(Panthera Tigris Tigris) இந்திய துணைக் கண்டத்தில் மட்டுமே காணப்படும் அற்புதமான புலி. அடர் மஞ்சள்,வெண்மை நிறம் கலந்து கருமையான கோடுகளுடன் கம்பிரமான, கருணை, வலிமை, சுறுசுறுப்பு மற்றும் மகத்தான சக்தி ஆகியவற்றின் கலவையானது இந்தியாவின் தேசிய விலங்கினமாக புலிகளின் பெருமையைப் பெற்றது.
NATIONAL AQUATIC ANIMAL (தேசிய நீர் விலங்கு)
இந்திய துணைக் கண்டத்தில் மட்டுமே காணப்படும் ஒரு நன்னீர் அல்லது நதி டால்பின் ஆகும். இதில் இரு வகை உண்டு ஒன்று கங்கை நதி டால்பின் மற்றொன்று சிந்து நதி டால்பின் கங்கை நதி டால்பின் ஒரு துணிவுமிக்க, நெகிழ்வான, உடல் பெரிய flipper மற்றும் குறைந்த முக்கோண dorsal fin கொண்டிருக்கிறது. இது 150 கிலோ எடைவரையும் வளரக்ககூடியது. கன்றுகள் பிறப்பு சாக்லேட் பழுப்பு மற்றும் ஒரு மென்மையான மற்றும் முடியற்ற தோல் கொண்ட வயது முதிர்ந்தவை சாம்பல் பழுப்புபாக. பெண் ஆணை விட பெரியவை. இது சுத்தமான நீரில் மட்டுமே வாழ முடியும். கங்கை நதி டால்பின் புனிதத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
NATIONAL TREE (தேசிய மரம்)
இந்திய ஆலமரம் (Indian
Banyan)இந்தியாவின் தேசிய மரம் இதன் வேர்கள் படர்ந்து விரிந்து வளரக்குடியது இதன் வேர்களில் இருந்து புதிய மரங்கள் உருவக்கும் தன்மை உடையது. புராணகாலத்திலிருந்தே இதற்கு முக்கிய பங்குள்ளது. இன்றும் கிராமங்களில் இந்த மரத்தடியில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகின்றது. ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள (Thimmamma
Marrimanu) திம்மம்மா மரிமானு, உலகிலேயே மிகப்பெரிய மர மாதிரியாகும்.
NATIONAL FLOWER ( தேசியமலர் )
தாமரை (Nelumbo Nucifera Gaertn)இந்தியாவின்தேசியமலர்ஆகும். தாமரைஎன்பதுதூய்மை, செல்வம்மற்றும்வெளிச்சத்தின்சின்னமாகும். அழுக்குநீரில்வளர்ந்துவந்தாலும், தாமரைஎப்போதும்தூயமற்றும்அழகாஉள்ளது. இதன்கலைமதிப்புமட்டுமல்லது, மருத்துவ, பொருளாதாரமற்றும்உணவுஎன பல்வேறு வகையில் பயன்படுகிறது பண்டையஇந்தியாவின்
தேசியபழமாக அறிவிக்கப்பட்டது. உலகம்முழுவதும்மாம்பழங்களின்மொத்தசாகுபடியில்இந்தியா 43% உற்பத்தி செய்கிறது. நம்முடையநாட்டிற்குமட்டுமல்லாமல், மாம்பழம்பாக்கிஸ்தான்மற்றும்பிலிப்பைன்ஸின்தேசியபழம்ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மாம்பாழத்தின் முக்கியதுவத்தை போற்றும் வகையில் டெல்லில் மாங்கனி திருவிழா கொண்டாடப்படுகிறது.
NATIONAL SPORT (தேசிய விளையாட்டு)
இந்திய விளையாட்டாக
ஹாக்கி (Hockey) கருதப்படுகிறது, இந்திய ஹாக்கி ஃபெடரேஷன்(The Indian Hockey Federation) 1925 இல் நிறுவப்பட்டது. இந்திய ஹாக்கி நியூசிலாந்திற்கு முதல் சர்வதேச சுற்றுப்பயணத்தை நடத்தியது, அவர்கள் 21 போட்டிகளில் விளையாடினர், 18 வெற்றி பெற்றனர், 2 சமமாக முடிந்தது1 தோல்வியில் முடிந்தது. நீண்டகாலமாக, ஹாக்கிஒலிம்பிக்போட்டிகளில்அதன்நட்சத்திரநிகழ்ச்சிகளால்இந்தியாவின்தேசியவிளையாட்டுஎன்றுகருதப்பட்டது. ஆனால் 2012 ஆகஸ்டில், இளைஞர்விவகாரங்களுக்கானமத்தியஅமைச்சகம், தேசியவிளையாட்டுஎன்றுஅதிகாரப்பூர்வமாகநியமிக்கப்பட்டஒருவிளையாட்டுஇந்தியாவில்இல்லைஎன்றுஅறிவித்தது. இந்தியாவின்தேசியஇணையதளத்தில்கூடநாட்டில்தேசியவிளையாட்டாகவிளையாட்டாக ஏற்றுக் கொள்ளப்பட்டதால் பலருக்கு இது அதிர்ச்சியாக அமைகிறது
NATIONAL CURRENCY (தேசிய நாணயம்)
இந்திய ரூபாயின் சின்னம் (The symbol of Indian
Rupee)இந்தியாவின் சர்வதேச அடையாளங்கள் பண பரிவர்த்தனைகள் மற்றும் பொருளாதார வலிமை
ஆகியவற்றைக் குறிக்கின்றன.
இந்த சின்னம் ரோமானிய எழுத்தான "R" என்ற எழுத்தில் இரண்டு இணை கிடைமட்ட கோடுகள்தேசிய கொடியை குறிக்கும். ஜூலை 15, 2010 அன்று இந்திய அரசால் இந்திய ரூபாய்
அடையாளம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய இன்ஸ்டிடியூட் ஆப்
டெக்னாலஜி பாம்பேயின் வடிவமைப்பில் ஒரு முனைவர் பட்டம் பெற்ற உதய குமார் என்பவர் மூலம் உருவாக்கப்பட்டது.
Reference: Books and other web source
If you have any suggestion kindly write comment section.🙂
By Nathan B Com,PG Dip in Yoga and Holistic Heath, PG Dip in Fire And Safety.....
இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும்
தனக்கான உணவை தானே தேடிக்கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும்.
ஆடு மாடு உள்ளிட்ட விலங்குகள் மேய்ந்து கொள்ள
புற்கள் இலை தலைகள் தங்களை வழங்கிவிடுகிறது.ஆனால் இந்த நாய்கள் மட்டும் ஏன் மனிதன்
கொடுத்தால்தான் உணவு உண்டு உயிர் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது.?
உங்கள் வீட்டில் மனக்க மனக்க சமையல்
தயாராகிகொண்டிருக்கும் போது உங்கள் வீட்டையே ஏக்கத்துடன் சுற்றி சுற்றி ஏன்
வருகிறது??வீட்டிற்க்குள் இருந்து யாராவதும் வந்து அந்த
உணவிலிருந்து ஏதாவதும் ஒரு சிறு பங்கை தூக்கி வீச மாட்டார்களா என ஏன் நப்பாசை
கொள்கிறது..?
சாலையோர கடையிலோ தள்ளு வண்டிகடையிலோ நீங்கள்
திண்பண்டங்களை ருசித்துக் கொண்டிருக்கும் போது கல்லை தவிற வேறெதாவதும் வந்து
விழாதா என வெறித்து வெறித்து பார்த்து ஏன் இடையூறு செய்கிறது..?
குறிஞ்சி,
முல்லை என நகர்ந்து மருத நிலத்திற்க்கு
மனிதகுலம் இடம்பெயருகிறது. மருத நிலத்தில் ஆற்றங்கரையோரம் வயல்களை உருவாக்குகி
வேளாண்மை செய்து தனக்கான உணவை தானே உற்பத்திசெய்கிறது. குகையில் வாழ்ந்து பழகியவன்
வீடுகட்டி வாழ பழகுகிறான். சிந்து சமவெளி மனித நாகரீகம் பிறக்கிறது. காடுகளில்
இருந்து வந்த மனிதன் இன்று நாகரீக, பொருளாதார,
சிந்தனை, அறிவியல்,
குற்ற வளர்ச்சியில் உச்சத்தை எட்டிவிட்டான்.
“தெருநாய்களுக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்” என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மூளையில் கசிந்திருக்கும்.
சொல்கிறேன்….
ஆதிமனிதன் முதன் முதலில் மருத நிலம் நோக்கி
வரும்போதும் அவன் மட்டும் வரவில்லை.தனக்கு பயன்படகூடிய தன்னால் அடக்கி ஆளக்கூடிய
காட்டு விலங்குகலான ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளையும் தன்னோடு அழைத்தே
வந்தான்.
அவற்றுள் முதன்மையான விலங்கினம் “நாய்”.”ஆதி மனிதனுக்கு முதல் நண்பனே நாய் தான்”.
நரி, ஓநாய், செந்நாய் குடும்பவகையை சேர்ந்தது தான் நாயும்.
அவற்றை போல நாயும் ஒரு வேட்டையாடும் காட்டு விலங்குதான். அவைகளுக்கு இருந்த எல்லா
குணமும் நாய்க்கும் இருந்தது. ஒரு குணம் மட்டும் அதிகமாக இருந்தது. அதுதான் நாயை
இன்று தெருவில் அலையவிட்டிருக்கிறது. அதுதான் அன்பும் நன்றியுணர்வும்….. அன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்…
ஏன் தெரு மாடுகள் இல்லை?
ஏன் தெரு ஆடுகள் இல்லை?
ஏன் தெரு கோழிகள் இல்லை?
ஏன் தெரு பன்றிகள் இல்லை?
ஏன் “தெரு நாய்கள்” மட்டும் உள்ளது?
ஆடு மாடுகளின் காம உணர்வு மதிக்கப்படுமளவிற்க்கு
நாய்களின் காம உணர்வு ஏன் மதிக்கப்படாமல் இழிவுபடுத்தப்படுகிறது? ஏன்?????….. .
ஆடுகளின் இறைச்சியும் மாட்டு பாலும் கோழி முட்டை
மற்றும் இறைச்சியும் ஆதிகாலம் முதல் இன்றுவரை மனிதகுலத்திற்க்கு தேவைப்படுகிறது.
மிகப்பெறிய சந்தையாகவே உருவெடுத்திருக்கிறது.
எலிதொல்லைகள் நமக்கு இருக்கும் வரை பூனை
பாக்கியசாலிதான். ஆனால், அன்பை தவிற வேறு எதியுமே கொடுக்க முடியாததால்
கைவிடப்பட்டு தெருவில் அலையும் தகுதியை நாய் பெற்றுவிட்டது.
வேளான்மை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் முயல், காட்டுப் பூணை போன்றவற்றை மனிதன் வேட்டையாடி பொழுதுபோக்கிற்காக நாய்
தேவைப்பட்டது. இன்று வேளாண் செய்வதே போராட்டமாகவும் மீத்தேன், கெயில், ஹைட்ரோ கார்பன், காவிரி உரிமை என போராட்டமே வேளாண்குடிகளுக்கு
பொழுதுபோக்காக ஆகிவிட்டது.
வீட்டை காவல் காக்கும் இடத்தை சீ.சீ.டீவிகள் (CCTV) நிரப்பியதால்
வீட்டின் மதிப்பிற்கேற்ப்ப சில வீடுகளில் நாய் வீட்டிற்கு உள்ளேயும் சில நாய்
வீட்டிற்கு வெளியேயும் போனது. பல நாய்களுக்கு தெருவே வீடாகி போனது.
மனிதன் social
animal (சமூக விலங்கு) என்றால் நாய் கிட்டத்தட்ட semi social animal ஆகிவிட்டது. உங்களோடு அதற்கு பேச மட்டும் தான்
தெரியாது. உங்கள் மொழியை புரிந்து கொள்ளும்,.
நீங்கள் பேசுவதை புரிந்து கொள்ளும்,. உங்கள் நண்பர் யார் பகைவர் யார் என தெரியும்,. உங்கள் வண்டியின் சத்தத்தை இரண்டு கிலோ
மீட்டருக்கு முன்பே கணித்து வாலாட்ட தெரியும். உங்கள் குழந்தை அழுதால் ஓடிவந்து
சன்னல் ஓரத்தில் அவ்,….அவ்,…அவ்,…என சிணுங்கத்தெரியும்.
உங்கள் வீட்டு வாண்டுகள் அடித்தால் திருப்பி
தாக்காமல் விளையாட்டு காட்ட தெரியும். உங்கள் வீட்டில் அக்காவோ தங்கச்சியோ அவள்
வரைந்த கோலத்தை மிதித்து திட்டுவாங்கியிருக்கும் ஆனால் அவள் திருமணமாகி சென்றுவிட்டால்
மூலையில் படுத்து கவலைப்படும்.
வெளியூருக்கு போய் வந்த நம் அப்பாவை பார்ததும்
முன்னங்கால்களை தூக்கி மாரில் வைத்து தாடையை நக்கும். வாலை ஆட்டிக்கொண்டு மளிகை
கடைக்கு அம்மாவோடு கூடவே போய்ட்டு வரும். உங்களுக்கு யாரின் மூலமாவதும் தீங்கா?.. ஒரு கை பார்த்துவிடும். இவை அத்தனையையும் செய்ய அடைக்களமாக ஒரு வீடு எல்லா
நாய்களுக்கும் கிடைப்பதில்லை.
அப்போ, வீடு இல்லாத நாய்களின் நிலை???
வீடு கிடைத்தவை செல்லப்பிராணியாகி விடுகிறது.
வீடு கிடைக்காதவை சமூகத்தால் தொல்லை என பார்க்க படுகிறது. பார்க்கும் இடமெல்லாம்
கல்லடி படுகிறது.
தெருநாய்கள் அடிவாங்குவதற்காககவும் வண்டியில்
அடிபட்டு சாகவும் படைக்கப்பட்டதாக பார்க்கப் படுகிறது. பெரிய நாய் தெருவில்
அடிபட்டு சாக, நாய்குட்டிகள் அதை தேடி
அலைந்துகொண்டேயிருக்கும்.
தெருவில் அலைந்து அலைந்து
வியர்வையை விட இரத்தமே அதன் உடம்பின்மீது வழிகிறது.
உணவுக்கு வழியின்றி பசியில் ஏங்கி ஏங்கி எச்சிலே அதற்க்கு இரத்தமாக உடம்பில்
ஓடுகிறது.
இது அத்தனையும் நடந்து கொண்டிருக்கும் அதே
தெருவில் காட்டிலிருந்து அது நம்பி வந்த மனிதகுலம் எந்த சம்மந்தமும் இல்லாமல்
பரபரப்பாக போய்கொண்டிருக்கும். அவர்களுக்கு ஏறெடுத்து பார்க்கக் கூட நேரமில்லை
என்பதை விட ஏறெடுத்து பார்த்தாலும் அலட்சியமே மறுமொழியாக இருக்கும் என்பதை உணரும்
தெருநாயின் நிலை என்னவாக இருக்கும்?..
ஒரு விலங்கை வேறோடு இடம் பெயர்த்து அடியோடு அதன்
குணத்தை உணவு முறையை மாற்றி வைத்தது யார் தவறு?..
அதற்கும் மாட்டுப் பாலுக்கும் என்ன சம்மந்தம்?. அதை அவைளுக்கு உணவாக கொடுத்தது யார்??..
தற்போது அவைகளுக்கு அதை தர மறுப்பது யார்??
ஆனா பாருங்க நன்றி கெட்ட நாய் என்ற சொல்லாடலை “நாம்” வைத்திருக்கிறோம். என்ன ஒரு முரண்?அவைகளுக்கு ஆதரவா இருக்க வேண்டியது யார் கடமை?.. சுற்றுலாவிற்க்கு செல்லும்போது அங்குள்ள
விலங்குகளுக்கு உணவு கொடுக்க வேண்டாம் என
சொல்வது இதற்காகத்தான்.
தெருநாய்களால் இன்று காட்டிற்கு சென்று வாழவும்
முடியாது. நாட்டிற்க்குள் வாழ ஆதரவும் கிடையாது. தனக்கான உணவை அடைந்துகொள்ளவும்
தெரியாது.
அதனால்தான் நீங்கள் சாப்பிடும்போதும் தெருவில்
நின்று உங்கள் தட்டையே வெறித்து பார்த்து நாக்கை தொங்க போட்டுக்கொண்டிருக்கிறது.
அதன் நாக்கில் இருந்து சொட்டச்சொட்ட வழிவது எச்சில் அல்ல. கைவிடப்பட்ட ஓர்
விலங்கின் கண்ணீர். உங்கள் உணவை பரிமாறி அதை துடையுங்கள்.
இங்கு உனக்கு மடிக்கணிணி, மிக்சி, கிரைன்டர் தருகிறவர்கள் அதிகாரத்தில்
அமர்தப்படுவது ஒழிந்து சிட்டுக்குருவிக்கும் மைனாவுக்கும் காக்கைக்கும் நாய்க்கும்
பூனைக்கும் அணிலுக்கும் ஆடு மாடு கோழி வண்டு தேனீக்களுக்கும் சிங்கம் புலி கரடி
யானை மானுக்குமான தேவையை நிறைவேற்றும் அரசியலை செய்ய விரும்புகிறவர்கள்
அதிகாரத்தில் அமர்த்தபடுவது ஒன்றுதான் இந்த துயர்களை எல்லாம் துடைக்கும். அனைத்து
உயிரினங்களுக்கும் சேர்ந்ததுதான் இந்த பூமி. அரசியல் அனைத்து உயிரிகளுக்குமானது.