ஆடி மாதம் வந்தால் மாரி அம்மன் கோயில்களில் கொண்டாடும் முக்கியமான திருவிழா முளைப்பாரி திருவிழா இன்றும் கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளிம் கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும்.
மாரி என்றால் மழை என பொருள் மழையை கொண்டாடுவதால் மாரியம்மன் திருவிழா என அழைக்கபடுகின்றது
எனவே முளைப்பாரியாய் மாரியம்மனாக பார்ப்பார்கள்.
முளைப்பாரி வரலாற்று சான்று கோவலன், கண்ணகி திருமணவிழாவில் பெண்கள் முளைப்பாரி (முளைப்பாலிகை என குறிப்பிடுகிறது) எடுத்து வந்தாக சிலப்பதிகாரம் கூறுகிறாது.
விழா துவங்குபோது வேப்பிலை காப்பு கட்டுவர். எதிர்மறை சக்திகளிடமிருந்து (Negative Energy) பாதுகாப்பதாக நம்பிக்கை. அதே நேரத்தில் ஊரில் திருவிழா விழா
எடுக்கும் போது வேறு வேலையாக வெளியூர் சென்றால் ஊரில் விழா தொடர்பான வேலை ஆட்கள்
தேவை. எனவே கொடித்தடை என கூறுவர்.
இன்று நாம் விவசாயம் செய்ய விதையை ஆய்வுக்கு ( Seed Testing Lab) கொண்டு சென்றால் இந்த விதை எந்த மண்ணில் எவ்வளவு மகசூல் தரும் என ஆய்வு செய்து கூறிவிடுவர்.
நம் முன்னோர்கள் ஆய்வுக்கூடம் இல்லாத காலத்தில் விதையின் தன்மை அறிய முந்தைய ஆண்டு சேமித்த தானியம், இன்னும் பிற பயறு வகைகளை விவசாயம் பற்றி நன்கு அறிந்த வயது முதிர்ந்தவர்களிடம் கொடுத்துவிடுவர். அவர்கள் ஊருக்கு பொதுவான இடத்தில் காற்று மற்றும் வெளிச்சம் புகாத குடில் அமைத்து அங்கு சிறு சிறு மண் சட்டிகளில் இந்த விதைகளை தரம் பிரித்து வளர்த்து
வருவர்.
தாவரங்கள் தன் உணவை பச்சையத்தை (Chlorophyll) கொண்டு சூரிய ஒளிச்சேர்க்கை மூலம் தயாரிக்கும், அவ்வாறு சூரிய வெளிச்சம் இல்லாமல் வளரும்
விதை தரமானது.
தினமும் சூரிய மறைவுக்குபின் வெளியே எடுத்து பெண்கள் அதனை சுற்றி கும்மி கொட்டுவர். பின் இரவே இருளில் வைத்துவிடுவர். பத்து நாட்கள் பராமரித்து எது விளைச்சலுக்கு ஏற்றது என
அறிந்தபின் அவ்வாறு வளர்த்த தாவரங்களை எடுத்து ஊர் முழுவதும் சுற்றி வந்து நீர்
நிலைகளில் கரைத்துவிடுவர்.
மறுநாள் அனைவரும் மஞ்சள் பொடியை நீரில் கரைத்து ஒருவர் மீது ஒருவர் ஊற்றி விளையாடுவர். இது மகிழ்ச்சிக்காக செய்வதாக இருந்தாலும் இதன் அறிவியல் பின்புலம் விழா எனும்போது பலர்
ஒரே இடத்தில் ஒன்று கூடும் போது எச்சில், வேர்வை, மற்றும் பல கழிவுகள் சேரும் போது தொற்று எற்பட வாய்ப்புகள்
அதிகம் மஞ்சள் நல்ல கிருமிநாசினியாக (Antibiotic) செயல் படும்.
அடுத்து பொது விருந்து நடைபெறும் இதில் ஊரில் உள்ள அனைவரும் சேர்ந்து உணவருந்துவர். இதனால் சமத்துவம் வளரும்.
இவ்வாறு ஒவ்வொரு செயலையும் நம் முன்னோர்கள் ஆய்ந்து செய்தனர் இன்று நாம் அதை விடுத்து
அர்த்தமில்லாமல் தெருவுக்கு தெரு முளைப்பாரி விழா என கொண்டாடி வருகின்றனர். இங்கு வசூல் செய்யும் பணம் முறையாக
செலவு செய்யப்படுவதில்லை மேலும் பல பிரச்சனைகலளை உருவாக்கி வருகின்றனர்.
விவசாயப் பின்னணியில்லா நகர்ப்புற பகுதியில் விழா எடுக்கும் போது வசூல் செய்யும் பணத்தை
புறநகர் பகுதியில் மரம் நடலாம், அல்லது அருகில் உள்ள கிராமத்திற்கு விவசாயத்திற்கு தேவையான பொருள்
உதவி செய்யலாம்.
இதனால் மழை வளம் பெறலாம். இது போன்ற மாரி திருவிழாவும் கொண்டாடலாம் அனைவரும் மகிழ்ச்சியாக.
மரம் வளர்ப்பதே உண்மையான நதி நீர் இணைப்பு.
கங்கை நீர் ஆவியாகி காவிரியில் கலக்கும்.
-வேளான் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார்
மரம் வளர்ப்போம், மழை பெருவோம்.
மரம் வளர்ப்போம், மழை பெருவோம்.