Wednesday, May 5, 2021

கருமருது | ஒரு அழகு மற்றும் நிழல் தரும் மரம்| Indian laurel

 


Tenminalia spp.

ஓங்கி உயர்ந்து வளர்ந்து நிழல் தரும்

மருத மர இனத்தைச் சார்ந்த இம்மரங்களில் இரண்டு நெருங்கிய சிற்றினங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.

1.Terminalia elliptica

2.Terminalia tomentosa

இவை இரண்டையுமே தமிழில்  கருமருது என்றே அழைக்கப்படுகிறது.

Terminalia arjuna என்பதை தமிழில் மருது,வெண்மருது மற்றும் நீர் மருது என அழைக்கப்படுகிறது.

கரு மருது  தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, இந்தியா,நேப்பாளம், வங்காளதேசத்தில் அதிகம்  காணப்படுகிறது.  உயரமாக வளரக்கூடிய இதன் இலைகளைப் பட்டுப்பூச்சி உணவாக உண்கிறது.இம்மரங்கள் ஆற்றோரங்களிலும்  வயலோரங்களிலும்  செழித்து வளரும்.

வைகை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதியாக இருந்த காரணத்தால் அவ்வூர் மருததுறை என அழைக்கப்பட்டு பின்னர் மருதை எனவும் மதுரை என்றும் மருவிற்று என கூறப்படுகிறது.

ஐந்திணை நிலங்களில் மருதமரம் நிறைந்த வயல் வெளிகள் மருத நிலமாக தமிழில் வகைப்படுத்தப்படுகிறது.இதிலிருந்து நமது முன்னோர்கள் மருத மரங்களுக்களுக்களித்தமுக்கியத்துவத்தை அறிய முடிகிறது.

கருமருதின் இரண்டு வகைகளுமே தென்னிந்தியாவின் இலையுதிர் காடுகளில் 1000 மீட்டர் உயரம் வரை காணப்படுகின்றன. 

இம்மரங்கள் 30 மீட்டர் உயரமும், அடிமரம் 1 மீட்டர் குறுக்களவும் கொண்டவை.

வெண் மருதுவிற்கும் கருமருதுவிற்கும் உள்ள எளிதான வித்தியாசம் யாதெனில்,கருமருது பட்டையானது வெண் மருதைப்போல் மிருதுவாகவும்,வெண்மையாகவும் இருப்பதில்லை. இதன் பட்டைகள் வெடிப்புற்று பழுப்பு நிறத்தில் முதலைத்தோல் போல் காட்சியளிக்கும்.இதன் பட்டைகள் நெருப்பினை தாங்கும் சக்தி படைத்தவை.இதன் பட்டைகள் மருத்துவத்தில் வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்த பயன்படுகிறது.இப்பட்டைகளிலிருந்து ஆக்ஸாலிக் அமிலம் பிரித்தெடுக்கப்படுகிறது.மேலும் பட்டைகள் தோல் பதனிடும் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றன.


இம்மரங்களின் இரண்டு இனங்களுமே உறுதியான வைரப்பகுதியை கொண்டிருப்பதால்,மரச்சாமான்கள் செய்யவும்,படகு கட்டவும், கிட்டார் போன்ற இசைக்கருவிகள் செய்யவும் பயன்படுகின்றன.

Terminalia tomentosa இன கருமருத மரங்கள் தங்கள் அடிமரப்பகுதிகளில் நீரை தேக்கி வைக்கும் குணம் கொண்டவை.கோடை காலங்களில் தங்கள் தாகத்தை தணித்துக் கொள்ள காடுகளில் பயணிப்பவர்கள் இம்மரத்தில் சிறு காயங்களை ஏற்படுத்தி பீறிட்டு வரும் நீரை குடிநீராக பயன்படுத்துவர்.இக்குடிநீர் வயிறு சம்பந்தமான நோய்களை தீர்க்கவல்லது.



இதன் மலர்கள் நீண்ட காம்புகளில் மங்கலான வெண் நிறத்தில் இருக்கும்.இம்மரங்கள் சுற்றுச் சூழல் காக்கவும்,நிழலுக்காகவும், இதன் தோற்றத்திற்காகவும் பூங்காக்கள்,சாலை ஓரங்கள் மற்றும்  ஆற்றங்கரைகளில் வளர்க்கப்படுகின்றன. 

சமூக காடுகளிலும் இம்மரங்களை மற்ற மரங்களுடன் சேர்த்து வளர்க்கலாம்.

                           அரவிந்தன்

இது போன்று மேலும் பல பயனுள்ள குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath...

No comments:

Post a Comment

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...