Wednesday, January 2, 2019

How to cure Tonsillitis | அடிநாச்சதை அழற்சியை எப்படி சரி செய்வது


 அடிநாச்சதை அழற்சி (Tonsillitis) என்பது பெரும்பாலும் சிறுவயதில் வரக்கூடியத. இன்றய மருதுவத்தில் கிருமிகள், பாக்டீரியா மூலம் வரக்கூடியது எனக்கூறினாலும் நமது உள் உறுப்புகளில் ஏற்படும் குறைகளை சரி செய்ய ஏற்படும் ஒருவிதமான வீக்கம் உதரணத்திற்கு கைகளில் புண்கள் வரும்போது தொடைப்பகுதில் ஒரு வீக்கம் (நெரிகட்டு) ஏற்படும் அதுபோன்ற ஒன்றே.



 அடிநாச் சுரப்பிகள், அடிநாச்சதை அழற்சி, ஆரம்பநிலையில் வீட்டில் சரி செய்வது என்பது பற்றி பார்ப்போம்.




  அடிநாச் சுரப்பிகள் அல்லது அடிநாச் சதை என்பது மனித உடலின் மிகப்பெரிய நிணநீர்ச் சுரப்பிகளாகும். ஆங்கிலத்தில் இதனை டான்சில் (Tonsil) என்று கூறுவர். அடிநாச் சதை தொண்டையில் உணவுக்குழலுக்கு இருபுறமும் அமைந்துள்ளன. இவை முட்டை வடிவில் உள்ளன. தசையால் ஆனவை. இவை ஒரு வகையான நிணசீர் திசுவைச் சேர்ந்தவை. இவை வாயின் உட்புறத்தில் அமைந்துள்ளன. தொண்டைப் பகுதியின் உள்சுவற்றில் மூன்று வகை டான்ஸில்கள் உண்டு. இவற்றில் மேல் அண்ண டான்சிள்களே, வழக்கத்தில் டான்ஸில்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. இவை உள் நாசியறை தொண்டைப்பகுதியில் இணையும் இடத்திலுள்ளன. நாக்கின் அடிப்பரப்பில் உள்ள நிணநீர்ச் சுரப்பிகள் நாக்குப்புற டான்ஸில்கள் எனப்படும்.  மூசுக்குழல், உணவுக்குழல் இன்னும் அடுத்துள்ள பொந்துகளில் கிருமிகள்,பாக்டீரியா மற்றும் பிற வேதிப்போருட்களின் தாக்குதலிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன. எனினும் சில சமயங்களில் அடிநாச்சதை அழற்சி அடைவதுமுண்டு. அப்போது அப்பகுதி நுண்கிருமிகள் வாழுமிடமாக மாறிவிட ஏதுவாகிறது. மேலும்  ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு மிக விரைவாக பரவுகிறது. இருமல் அல்லது தும்மல் அல்லது சமூக தொடர்பு மூலம் பாக்டீரியா அல்லது வைரஸ் பரவுகிறது. அடிநாச்சதை அழற்சி பொதுவான அறிகுறிகள் தொண்டைப்புண், காய்ச்சல், தொண்டையில்லுள்ள வீங்கிய சுரப்பிகள்,  மூக்கு ஒழுகுதல், தலைவலி, கெட்ட மூச்சு, இருமல் மற்றும் தும்மல் ஆகியவை அடங்கும் இந்த நிலை பருவகால நிலைக்கேற் மாறுபடும்  மிதமான மற்றும் கடுமையானதாக இருக்கும்.

அத்தகைய தருணங்களில் இவ்வழற்சியைப் போக்க பல மருந்துகள் உள்ளன. எனினும், நீங்கள் இயற்கை சிகிச்சைகள் பயன்படுத்தி வீட்டில் அதை சிகிச்சை செய்யலாம். வீட்டு வைத்தியம் அறிகுறிகளை நிர்வகிக்க உதவுவதோடு தொற்றுநோயை எதிர்த்து போராடும்.




உப்பு நீர் |SALT WATER




ஒரு கப் சூடான நீரில் ஒரு தேக்கரண்டி உப்பு கலந்து. அதை தொண்டை பகுதியில் வைத்து சிறிது நேரம் கொப்பளிக்கவும் விழுங்க வேண்டாம் தண்ணீர் வெளியே துப்பிவிடவும். உப்பு வைரஸ் அல்லது பாக்டீரியா கொல்ல உதவும்  இதமான சுடுநீர் வலி மற்றும் வீக்கம் குறைக்க உதவுகிறது.விரைவான நிவாரணத்திற்கு  அடிக்கடி முடிந்தவரை இதை மீண்டும் செய்யவும்.




எலுமிச்சை| Lemon







எலுமிச்சையின் ஆன்டிவைரல், ஆன்டிபாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆகியவை தொற்றுநோயையும், வீக்கத்தையும் குறைக்கினன்றன. மேலும் தில்ள்ள வைட்டமின் சி  நோய்த்தொற்றுக்கு  எதிர்ப்பை மேம்படுத்துகிறது.



  •  1.மிதமா சுடுநீர் தண்ணீர்  எலுமிச்சை சாறுடன்,  உப்பு ஒரு சிட்டிகை மற்றும் தேன் ஒரு தேக்கரண்டி கலந்து ஒரு சில நாட்களுக்கு இரண்டு முறை தினசரி மெதுவாக குடிக்கவும்.
  •  2..மாற்றாக, நீங்கள் எலுமிச்சை துண்டுடன் சிறிது உப்பு மற்றும் மிளகு தூவி, பின்னர் எலுமிச்சை சாறுடன் உறிஞ்சவும். இது உங்கள் தொண்டைக் குழியிலிருந்து கிருமிகள் வெளியேறுவதற்கு உதவுகிறது. ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று முறை செய்யுங்கள்.



துளசி இலை| Basil Leaves





துளசி இலை அதன் ஆன்டிவைரல் (Antiviral) மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் (Anti-inflammatory properties) டான்சில்ல்டிடிஸ் நோய்க்கான மற்றொரு மிகவும் பயனுள்ள மருந்தாகிறது. மேலும் இதன் பண்புகள் வீக்கம் மற்றும் வலி குறைக்கவும் போல் குணப்படுத்தவும் உதவுகிறது.
  • 10 முதல் 12 துளசி இலைகளை  அரை கப் தண்ணீரில் சேர்க்கவும் 10 நிமிடங்கள்       கொதிக்கவும்.
  • சிறிது எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்  தேன் ஒரு தேக்கரண்டி சேர்க்கவும்.

 இதை இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிக்க வேண்டும்.




மஞ்சள் | Turmeric





மஞ்சள் வலுவான அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் (Antiseptic) குணங்களின் காரணமாக அடிநாச்சதை அழற்சி தொற்றுவதற்கு எதிராக செயல்படுகிறது மேலும் எரிச்சலூட்டும் அறிகுறிகளை விடுவிக்கின்றது.

 ஒரு டம்ளர் பாலில் சிறிது மஞ்சள் தூளுடன் ஒரு சிறிது மிளகு தூள் சேர்த்து காய்ச்சி  சுவைக்காக பன்ங்கற்கண்டு சேர்த்து இரண்டு மூன்று நாட்களுக்கு இரவில் குடிக்கவும்.







 இலவங்கப்பட்டை | Cinnamon



இலவங்கப்பட்டையில் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் (Antimicrobial properties) அதிக அளவுள்ளது பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை  தடுக்கிறது மற்றும் வீக்கம், வலி  ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது.

ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூளை நீரில் கொதிக்கவைத்து இதில் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து இளம்சூட்டுடன்ன நாள் ஒன்றுக்கு இரண்டு முறை மூன்று நாள் குடித்துவரவும்.




புதினா | Mint



புதினா ஆண்டிமைக்ரோபியல் (Antimicrobial powers) சக்திகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது, எனவே இது தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைரஸை திறம்பட தாக்குகிறது. மேலும் புதினா உள்ள Menthol சளி சவ்வுகளில் எரிச்சலிருந்து நிவாரண கொடுக்கிறது. சிறிது புதினா இலைகளை சில நிமிடம் தண்ணீரில் கொதிக்க விடவும் தண்ணீர் பாதி அளவுக்கு வரும் வரை இதை கொதிக்க விடவும்.  தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து  ம் சூடாக இருக்கும் போது அதை குடிக்கவும். ஒரு சில நாட்களுக்கு இதை ஒன்று அல்லது இரண்டு முறை குடிக்கவும். நீங்கள் டன்சைல்டிடிஸ் இருக்கும் வரை புதினா - கொதிக்க வைத்த நீரை வாய் முழுவதும் பரவுமாறு (Mouthwash ) கொப்பளிக்கவும்.


தவிர்க்கவேண்டியவைகள்


மிகவும் குளிர்ந்த ,  மிகவும் சூடான பானம் (Ice cream, Cooling water,), உணவை  தவிர்க்கவும்.




Reference: Books and other web source
இதில் கூறப்பட்டுள்ள உணவு, ஆசனம், மற்றும் பிரணாயாமம் எங்களின் அனுபவ அடிப்படையே இதை செயல் படுத்துவது உங்கள் சுயவிருப்பமே உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.


If you have any suggestion kindly write comment section.🙂

By K P Nathan PG Dip in Yoga and Holistic Health..... 

No comments:

Post a Comment

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...