பருப்புகளில் பெருங்காயத்தைத் தட்டிப்போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
அரிசியில் மிளகாய்வற்றல்
சிலவற்றைப் போட்டு வைத்தால் வண்டு பிடிக்காது.
உளுந்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினால் மாவு மாதிரியான பொருள் வெளியேறும். தட்டிய பிறகு டப்பாவில் வைத்தால் வண்டு வராது.
துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பில் பூச்சி வராமல் இருக்க காய்ந்த வேப்பிலைகளையும்,
வசம்புத்துண்டுகளையும் போட்டு வைத்தால் போதும். உளுந்தம் பருப்பு எனில் மஞ்சள் தூளும், உப்பும் கலந்து வைக்கலாம்.
மிளகாய் பொடியில் வண்டு வராமல் இருக்க, துணியில் சிறிது பெருங்காயத்
துண்டை வைத்து மூட்டையாகக் கட்டி மிளகாய்பொடி
டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள் வராது.
பிரியாணி அரிசியில் சிறிதளவு உப்புத்தூள் கலந்து, நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தினால் வண்டுகள், பூச்சிக் கூடுகள் பிடிக்காது.
மைதா, ரவா டப்பாக்களில் கல் உப்பை ஒரு துணியில் முடிந்து போடலாம். உலர்ந்த வேப்பிலை போடலாம். கசக்காது. புழு பூச்சி வராது. சுக்குத்தூளும்
தூவலாம்.
கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
தனியா டப்பாவில் 4 முதல் 5 துண்டுகள் அடுப்புக்கரியை
போட்டுவைத்தால் வண்டுகள் வராமல் இருக்கும்.
புளியை வாங்கி வந்ததும், அதிலுள்ள கொட்டைகளையும்,
நார்களையும் நீக்கிவிட்டு
நன்கு வெயிலில் காயவிட்டு, சிறிது கல் உப்பு சேர்த்து ஜாடியில் அடைத்துவிட்டால் ஓர் ஆண்டுக்கு மேல் புழுக்கள், பூச்சிகள் வராமலிருக்கும்.
பயிறு மற்றும் தானியங்களில் வேகமாக வண்டுவிழும்.
அந்த டப்பாக்களில்
பூண்டையோ, மஞ்சள் துண்டையோ அல்லது வசம்புப் பொடியையோ கலந்து வைத்தால் சீக்கிரம் வண்டு பிடிக்காது.
சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகளில் எறும்பு வராமலிருக்க கொஞ்சம் கிராம்புகளை அதில் போட்டு வைத்தால் போதும்.
காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது, காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.
எள் டப்பாவில் சிறிது நெல்லைப்போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
பூண்டில் புழு வராமல் இருக்க அதில் கேழ்வரகை சிறு மூட்டையாக கட்டிப் போடலாம்.
சமையல் அறையில் உள்ள அலமாரியில் வேப்பிலைகளைப்
பரப்பி அதன் மீது பேப்பர் போட்டு மளிகை பொருட்களை வைத்தால் பூச்சி வராமல் தடுக்கலாம்.
படித்தை பகிர்கிறேன்☺
Our You tube channel https://www.youtube.com/c/A2ZAMUTHAM
Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM
Reference: Books and other web source
If you have any suggestion kindly write comment section.
By Nathan B.com PG Dip in Yoga and Holistic Heath...
No comments:
Post a Comment