Friday, July 16, 2021

பொரியும் அதன் நன்மைகளும் | PUFFED RICE BENIFITS



பழங்காலம் தொட்டு அரிசியில் இருந்து தயாரிக்கப்பட்ட சிற்றுண்டி உணவு பொருள்தான் பொரி பொரியை இறைவனுக்கு படையலிடும் முக்கிய பொருளாகவும் இன்றைய நாளில் பலவிதமான சாட் உணவுகளில் வண்ணமயமாய் விற்கப்படும் உணவாகவும் பலர் கண்டு உள்ளனர்

யாத்திரை சென்று வரும் அனைவருக்கும் ஆலயத்தின் பிரசாதமாக நினைவு உணவாக வாங்கி வருவது பொரிதான் வயிற்றுக்கும்உடலுக்கும் பல நன்மை தரும் பொரியை பற்றியும் கற்று அறிவோமா

இறை வணக்கத்திற்கு உருவான பொரி

ஆரம்ப காலத்தில் இருந்தே மாலை நேர சிற்றுண்டியாக உண்ணவே இந்த பொரி பயன்படுத்தப்பட்டுள்ளது இறைவனுக்கு படையலிட நெற்பொரி மனிதனுக்கு உணவாக அரிசி பொரி என்றவாறு பிரித்தும் உருவாக்கப்பட்டன. சங்க காலத்தில் வேல் வழிபாடு நிகழ்த்தப்பட்ட போது நெற்பொரி வேலின் மீது தூவி வழிபாடு நிகழ்த்தியதாக சங்க கால இலக்கியம் கூறுகிறது அதனாலேயே முருகன் வழிபாட்டு தலங்களில் பொரியை பிரசாதமாக வாங்கி உண்டு மகிழ்கிறோம்



மேலும் இன்றளவும் சில வேல் வழிபாடு உள்ள கோவில்களில் நெற்பொரி தூவும் பழக்கம் உள்ளது இதை தொடர்புடைய இந்த பொரியை தான் விநாயகர் வழிபாட்டில் பயன்படுத்தியதாக அருணகிரி நாதர் தன் திருப்புகழில் கூறியுள்ளார் கேரளாவில் உள்ள சபரிமலைக்கு செல்லும் பக்கதர்கள் சர்க்கரை கலந்து பொரியை கடவுளுக்கு படையலிடும் பழக்கம் வந்தது என ஆராய்ந்தால் காடு மேடுகளில் உரைந்த இறைவனுக்கு படையலிட சமைத்த உணவு எடுத்து செல்ல முடியாது எனவே புதிய நெற்பொரியை செய்து எடுத்து சென்று இறைவனுக்கு படையலிட்டு இருக்கலாம்

பொரி செய்யும் முறை

பொரி என்பது அரிசியின் மூலம் உருவாகும் உணவுப்பொருள் இதற்கென பிரத்யோகமான நெல் வகைகளே பயன்படுத்தப்படுகிறது மோட்டாரக நெல்லே பொரி செய்ய உசிதமானது மேலும் சம்பா பூஞ்சம்பி பவானி ரக அரிசிகளும் பயன்படுத்தப்படுகிறது சமைக்க பயன்படும் அரிசியில் பொரி தயார் செய்தால் சுவையாக இருக்காது எனவே இதற்கென குறிப்பட்ட சிலரக நெல் ரகங்களே பயன்படுத்தப்படுகிறது பொரியில் இரண்டு வகைகள் உண்டு ஒன்று நெற்பொரி, மற்றொன்று அரிசிபொரி



நெற்பொரி என்பது மோட்டாரக நெல்லை ஓர் இரவு முழுவதும் ஊற வைத்து பிறகு அதனை எட்டுமணி நேரம் காய விட வேண்டும் அதன் பின் நெல்லை அடுப்பில் காயும் சட்டியில் அடுமணலுடன் சேர்த்து கிளர வேண்டும் ஒரு நேரத்தில் நெல் வெடித்து நன்றாக அரிசி உப்பும் பிறகு இதனை புடைத்து உமியை நீக்கி விட்டு நெற்பொரியை பிரித்து எடுக்கலாம் ஒருபடி அரிசி கிடைக்கக்கூடிய நெல்லில் சுமார் 8 படி பொரியை தயார் செய்யலாம்

அரிசிபொரி என்பது புழுங்கலரிசையை தண்ணீரில் உப்பு சேர்த்தும் சேராமலும் ஊறவைத்து அடுமணலுடன் சூடாக்கி பொறித்து எடுப்பது இது ஒரு அரிசியை விட 8 மடங்கு பெரியதாய் உப்பி வரும்

நெற்பொரியை காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கு உள்ளவர்களுக்கு கஞ்சியாக செய்து கொடுக்கலாம். மேலும் மோர், தயிர் வெல்லம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலந்து சிறு உணவாக உட்கொள்ளலாம்

மாலை நேர சிற்றுண்டியாய் மசாலாபொரி



சாட் உணவுகளில் அதிக அளவு பொரி பயன்படுத்தப்படுகிறது மசாலா பொரி என்றவாறு மஞ்சள் வண்ணத்தில் பலவகையான உணவுகளுடன் இணைத்து இன்றைய நாளில் பொரி சார்ந்த உணவு வகைகள் நிறைய உள்ளன

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெல்லம் கலந்த பொரி உருண்டை ஆரோக்கியமான சிற்றுண்டி வகையை சார்ந்தது இறைவனுக்கு படையலிட கண்டறியப்பட்ட நெற்பொரி தற் போது மின் இயந்திரங்கள் மூலம் சுலபமாக அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது

அரிசி பொரியை அன்றாட உணவாக பயன்படுத்தும் மேற்கு வங்காளத்தவர் இன்றும் உள்ளனர் பொரியை சாதாரணமாய் நினைத்து விட வேண்டாம் நெருப்பில் வெந்து தன்னை பெரிதாக்கி கொள்ளும் பொரி சத்துள்ள உணவில் தனித்துவம் பெற்றது



பொரி உருண்டைக்கு நல்ல மருத்துவ குணம் இருக்கு   இத தினமும் சாப்பிட்டு வந்தா வாதம் கபம் சம்பந்தமான நோய்கள் வாந்தி வருவது போன்ற பிரச்சனைகள் காணாம போயிடும் எந்த நோயாக இருந்தாலும் உடல் சோர்வு ஏற்படும்போது குடிக்கறதுக்கு சிறந்த கஞ்சி நெற்பொரி (அரிசிப் பொரி) கஞ்சி நோயினால உண்டாகுற உடற்சோர்வு இந்தக் கஞ்சிய குடிச்சா மாறும் உடல் வன்மை பெருகும் அதிக தாகம் எடுக்குறது வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிறு மந்தம், நாக்கு ருசியில்லாம போகுறது போன்ற பிரச்சனைக்கு நெற்பொரி கஞ்சி நல்ல தீர்வு தரும்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath...

 

No comments:

Post a Comment

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...