தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா என்பதாகும். தாமரை மலர்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தாமரை மலர்களில் லினோலிக் அமிலம், புரோட்டீன், பாஸ்பரஸ், இரும்புசத்து, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகின்றன.
மூலிகைகளின் பலனை அறிய ஒரு சின்ன சுருக்கு வழி கூட இறைவன் காட்டியிருக்கிறான்
தாமரை தண்டுகள் நார்சத்து நிரம்பியவை விட்டமின் சி பொட்டசியம் பாஸ்பராஸ் விட்டமின் B 6 தாமிர சத்து இவைகளுடன்
மாங்கனீஸ்இவைகள் அடங்கியது .இதில் மிக முக்கியமானது இதில் சக்கரையும் கொழுப்பும் சிறிது கூட இல்லை
இதன் மேல் தோலை சீவிவிட்டு மெல்லிய வட்டங்களாக நறுக்கி கழுவி பயன்படுத்தவும்.தண்டு இளசாகவோ அல்லது முற்றியதாகவோ எப்படிருந்தாலும் சமைத்தாலும் ஒரே மாதிரி நறுக் நறுக் என்றுதான் தான் இருக்கும்.இதன் தண்டை பச்சையாகவே சாப்பிட்டால் கூட நன்றாகயிருக்கும்.
உப்பு எப்படிதான் போட்டாலும் தண்டில் ஏறாது, உப்பில்லாமல் சப்புன்னு இருக்கும் எந்த தாமரை எந்த தண்ணீரில் இருந்தாலும் மாசுபடுவதில்லை .அதேப் போல் சமைக்கும் போதும் அதில் உப்பு ஏறுவதில்லை.
தாமரைத்தண்டை தோல்சீவி மெல்லிய வட்டங்களாக நறுக்கி கழுவவும்.
அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
கார்ன்மாவு - 1 டீஸ்பூன் கடலைமாவு - 1/2 டீஸ்பூன்
1பெருங்காயத்தூள் அனைத்துப் பொருட்களும் சேர்த்து பிசிறி 1/2 மணிநேரம் அப்படியே விட்டுவிடவும் பின் எண்ணெய்விட்டு வறுக்கவும்:இது வாழைக்காய் வருவல் மாதிரி இருக்கும்
தாமரை மலர்களின் இதழ்களை நிழலில் காயவைத்து அவைகளை கஷாயம் செய்து சாப்பிட்டால் இதய மைகள் கட்டுப்படும்
தாமரை மலரின் நடுவில் இருக்கும் மகரந்த பகுதியை உடைத்துப்பார்த்தால் அதனுள்
விதைகள் காணப்படும் .இவைகள் மிகப்படினமாக இருக்கும் .இந்த விதிகளை உடைத்து அதில் இருக்கும் பருப்பை சாப்பிட இதய நோய் தீரும் .இதயம் பலப்படும் .
LIFERR Lotus Seeds | Kamalgatta - 500g click here
சிறுநீரகங்களை வலுப்படுத்தும்.
தாமரைத் தண்டை நல்ல விளக்கில் திரியாக உபயோகிப்பார்கள் அதை திரியாக உபயோகித்தால் செல்வா வளம் பெருகும். இதன் இல்லை பண்டைய நாள் முதல் உணவருந்த பயன் பட்டு வருகிறது .தாமரை இலையில் சப்பிட்டாலேபல வியாதிகள் தீரும் முக்கியமாக நரை விரைவில் வராது .
மலர்களும் மருத்துவப்பயன் கொண்டவை. இன்று உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப் பெற்று வருகிறது. இத்தகைய மருத்துவக் குணம் கொண்ட மலர்களில் தாமரையும் ஒன்று தாமரை மலர் நம் இந்தியாவின் தேசிய மலராகும். தாமரையில் கல்விக்கு உரிய சரஸ்வதியும், செல்வத்துக்கு உரிய மஹாலட்சுமியும் அமர்ந்திருப்பதாக இந்து மதத்தினர் நம்புகின்றனர். தாமரைப் பூவை இறைவனுக்கு பூஜைப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.
Hudgle Lotus Mix Flower Seeds (Pack Of 15 Seeds) -
All Mix Colors… Growing Lotus Brings Positive Vibrations According To Vaastu
Shastra… click here
தாமரையில் வெண்மை, சிவப்பு, நீலம், மஞ்சள் என பல வகைகள் உண்டு.
தாமரைப் பூவை அரவிந்தம், பொன்மனை, கமலம், சரோகம், கோகனம், சலசம், வாரிசம், பங்கசம், நளினம், சரோருகம் என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
ஈரலைப் பற்றிமிக ஏறுகின்ற வெப்பமும்போங்
கோர மருந்தின் கொடுமையறும்-பாருலகில்
தண்டா மணத்தையுள்ள தாழ்குழலே! காந்தல்விடும்
வெண்டா மரைப்பூவால் விள்
-அகத்தியர் குணவாகடம்
பொருள் - வெண்தாமரைப்பூவால் ஈரல் பாதிப்பு, குடல்புண், வெப்பமுள்ள மருந்துகளின் உட்சூடும் நீங்கும். தேக எரிச்சல் நீங்கும்.
தாமரையின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து பனை வெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். பித்தத்தைக் குறைக்கும்.
நீர்ச்சுருக்கு, நீர்த்தாரை எரிச்சல் போன்றவற்றைப் போக்கும்.
சுரக் காய்ச்சலுக்கும் இதனைக் கொடுத்து வந்தால் காய்ச்சல் படிப்படியாகக் குறையும்.
ஞாபக சக்தியைத் தூண்டும். மூளைக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்வூட்டும்.
வயிற்றுப் புண்ணை ஆற்றும். சரும எரிச்சலைப் போக்கும்.
இதயத்தைப் பாதுகாக்கும் இதய தசைகளை வலுப்படுத்தும். இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.
தாமரைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால் இருமல் அதிக உதிரப் போக்கு போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும்
வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என சித்தர்கள் பலர் கூறியுள்ளனர்
தாமரைப் பூவின் மகரந்தப் பொடியுடன் தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவுபெறும். காது கேளாமை நீங்கும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்
மருந்துகளால் சிலருக்கு ஒவ்வாமை உண்டானால் அது பலவகைகளில் பாதிப்பை உண்டுபண்ணும். அப்பாதிப்புகளைக் குறைக்க தாமரைப்பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து குடிநீராக தினமும் அரை அவுன்ஸ் அளவு அருந்தி வந்தால் ஒவ்வாமையால் உண்டான பாதிப்பு குறையும்.
தாமரை விதையை தேன் விட்டு அரைத்து நாக்கில் தடவினால், விக்கல், வாந்தி நிற்கும்.
தாமரைப் பூவின் மருத்துவப் பயன்களை நாமும் அறிந்து அதன் முழுப் பயனையும் பெற்று நீண்ட ஆரோக்கியம்பெறும்வோம். 🪷🪷🪷🪷🪷
சித்தவைதியத்தை விட தாமரை ஆயுர்வேதத்தில் மிகுதியாக பயன்படுத்தப்படுகிறது. அது என்னவோ உலகம் முழுவதும் எல்லா மதத்திலேயும் தாமரை ஒரு ஆன்மீக மலராகத்தான் மதிக்கபடுகிறது .சீனாவில் நீரிருக்கும் குளம் குட்டைகளிலெல்லாம் வளரக் கூடிய தாமரை மழைக்காலத்தில் அறுவடை செய்யப்படும். இதன் வேர் கிழங்கைப் போன்றிருக்கும். மாவுச்சத்து, அமீனோ அமிலங்கள், நூண்ணுயிர்ச்சத்து, புரதம் போன்ற அனைத்தும் அடங்கிய சத்துமிக்க வேரை உணவாகக் கொள்கின்றனர். தென்சீனத்தில், பறித்ததும் வெடுக்கென்றிருக்கும் பசுமையான நிலையில் பழத்தைப் போலச் சுவைத்துண்கிறார்கள். வடக்கிலோ காய வைத்து பல்வேறு உணவுப் பதார்த்தங்களில் பயன்படுத்துகிறார்கள். தாமரை வேரிலிருக்கும் துளைகளில், பாதி வெந்த அரிசிச் சோற்றை அடைத்து ஆவியில் அவித்தெடுக்கிறார்கள். பின்னர், துண்டுகளாக வெட்டி சர்க்கரை சேர்த்துப் பரிமாறுகிறார்கள். தாமரை மணத்துடன் இனிப்பாக இருக்கும் இந்தப் பதார்த்தம் சீனத்தில் மிகவும் பிரபலம்
செந்தாமரைவெண்தாமரை என இருவகை தாமரை மலர்கள் இருந்தாலும் வெண்தாமரையே அதிக அளவில் மருத்துவத்திற்குப் பயன் படுத்தப்படுகிறது.
மூளை வளர்ச்சி
உடல் ஆரோக்கியத்திற்கு வெண்தாமரைக்குடிநீர் மிகவும் ஏற்றது. மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து வெண்தாமரைப் பூ கஷாயம் குடித்து வர மூளை வளர்ச்சியடையும். இதயம் தொடர்புடைய எண்ணற்ற நோய்களை போக்க வெண்தாமரைப் பூ கஷாயம் ஏற்றது. தினம் மூன்று வேளை வெண்தாமரை பூ கஷாயம் சாப்பிட ஜன்னி நோய் குணமாகும்.
கண்பார்வை தெளிவு
வெண்தாமரைப்பூ,இலைதண்டு, கிழங்கு ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து எடுத்து அதனை நன்றாக சாறுபிழிந்து முக்கால்கிலோ நல்லெண்ணையில் கலந்து அடுப்பில் கொதிக்கவைக்கவும். நன்றாக கொதித்த உடன் அதனை இறக்கி ஆறவைத்து காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து வைக்கவும். தினமும் இதனை தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளித்துவர மங்கிய கண்பார்வை தெளிவுறும்.
உயர் ரத்த அழுத்தம்
வெண்தாமரைப்பூக்களைப் காயப்போட்டு பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். தினசரி 5 டீஸ்பூன் பொடியை ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சவேண்டும். அதனை வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு தடவை சாப்பிட உயர் ரத்த அழுத்தம் சீராகும்.
கூந்தல் தைலம்
தாமரைப்பூ ,அதிமதுரம்,நெல்லிக்காய், மருதாணிஇலை ஆகியவற்றை சமஅளவு எடுத்து பால்விட்டு அரைத்து உருட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் விட்டு இந்த உருண்டையை அதில் போட்டு காய்ச்சி வடித்து எடுக்கவும் இந்த தைலத்தை தினமும் தலையில் பூசி வர இளநரை மறையும், கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.
இருதயநோய் போக்கும்
இருமல் போக்கும் நீர்
தாமரை இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, பாலில் கலந்து குடித்துவர ஞாபகசக்தி அதிகரிக்கும்
வெண்தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி ஒரு கிலோ அளவு எடுத்து 3 லிட்டர் நீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊறப் போட்டு மறுநாள் அதை அடுப்பில் வைத்து 1 லிட்டர் அளவிற்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி, சர்க்கரை 1 கிலோ கலந்து தேன் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு 15 மில்லி எடுத்து வெந்நீரில் கலந்து 2 வேளை குடித்து வந்தால் உடல் சூடு குறையும்
தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு சூடான நீரில் கலந்து குடித்துவர ரத்த அழுத்தம் சீராகும்
தாமரை இதழ்களுடன் அதிமதுரம், நெல்லிக்காய், மருதாணி இலைகளைச் சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி வடித்து எடுத்து தலைக்கு தேய்த்துவர இளநரை மாறும். முடி உதிர்வதும் குறையும்
தாமரை இதழ்களை நீரில் வெல்லத்துடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் உடல் சூடு தனியும் சிறுநீரகத் தொற்றுகள் நீங்கும் நினைவாற்றல் கூடும் சருமம் பளபளக்கும்
தாமரை பூவின் மகரந்தத்தை தேனில் குழைத்து உண்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். வயிற்று புண் ஆறும்.
தாமரைத் தண்டை வெயிலில் உலர்த்தி நார் தயாரித்து அதனை கொண்டு விளக்கேற்றப் பயன்படுத்தலாம்.
தாமரையின் விதைகள் கரிய நிறத்தில் கடினமானதாக இருக்கும். இதனை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை சாப்பிட்டால் இவை உங்கள் இதயத்துக்கு வலிமை சேர்க்கும்.
வெண்தாமரை ஷர்பத் தயாரித்து சாப்பிட இரத்தமூலம், சீத பேதி, ஈரல் நோய்கள், இருமல் கட்டுப்பட, மூளைக்கு பலம் தருவதற்கு பயன்படுகிறது.
கர்ப்பிணிகளுக்கு பசி எடுக்க வெண்தாமரைப் பூவை அரைத்து எலுமிச்சை அளவு சாப்பிட வேண்டும். கண்பார்வை தெளிவு பெற தேனுடன் மகரந்தபொடியை கலந்து சாப்பிட வேண்டும்
தாது பலம் பெற, ஒரு கிராம் தாமரை விதையை அரைத்து, பாலில் கலந்து, காலை, மாலை சாப்பிடு வர வேண்டும். 10 கிராம் தாமரைப்பூ, இதழ்களை ஒரு லிட்டர் நீரில் இட்டுக் காய்ச்சி, ¼ லிட்டராக்கி வடிகட்டி காலை மாலை சாப்பிட்டுவர உடல் சூடு குணமாகும்
தாமரை கிழங்கினை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, தினமும் காலையில் பாலில் கரைத்துக் குடித்துவர பார்வை மங்கல் குணமாகும்.
தாமரை விதையைத் தேனுடன் அரைத்து, நாக்கில் தடவிவர வாந்தி விக்கல் குணமாகும் நிழலில் உலர்த்திய வெண் தாமரை இதழ்கள் ஒரு கிலோ அளவு, மூன்று லிட்டர் நீரில் இட்டு, ஓரளவு ஊறவைத்து, மறுநாள் ஒரு லிட்டர் அளவாக காய்ச்சி, வடிகட்டி, ஒரு கிலோ சர்க்கரை கலந்து, தேன் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு, 2 தேக்கரண்டி, சிறிதளவு நீருடன் கலந்து சாப்பிட்டுவர வேண்டும் உடல் சூடு தாகம் ஆகியவை குறையும் கண்கள் குளிர்ச்சியடையும்
வெண்தாமரை – மலர்கள் வெண்மையானவை. தாமரையின் அனைத்து மருத்துவக் குணங்களும் இதற்கும் பொருந்தும் காம்புகள் துவர்ப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை
வெண்தாமரை விதைகள் சிறுநீர் பெருக்கும், உடல் சூட்டைத் தணிக்கும் தண்டு இலை ஆகியவை செரியாமை, பேதி ஆகியவற்றைக் குணமாக்கும்
வெண்தாமரை பூ, உடல் வெப்பத்தால் ஏற்படும் கண் எரிச்சல், காய்ச்சல், நீர்வேட்கை ஆகியவற்றைக் குணமாக்கும்🪷🪷🪷🪷🪷
இரத்தக் கொதிப்பு கட்டுப்பட வெண் தாமரை இதழ்களை நன்கு உலர்த்தி, பொடி செய்து கொண்டு, 1½ தேக்கரண்டி அளவு, தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும்
கர்ப்பிணிகளுக்குப் பசி எடுக்க வெண்தாமரைப்பூவை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, பசும்பாலில் கரைத்து உள்ளுக்குச் சாப்பிட வேண்டும்.
வெப்பத்தால் ஏற்படும் கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல், போன்ற கண் நோய்களுக்கு தாமரைப்பூவின் இதழ்கள் பயன்படுகின்றன. பசும்பால் 100 மில்லி, சுத்தமான தண்ணீர் 100 மி.லி. சேர்த்து, அதில் தாமரை பூவிதழ்களை போட்டு காய்ச்சவும் நன்றாக காய்ந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வரும் ஆவியை பாதிக்கப்பட்ட கண்ணில் படும்படி செய்ய வேண்டும் இதை காலை மாலை இருவேளை செய்து வந்தால் கண்குறைபாடுகள் நீங்கும். இதற்கு செந்தாமரை பூவையும் பயன்படுத்தலாம்.
தாமரைப்பூ அதன் இலை, தண்டு கிழங்கு இவை ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்து, அரைத்து (வகைக்கு 100மில்லி அளவு) சாறுகளை சேகரித்து கொள்ளவும். இத்துடன் சுத்தமான நல்லெண்ணை (750 ml) கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சவும். எண்ணை கொதித்து காய்ந்தபிறகுசிவப்பு நிறமடையும் நல்ல நறுமணம், எண்ணையிலிருந்து எழும். இந்த பக்குவ நிலையில் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து வடிகட்டி, போத்தலில் போட்டு வைத்துக்கொள்ளவும். இந்த தைலத்தை தலையில் தடவி வாரம் ஒரு முறை குளித்து வந்தால் கண் பார்வை சீராகும்
வெண் தாமரை பூவால் ஈரலின் வெப்பமும், வெப்பமுள்ள மருந்துகளின் உட்சூடும் நீங்கும். தாமரை விதை ஆண்மையை பெருக்கும். கிழங்கு கண் ஒளி, குளிர்ச்சி இவற்றைத் தரும் விதைகளை பொடித்து 1 - 2 கிராம் எடை உள்ளுக்கு கொடுத்து வர உடலுக்கு வலிமை தரும். விதைகளை தேன் விட்டரைத்து நாக்கில் தடவ, வாந்தி, விக்கல், நிற்கும்.வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என சித்தர்கள் பலர் கூறியுள்ளனர்.
வெண் தாமரைப்பூ ஒன்றின் இதழ்களை, பழைய மண் பாண்டத்தில் போட்டு அதில் 200 மி.லி. நீரை ஊற்றவும். அடுப்பில் வைத்து, நீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பிறகு இறக்கி வடிகட்டிக் கொள்ளவும் இந்த குடிநீரை வேளைக்கு 3 அவுன்ஸ் வீதம் தினமும் 3 வேளை குடித்து வந்தால் மூளை பலம் பெறும். அதன் செயல்பாடு சிறப்பாகும்.
மேற்சொன்னது போல், தயாரித்த தாமரை குடிநீரில் பால், சர்க்கரை சேர்த்து, பருக, இருதய நோய்கள் அகலும். தினம் இருவேளை 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். காய்ச்சலுக்கும் இந்த தாமரை குடிநீர் நல்லது.
செந்தாமரை மருத்துவ குணங்கள்:
வெண் தாமரைப்பூவை பயன்படுத்து வது போலவே, செந்தாமரைப்பூவையும் பயன் படுத்தலாம். செந்தாமரைப்பூ லேகியம் கண்ணுக்கும்மூளைக்கும் சிறந்த டானிக். செந்தாமரைப்பூ இதழ்கள், சீந்தில் கொடி, நெல்லிமுள்ளி, காசினி கீரை, சுக்கு, திப்பிலி இவற்றை பாலில் கொதிக்கவைத்து நெய் சேர்த்து செய்யப்படுகிறது. இந்த லேகியம்
தாமரை குளத்து நீர் இரத்தக் கொதிப்பை தணிக்கும். கண் எரிச்சலை போக்கும். கண் எரிச்சலுடையவர்கள் காலை மாலை தாமரைக் குளத்து நீரை பருகி வரலாம்
தாமரையின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து பனை வெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். பித்தத்தைக் குறைக்கும்
காய்ச்சலுக்கும் இதனைக் கொடுத்து வந்தால் காய்ச்சல் படிப்படியாகக் குறையும்
JoyProDeals Kamalgatta Seeds Lotus Seeds (Pack of
10pcs, Black) click here
ஞாபக சக்தியைத் தூண்டும் மூளைக்கும் நரம்புகளுக்கும் புத்துணர்வூட்டும்.
வயிற்றுப் புண்ணை ஆற்றும் சரும எரிச்சலைப் போக்கும்
இதயத்தைப் பாதுகாக்கும் இதய தசைகளை வலுப்படுத்தும். இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கும்
தாமரைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால் இருமல், அதிக உதிரப் போக்கு போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும்
வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என சித்தர்கள் பலர் கூறியுள்ளனர்
தாமரைப் பூவின் மகரந்தப் பொடியுடன் தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவுபெறும். காது கேளாமை நீங்கும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்
மருந்துகளால் சிலருக்கு ஒவ்வாமை உண்டானால் அது பலவகைகளில் பாதிப்பை உண்டுபண்ணும். அப்பாதிப்புகளைக் குறைக்க தாமரைப்பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து குடிநீராக தினமும் அரை டம்ளர் அளவு அருந்தி வந்தால் ஒவ்வாமையால் உண்டான பாதிப்பு குறையும்.
தாமரை விதையை தேன் விட்டு அரைத்து நாக்கில் தடவினால் விக்கல் வாந்தி நிற்கும்
தாமரைப் பூவின் மருத்துவப் பயன்களை நாமும் அறிந்து அதன் முழுப் பயனையும் பெற்று நீண்ட ஆரோக்கியம்பெறும்வோம்
படித்தை பகிர்கிறேன்☺
Our You tube channel https://www.youtube.com/c/A2ZAMUTHAM
Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM
Reference: Books and other web source
If you have any suggestion kindly write comment section.
By Nathan B.com PG Dip in Yoga and Holistic Heath...
No comments:
Post a Comment