Monday, February 15, 2021

 

தான்றிக்காய் பயன்கள்



தான்றிக்காய் இலையுதிர்க்காடுகளில் உயரம் அதிகமான மரங்கள் காணப்படுகின்றன உறுதியான வேர்களுடன் கூடிய பெரிய மரம், இலைகள் பெரியவை, 15-25 செ.மீ. வரை நீளமானவை, கிளைகளின் நுனிகளில் கொத்தாகக் காணப்படும்.

பூக்கள் சிறியவை, வெளிறிய பச்சை நிறமானவை, நெருடலான மணத்துடன், சிறிய காம்புகளில் காணப்படும். பழங்கள் 4 செ.மீ. வரை நீளமானவை. நீள்வட்ட வடிவத்தில் பழுப்பு நிறத்தில் இருக்கும். அடர்த்தியாக மூடப்பட்ட மயிரிழைகளில் காணப்படும்.

மேற்கு இந்தியாவின் வறண்ட பகுதிகளைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் பொதுவாகக் காணப்படுகின்றது.

மரக்கட்டைகள் ஈரத்தைத் தாங்கக்கூடிய தன்மை கொண்டவை. இவை, படகுகள், வேளாண் கருவிகள் செய்யப் பயன்படுகின்றன. மரத்தின் பட்டை, துணிகள் மற்றும் தோலுக்கு சாயமேற்றப் பயன்படுகின்றது.



தான்றிக்காய் பழங்கள் துவர்ப்புச் சுவையை அதிகமாக்கும்; கோழையகற்றும்; மலமிளக்கும்; உடலைப் பலப்படுத்தும். வயிற்றுக் கோளாறுகளுக்கும், அஜீரணத்திற்கும் மிகவும் ஏற்றவை.

மூளையைப் பலப்படுத்தவும், கண் எரிச்சலைக் குறைக்கவும் பயன்படுகின்றது. மூலம், தொழுநோய், முறைக்காய்ச்சல், காய்ச்சல் ஆகியவற்றையும் குணமாக்கும். பாதியளவிற்கு பழுத்த பழங்கள் (செங்காய்) பேதிமருந்தாகப் பயன்படுகின்றன.

ரத்தமூலம் குணமாக தான்றிக்காயைக் கொட்டை நீக்கி, தோலை, கருகாமல், இலேசாகச வறுத்து, தூள் செய்து, 1 கிராம் அளவு, சிறிதளவு சர்க்கரை, 1 டம்ளர் மோருடன் கலந்து, காலை, மாலை உள்ளுக்குச் சாப்பிட வேண்டும்.

பல்வலி குணமாக தான்றிக்காய்த் தூளால் பல்துலக்கிவர வேண்டும்.
புண், சிரங்குகள் குணமாக காயை நீர்விட்டு உரைத்து, பசையாக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.

கண்பார்வை தெளிவடைய தான்றிக்காய் தூள் 1 தேக்கரண்டி, ஒரு டம்ளர் நீருடன் கலந்து காலை, மாலை தொடர்ந்து 4 வாரங்கள் சாப்பிட வேண்டும்.



கொட்டை நீக்கிக் கருகாமல் வறுத்துத் பொடித்து 1 கிராம் அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை கொடுக்க மலச்சிக்கல், குடல் பலமின்மை, காய்ச்சல், பித்தத் தலைவலி, இரத்தமூலம், சீதபேதி ஆகியவை தீரும்.

தான்றிப் பொடி 3 கிராமுடன் சமன் சர்க்கரை வெந்நீரில் கலந்து காலை மாலை சாப்பிடப் பித்த நோய்கள் வாய்நீர் ஒழுகல் தீர்ந்து, கண் பார்வை தெளிவுறும் வெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிட வாதத்தைத் தணிக்கும்

காயை நீர் விட்டு இழைத்து புண்களில் பூச ஆறும். அக்கியில் பூச எரிச்சல் தனித்து குணமாகும்

தான்றிக்காய் பொடி 2 சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட மாரடைப்பு நோய் விரைவில் குணமாகும். மேலும் இந்த காயை தினமும் உணவில் சேர்த்து வர கண் பார்வை தெளிவடையும், தோளுக்குப் பளபளப்பை ஊட்டும். தான்றி காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் கூந்தல் தைலமாகவும், மூட்டு வலி தைலமாகவும் பயன்படுகிறது.

தேனுடன் கலந்து உட்கொள்ளாத இருமல் தணியும்.

தான்றிக்காயின் பருப்பை தூள் செய்து தண்ணீரில் அதனைக் குழப்பி பூச புண், ரணங்கள் ஆறும். இந்த காயை தினமும் ஏதாவது ஒரு வகையில் சேர்த்து வந்தால் இரைப்பைக்கு அது பலத்தை கொடுக்கும்

திரிபாலா சூரணம்:

தான்றிக்காய் திரிபாலா சூரணத்தில் ஒரு மருந்துப் பொருளாகச் சேர்கின்றது

குறிப்பு. தான்றிக்காயின் உள்ளிருக்கும் கொட்டையை நீக்கி, காயின் மேல்தோலை மட்டுமே மருத்துவத்தில் பயன்படுத்த வேண்டும்.

2 comments:

  1. கடுக்காயும் இதுவும் ஒன்றா?

    ReplyDelete
  2. இல்லை வேறு வேறு

    ReplyDelete

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...