Friday, February 26, 2021

 

அண்ணாச்சி பூவின் நன்மைகள்  STAR ANISE BENEFIT



அண்ணாச்சி பூ என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திர சோம்பு கறிகள்மற்றும் பிரியாணி வகைகளில் பார்த்திருப்போம்இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மசாலாப் பொருட்களில் இந்த அண்ணாச்சி பூவும் முக்கியமான ஒன்றுஇதற்கு ‘அன்னாசி மொக்கு’, தக்கோலம்நட்சத்திர சோம்பு என்னும் வேறு சில பெயர்களும் உண்டுஇது வெறும் மணத்துக்காக மட்டுமல்லாமல் உணவை அழகுபடுத்துவதற்க்கும்மற்றும் மருந்தாகவும் பயன்படுகின்றது.



அண்ணாச்சி பூ பூர்வீகம்

அண்ணாச்சி பூ சீனாவை பூர்வீகமாக கொண்டதுசீன ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த அண்ணாச்சி பூவை பயன்படுத்தி வந்தார்கள்இது படிப்படியாக எல்லா நாடுகளுக்கும் பரவி சென்று இந்தியாவில் தற்போது இது ஒரு தவிர்க்க முடியாத மசாலா பொருளாக மாறி உள்ளது.



நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

அண்ணாச்சி பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறதுஇதில் பாக்டீரியா வைரஸ்பூஞ்சை மற்றும் ஈஸ்ட் இனங்களைக் கொல்லும் பய ஆக்டிவ் பொருட்கள் உள்ளதுஇந்த எதிர்ப்பு பண்பினால் நம் உடலில் எந்த ஒரு தொற்றுக்களும் ஏற்படாமல் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அண்ணாச்சி பூ உதவுகிறதுநம் உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக அகற்றி நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது இந்த அன்னாச்சி பூ.



புளித்த ஏப்பம் தீரும்

ஒரு சிலருக்கு புளித்த ஏப்பம் உருவாகும்இது அவர்களுக்கு அசௌகரியத்தை உருவாக்கும்அப்படிப்பட்டவர்களுக்கு அன்னாசி பூ சிறந்த தீர்வாக இருக்கும்அன்னாசிப் பூவை பொடி செய்து அரை கிராம் அளவு எடுத்து  தினந்தோறும் மூன்று வேளையும் உணவுக்குப் பின் நீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் புளித்த ஏப்பம் உண்டாகாது.



சளி இருமல் பிரச்சனை தீரும்

அன்னாசி பூவை வறுத்து பொடி செய்து அரை ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சீரகம்மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து காலைமாலை குடித்து வந்தால் சளிகாய்ச்சல்இருமல் போன்றவை குணமாகும்.

 

தசை வலி குணமாகும்

அன்னாசி பூவை வறுத்து பொடி செய்து எடுத்து அதனுடன் விளக்கெண்ணெய்நல்லெண்ணெய் ஆகியவற்றை தலா 100 மில்லி அளவு எடுத்து அனைத்தையும் சேர்த்து தைலமாக காய்ச்சவும்இந்த தைலத்தை தசையில் ஏற்படும் வலிகளுக்கு பயன்படுத்தினால் தசை வலி குணமாகிறதுதசை பிடிப்பை சரிசெய்கிறதுநெற்றியில் தடவும்போது மன இறுக்கத்தை போக்குகிறது.

 


அன்னாசி பூ எண்ணெய்

அன்னாசி பூவில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும அலர்ஜியை சரி செய்கிறதுநரம்புகளை வலுவாக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் இந்த எண்ணெய் உதவுகிறது.

இப்போதைய காலகட்டத்தில் ஏராளமான தொற்றுகள் மனிதர்களை தாக்கி வருகிறதுஇது அனைத்தையும் செயலிழக்க செய்வதற்கு நாம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்எனவே உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க இது போன்ற பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

உடலில் உள்ள எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய

 இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்

நன்றி பெருசங்கர்

 ஈரோடு  மாவட்டம் பவானி செல் நம்பர் 6383487768

 

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTAHM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan Manickam  PG Dip in Yoga and Holistic Heath.....



No comments:

Post a Comment

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...