ஆடுதீண்டாப்பாளை பயன்கள் ( Bracteated birth wort)
Tamil
– Adu thinna palai
English
– Bracteated birth wort
Sanskri
– Dhuma patra
Malayalam
– Aadu tinlappala
Telugu
– Gadug gudupa
Botanical
Name – Aristolochia bracteata
ஆடுதின்னாபாலை மூலிகையானது அரிஸ்டோலோகியா பிராக்டியோலேட்டா என்ற தாவரவியல் பெயரில் அரிஸ்டோலோகியேசி என்ற குடும்பத்தில் காணப்படுகிறது. இது தமிழில் ஆடுதின்னாப் பாலை என்றும் மற்றும் வணிக ரீதியாக கிடாமர் என்றும், ஆங்கிலத்தில் வர்ம் கில்லர் என்றும் வழங்கப்படுகிறது. இதன் தாயகம் மேற்கு ஆப்பிரிக்காவாகும். அரிஸ்டோலோகியாவில் மொத்தம் 400 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.இம்மூலிகையானது ஆப்பிரிக்கா, அரேபியா, பாகிஸ்தன் மற்றும் இலங்கையிலும் இந்தியாவில் மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் காணப்படுகிறது. இது பொதுவாக உலர்ந்த கரிசல் மண் பூமியில் காணப்படும் களையாகும். தமிழகத்தின் கரிசல் மண் பிரதேசங்களில் குறிப்பாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படுகிறது.
இத்தாவரமானது 0.5மீ வரை வளரக்கூடிய கொடி வகையைச் சார்ந்தது. பூக்கள் குழல் வடிவில் பழுப்பு நிறத்தோடும் இலைகள் இதய வடிவிலும் காணப்படும். ஜுலை - நவம்பர் மாதங்கள் இதற்கு ஏற்ற கால சூழ்நிலையாகும்.
“ஆடுதொடாப் பாளைக்
ககக்கிருமி
வன்சிலந்தி
நீடுகருங்
குட்டம் நிறைகரப்பான்ஆடிடச்
செய்
எண்பது
வாய்வும் இகல்குட்ட
முந்தீரும்
திண்பெருநற்
றாதுவுமாஞ் செப்பு”
(அகத்தியர்
குணபாடம்)
ஆடு தீண்டாப்பாளை முழுத்தாவரமும் குமட்டலான மணமும் வெப்பத் தன்மையும் கொண்டது. ஆடு தீண்டாப்பாளை குடல் புண்களை ஆற்றவும் வயிற்றுப் புழுக்களைக் கொல்லவும் விஷத் தன்மையை முறிக்கவும் உடலைப் பலப்படுத்தவும் மாதவிலக்கைத் தூண்டவும் பயன்படுகின்றது.
ஆடு தீண்டாப்பாளை தரையோடு படர்ந்து வளரும் புதர்ச்செடி, மாற்றடுக்கில் அமைந்த, சாம்பல் படர்ந்த, முட்டை வடிவ இலைகள் கொண்டது. மலர்கள் ஆழ்ந்த சிகப்பு நிறமானவை. கனிகள் முதிர்ந்த நிலையில் உள்ளிருக்கும் விதைகள் வெடித்துச் சிதறும்.
ஆடு தீண்டாப்பாளை இந்தியா முழுவதும், முக்கியமாகச் சமவெளிகளில் வளர்கின்றது கருப்பு மண் உள்ள நிலங்கள், சற்றே உப்புச்சுவை கொண்ட கழி நிலங்களில் மிகவும் பரவலாக வளர்கின்றது பங்கம்பாளைவாத்துப்பூ ஆகிய பெயர்களும் ஆடு தீண்டாப்பாளை தாவரத்திற்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.
வயிற்றுப் புழுக்கள் குணமாக ஆடு தீண்டாப்பாளை இலைச்சூரணம் ¼ தேக்கரண்டி அளவு வெந்நீருடன் கலந்து இரவில் குடிக்க வேண்டும் அல்லது ஆடு தீண்டாப்பாளை விதைச் சூரணம் ஒரு தேக்கரண்டி அளவு விளக்கெண்ணெயில் கலந்து இரவில் சாப்பிட வேண்டும். பேதியாகும் வாய்ப்பும் உண்டு. அவ்வாறு ஏற்பட்டால் மோர் சாதம் சாப்பிட்டு பேதியைக் கட்டுப்படுத்தலாம்.
பசுமையான ஆடுதீண்டாப்பாளை இலைகளை நசுக்கிப் பிழிந்து எடுத்த சாறு 50 மி.லி.யுடன் தேங்காயெண்ணெய் 50 மி.லி. சேர்த்து, நீர்வற்றும் வரை சுண்டக் காய்ச்சி, கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக் கொண்டு, மேல்பூச்சாகத் தடவிவர தோல் நோய்கள்,
சிரங்கு, கரப்பான், வண்டுக்கடி தீரும்
ஆடுதீண்டாப் பாளை இலைகள் கொஞ்சம் எடுத்து 1/4 லிட்டர் சுடு தண்ணீரில் 2மணி நேரம் ஊறப் போட்டு 2மணி நேரம் கழித்து வடி கட்டி 50 மில்லி அளவு தினந்தோறும் காலையில் மட்டும் குடித்து வந்தால் பூச்சிக் கடி – கருமை நிறப்டை – பன்றி தோல் போன்ற படை கிரந்திவிஷம் – கனைச் சூடு – குடலில் தொல்லைப் படுத்தும் புழுக்கல் – தலைமுடி உதிர்தல் – சிலந்தி கடி – வாதநோந்கள் குணமாகும்.
இதன் சமூலத்துடன் கருங்குருவை நெல்லும் சேர்த்து அவித்து – அவல் இடித்து தினமும் ஒரு வேலை 1 மண்டலம் சாப்பிட்டு வந்தால் சொறி – சிரங்கு – குஷ்டம் – வண்டு கடி – பூரான்கடி – செய்யான் கடி அரணைக் கடி முதலிய விஷங்கள் குணமாகும். அது வரையில் நல்லெண்ணெய் சேர்க்கக் கூடாது. அப்போது மிளகை பால் விட்டு அரைத்து தேய்த்து குளித்து வர வேண்டும். வாரம் ஒரு முறை விதையை சூரணம் செய்து 5 கிராம் அளவு விளக்கெண்ணெயில் கொடுக்க நன்றாக பேதியாகும் இதனால் வயிற்றுவலி தீரும். சூதகக் தடையை நீக்கி மாத விலக்கைத் தூண்டும்.
வேர் சூரணம் 1 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வேதனையை தீர்த்து சுகப் பிரசவத்தை உண்டாக்கும்.
இலையை காய வைத்து இடித்து சூரணமாக செய்து ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் .
வேந்நீரில் ஊறவைத்த இலையின் ஊறல் குடிநீரை 15-30 மி.லி கொடுத்து வந்தால் கரும்படை, கரப்பான், மயிர் கொட்டிப் போதல், கிரந்தி, வாதநோய்கள் போன்றவை தீரும்.
உலர்ந்த இலையை ஊறல் குடிநீர் செய்து கொடுத்தால் நுண்புழுக்கள் செத்து மலத்துடன் வெளியாகும்.
வேரை அரைத்து 3 முதல் 5 கிராம் கொடுக்க பாம்பு நஞ்சு முறியும்.
ஆடு தீண்டாப்பாளைச் சமூலச் சாறு, நல்லெண்ணெய் இரண்டும் சமஅளவு சேர்த்து எரித்து தைல பாகத்தில் எடுத்து வடிகட்டி, கரும்படை, கரப்பான் இவற்றிற்குத் தடவலாம். பீனிசம் (sinusitis) தீரும்.
அரைத்த சமூலம் தேங்காய் அளவு எடுத்துக் கொண்டு, நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி, 10-20மி.லி ஐந்தைந்து நாட்களாக 40 நாட்கள் கொடுத்து வர பெருநோய்த் தடிப்பு நீங்கும்.
ஆடு தீண்டாப்பாளை வேர்ப்பட்டையை அரைத்து 5 கிராம் அளவு உண்டு வந்தால் சகல வித விஷங்களும் இறங்கிவிடும்.
ஆடு தீண்டாப்பாளை வேர்ப்பொடியை மூவிரல் அளவு உட்கொண்டால் வண்டுக் கடி தீரும்.
கட்டுரை
முனைவர் மரு.பெ.பாரதஜோதி
இணைப்பேராசிரியர் சித்த மருத்துவத்துறை
மிகினும் குறையினும் நோய்செய்யும்
அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்
Our You tube channel https://www.youtube.com/channel/UC5JnF35lejkpAt2ogpYyfHg
Our Facebook https://www.facebook.com/A2ZAMUTAHM
Reference: Books and other web source
If you have any suggestion kindly write comment section.🙂
By Nathan PG Dip in Yoga and Holistic Heath.....
No comments:
Post a Comment