Tuesday, March 16, 2021

ஏலக்காய் நன்மைகள் | Cardamom benefits

ஏலக்காய் நன்மைகள்



பல நோய்களுக்கு மருந்தாகும் ஏலக்காய் சியே ற்படுவதில்லை, சாப்பிட ‌‌பிடிக்கவில்லை ன்று கூறுபவர்கள், ‌தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், சி எடுக்கும். ‌ஜீரண உறுப்புள்சீராக இயங்கும். நெஞ்சில் ளி ட்டிக் கொண்டு மூச்சுவிடசிரமப்படுபவர்களும், ளியால் இருமல் ந்து, அடிக்கடி இருமி யிற்றுவலி ந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் ல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பி‌‌ட்டாலே, குத்திரும்பல், தொடர் இருல் குறையும்.

வா‌‌ய் துர்நாற்றம் ‌‌ற்படுவதற்கும்ஜீரண றுப்புகளில் ற்படும்பிச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம். சாப்பிடும் உணவு வகைகளில்சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது ல்லது. திகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது

ஏலக்காயை பொடியாக்க ஏலக்காயைப் பொடித்துப் போடவும் என்றவுடன் பலரும் ஏலக்காயை அப்படியே அம்மியில் வைத்து பொடிக்க முயற்சி செய்வர். இது நன்கு பொடியாகாது. ஏலக்காயை வெறும் வாணலியில் சிறிது நேரம் வறுத்து பிறகு பொடிக்கவும். எளிதாய் பொடியாகும். அதேசமயம், ஏலக்காயைத் தட்டிப் போடவும் என்ற இடத்தில், வறுக்காமல் ஏலக்காயுடன்சிறிது ர்க்கரையுடன் அம்மியில் வைத்து, இலேசாக இடித்துப் போடலாம். இளமையாக என்றும் இருக்க உதவும்

ஏலக்காய் ! இளமை காக்க எளிய வழிகள் ஏலக்காய் நல்லதா? மிக நல்லது! மிளகுக்கு அடுத்து உலகில் அதிக மதிப்பு மிக்க நறுமணப் பொருள் ஏலக்காய்தான். ஏலக்காய் எல்லோருக்கும் மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும் அரிய பொருளாகும். ஏலக்காயை தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் இதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது.எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது. ஏலக்காய் ஆண்மைக் குறைவு பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பாக்கியமும் உண்டாக்க வல்லது பலர் அறியாத செய்தி. இது தாம்பத்திய வாழ்வில் இனிமை சேர்க்கவல்லதும் கூட

இரவு ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி தொண்டைக்கட்டு உள்நாக்கில் வலி குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்தி ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும். நாம் குறைந்தபட்சம் தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்தால் கூட நல்ல சுறுசுறுப்பைப் பெற முடியும். அதோடு ஜீரணக்கோளாறு இல்லாமல் ஆரோக்கியமான உடலையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். பாலில் சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து இருபாலரும் தினமும் அருந்தி வந்தால் இருபாலருக்கும் குறைபாடுகள் குணமாகும்.

அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளையே பயன்படுத்தினால் போதும். ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.சில சமயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்பவர்களுக்கு நெஞ்செரிச்சலும் வாய்வுத் தொந்தரவும் இருக்கும். இவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு ஏலக்காய் மெல்லுவது நல்லது. இரண்டு ஏலக்காயில் உள்ள விதைகளை இடித்து கிராம்புகள் மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் கலந்து விழுங்கினாலும் உடல் ஜீரணமாகும். இதே போல ஏலக்காயைசூயிங்கம்மிற்கு பதிலாக மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும். நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும்.சிலர் வாயிலிருந்து முடை நாற்றம் வீசும். அருகில் இருந்து பேசமுடியாத படி வாய் நாற்றம் தூக்கி அடிக்கும். இவர்களும் ஏலக்காய் மெல்லலாம். நெல்லிக்காய்ச் சாறில் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளைச் சேர்த்துத் தினம் மூன்று வேளை அருந்தி வந்தால் மேகவெட்டை நோய்க்கு இது அருமருந்தாகும். இத்துடன் சிறுநீர்ப்பை சுழற்சியும் சிறுநீர்க் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும்.

அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி உள்ளே போடவும். பிறகு புதினாக் கீரையில் 5 6 இலைகள் மட்டும் இதில் போட்டுக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி அருந்தினால் விக்கல் எடுப்பது குறையும். ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப் பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும், ஜீரணம் அதிகரிக்கும். ஏலத்தை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும். ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும். நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும்.



ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும். ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விலகும். அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்த ஏலக்காய் பெரிதும் உதவும். ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும். பாலில் ஏலக்காய் சேர்த்து சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித்தேனும் சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைப் பேறில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும்.இதனை இருபாலரும் அருந்தலாம். இருவருக்குமே பலன் தரும். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் 

குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும். ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும். மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், `ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது

நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல. வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும். வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும். ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாபபிட்டால் நரம்பின் பலம் கூடும், கண் பார்வை அதிகரிக்கும்ஏலக்காயை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும்ஏலக்காய்

ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல் தொண்டை வலி தீரும்.

அதிகளவில் அளவில் உணவில் சேர்ப்பது, அளவிற்கு மீறினால் அமுதும் நஞ்சு என்பது போல ஆகிவிடும். இதை நீங்கள் டீ அல்லது தேன், சுடுநீரில் கலந்து உட்கொண்டு வரலாம்.

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTAHM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan PG Dip in Yoga and Holistic Heath.....

No comments:

Post a Comment

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...