வெங்காயத்தின் பயன்கள் ONION BENEFITS
வெங்காயம் (தாவர வகைப்பாடு Allium cepa) குடும்பத்தைச்சேர்ந்த ஒரு தாவரம். இது இந்தியா,பாக்கிஸ்த்தான்,
ஆப்கானிஸ்த்தான், ஈரான், ஆகிய நாடுகளில் பரவலாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
வெங்காயத்தில் 89% நீரும், 9% மாவுப் பொருளும் (இதில் 4% இனிப்பு, 2% நார்ச்சத்து)
சிறிதளவு கொழுப்புப் பொருட்களும் உள்ளது. வெங்காயத்தில் மிகக் குறைந்த அளவே ஊட்டச்சத்துகள் உள்ளன. 100 கிராம் எடையுடைய வெங்காயத்தில் 166கி.ஜூ (KJ)
(40 கலோரிகள்) சக்தி அடங்கியுள்ளது.
வெங்காயம் இன்றி இந்திய சமையலே கிடையாது அந்த அளவுக்கு
எல்லா சமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது. தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில்
வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும்.
இவர்கள் ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர்
தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்று
விடும்.
வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு
பொறுமை இல்லாதவர்கள் அப்படியே பச்சையாக வெங்காயத்தை சாப்பிடலாம் சில நிமிடங்களிலேயே
நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும்.
பொடியாக நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு
வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.
மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக
சேர்ப்பது நல்லது. நீர்மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன்
கிடைக்கும்.
வெங்காயத்தில் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள்
தாராளமக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து,
பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே
பழுத்து உடையும்.
நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச்
சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக்
கடுப்பு நீங்கும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக்
குடிக்க இருமல் குறையும்.
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து,
வெறும் வெங்காய சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத்
தளர்ச்சி குணமாகும். வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்
பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை
தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது.
ஜீரணத்துக்கும் உதவுகிறது.
வெங்காயம் இரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை
மீட்கும்.
வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.
வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி
சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில்
பற்றுப் போட தலைவலி குறையும்.
மாரடைப்பு நோயாளிகள், இரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன
வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும்,
மூளை பலமும் உண்டாகும்.
வெங்காயத்தையும் ,வெங்காயப்பூவையும் சேர்த்துஅரைத்து ஒரு
அவுன்ஸ் சாறு எடுத்து இரவில் வெறும்வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காசநோய்குணமடையும்.
வெங்காயப்பூக்களையும் வெங்காயத்தையும்,
பொடியாக நறுக்கி தயிரில் ஊறப்போட்டு சாப்பிடமூலம் தொடர்புடைய
எரிச்சல், குத்தல் குணமடையும்.
கண்நோயால் பாதிக்கப்பட்டு பார்வை மங்கலாகஇருப்பவர்கள் வெங்காயப்பூவைக்
கசக்கி சாறுபிழிந்து எடுத்து இரண்டு சொட்டு சாறுகாலை, மாலைகண்களில் விட்டுவர மூன்று
நாட்களில் கண்பார்வைதெளிவடையும்.
பல்வலியால் அவதிப்படுபவர்கள் சம அளவுவெங்காயம் மற்றும்
வெங்காயப்பூ எடுத்து அரைத்துசாறுபிழிந்து தினமும் வாய்கொப்பளித்து வரபல்மற்றும் ஈறு
தொடர்புடைய நோய்கள் குணமடையும்.
ஒரு கைப்பிடியளவு வெங்காயப்பூ எடுத்துபொடிப்பொடியாக நறுக்கி
ஒரு சட்டியில் போட்டுஅதில் அரைடம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துசூடேற்றவும்.
வெங்காயப்பூ நன்றாக வெந்தவுடன்இறக்கி ஆறவைத்து சிறிதளவு உப்பு சேர்த்துஉட்கொள்ள வயிற்று
வலி உடன் நிற்கும்.
வெங்காயம் சேர்த்து சமைக்கும் உணவுகளில்வெங்காயத்திற்கு
பதிலாக வெங்காயப்பூவையும், வெங்காயத்தாளையும் சிறியதாய் நறுக்கிப் போட்டுசேர்க்கலாம்.
இதுபசியை தூண்டும். குடலில் உள்ளதேவையற்ற வாயுவை அகற்றும். வெங்காயப்பூவினைஏதாவது ஒரு
வகையில் பக்குவம் செய்து சாப்பிடகீழ்வாதம்
குணமடையும்
வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து,
வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும்.
மூலச்சூடு தணியும்.
வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல்
பலமாகும்.
வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத்
தளர்ச்சி குணமாகும்.
வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின்
பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவ மறைந்துவிடும்.
திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால்
மூர்ச்சை தெளியும்.
வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச்
சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி
குடித்து வர மேகநோய் நீங்கும்.
வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து
சாப்பிட மேகநோய் குறையும்.
வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள்
தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை
தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது.
ஜீரணத்துக்கும் உதவுகிறது.
வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு
அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக
மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில்
வெங்காயச்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி
சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
வெங்காயம் நறுக்கும் போது அதன் இதழ்களில் காணப்படும் ஆலினேஸ் என்ற நொதி அந்த இதழ்களில் காணப்படும் புரோப்பினிசிஸ்டைன் சல்பாக்சைடு என்ற பொருள் மீது வினை புரிந்து புரோப்பின் சல்பினிக் அமிலமாக மாறுகிறது. இந்த அமிலம் எளிதில் ஆவியாகி காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து உறுத்துகிறது. அதன் விளைவாக கண்ணீர் சுரப்பியிலிருந்து நீர் சுரந்து வெளியேறுகிறது.
படித்தை பகிர்கிறேன்☺
Our You tube channel https://www.youtube.com/c/A2ZAMUTHAM
Our Facebook https://www.facebook.com/A2ZAMUTAHM
Reference: Books and other web source
If you have any suggestion kindly write comment section.
By Nathan PG Dip in Yoga and Holistic Heath.....
thank you for the useful tips
ReplyDelete