கரும்புச்சாறு அடிக்கடி குடிப்பவர்களா? எனில் உடல்கழிவுகளை வெளியேற்றுவதில் சிறந்தவர் நீங்கள்
நாம் அதிக பணம் கொடுத்து விலையுயர்ந்த கெமிக்கல் நிறைந்த உடலுக்கு தீங்கு செய்யக் கூடிய கார்பனேட்டட் பானங்களை வாங்கி சாப்பிடுகிறோம். அது தீமை என்று தெரிந்தும் நீ சாப்பிடு கிறோம் ஆனால் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த கரும்பு சாற்றில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?
கரும்பு சாறில் இயற்கையான இனிப்பு சுவை அதிகம் இருக்கிறது. அது உடலுக்கு உடனடியாக ஊக்கம் கொடுக்கும் தன்மை கொண்டது.
300 மி.லி. கரும்பு சாறில் 111 கலோரி உள்ளது. புரதம், கார்போஹைட்ரேட் மட்டுமின்றி அதிக அளவில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியமும் நிறைந்திருக்கிறது.
உடலிலுள்ள உப்பு சத்து இழப்பை ஈடு செய்யும்தன்மை கரும்பு சாறுக்கு உண்டு. அதனுடன் சிறிதளவு இந்துப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம். கூடுதல் சுவை கிடைக்கும்.
கரும்பு சாறு தினமும் உடலுக்கு தேவையான சர்க்கரையின் அளவை நிவர்த்தி செய்யும் தன்மையும் கொண்டது. உடலில் குளுக்கோஸ் அளவையும் சீராக பராமரிக்கவும் உதவும்.
நீங்களே பாருங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.
● கரும்பு சாரு அடிக்கடி சாப்பிடுவதால் உங்கள் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி உடலைத் தூய்மைப் படுத்துவதில் உதவுகிறது.
● உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் உடல் எடை குறைய வழிவகுக்கிறது.
●அதுமட்டுமல்ல கரும்புசாறு என்பதே நமது உடலுக்கு உடனடி ஆற்றலை தரும் சிறந்த ஒன்றாகும்.
● உங்களுக்கு மிகவும் தாகமாக இருந்தால் கெமிக்கல் நிறைந்த பானங்களை தவிர்த்து கரும்பு சாற்றை சாப்பிட்டு பாருங்கள் அது உங்களுக்கு புத்துயிர் அளித்து உங்கள் மனநிலையை புதுப்பிக்கும் தன்மை உடையது.
● அதே போன்று விட்டமின் சி அதிகமாக கரும்புசாறுகளில் காணப்படுகிறது. இது தொண்டைப்புண் வயிற்றுப்புண் குணமாக உதவுகிறது.
● கரும்பு சாறு என்பது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்றுகளை தடுக்கக்கூடிய எதிர்ப்பொருட்களின் ஒரு வளமான மூலமாகவும்.
● அதே போன்று உங்கள் தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சல் இருப்பது போல் உணர்ந்தால் கரும்பு சாற்றை தொடர்ந்து குடித்து வரும்போது அவை மறைந்துவிடும்.
● சிலருக்கு பற்கள் வலிமை இழந்து பற்களின் ஈறுகள் மிகுந்த சேதமடைந்து இருக்கும் இவர்கள் கரும்பு சாறு தொடர்ந்து சாப்பிடுவதால் பற்களுக்கு வலிமை அளிக்கிறது.
● உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் தடுக்கிறது. மேலும் இதனால் இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் அளிக்கிறது. வயிற்றுப் புண்களை சரிசெய்யும் மலச்சிக்கலைப் போக்குகிறது.
● பொதுவாக உடல் எரிச்சல் என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும் இதற்கு கரும்பு சாற்றுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம். இது உடல் சூட்டை குறைக்கும் குணமுடையது.
● நமது உடலின் அனைத்து இயக்கங்களையும் மூளைதான் நிர்வாகம் செய்கிறது. அந்த வகையில் கரும்பு சாறு அருந்துவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது.
● கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றின் அளவுகளை சமன் செய்ய உதவுகிறது. மற்றும் செரிமான சாருகள் சுரக்கவும் இது உதவுகிறது.
● பொதுவாக பெரும்பான்மையான செரிமான சிறப்புகள் சுரக்க கல்லீரலே முதல் காரணமாக இருக்கும்.
● கல்லீரல் நன்கு செயல்புரியவும் செரிமான சிறப்புகள் நன்கு சிறக்கவும் கரும்பு பெரும் துணை புரிகிறது.
● சித்த மருத்துவத்தின் படி உடலில் அதிகரித்து பித்தத்தை கரும்பு சமநிலை படுத்தும்.
● சிறுநீர் சீராக வெளியாவதில் சிக்கல் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.
● கரும்பில் உள்ள பாலிஃபீனால் என்னும் இயற்கையான வேதிப்பொருள் ரத்த தட்டு அணுக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து ஏற்படக்கூடிய இரத்த உறைவை தடுப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.
● முக்கியமாக மென் கரும்பு இனிப்பாக இருந்தாலும் இதில் இருக்கும் சுக்ரோஸ் எனும் கூட்டு சர்க்கரை உடலில் வளர்சிதை மாற்றம் நடக்கும் பொழுது செயல்புரியும் நொதிகள் காரணமாக இரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதில் அதிகரிக்காது.
● இது low glycemic index உணவு வகையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒருமுறை அளவாக அருந்தாலும் நல்ல பலனை தரும்.
● உடலுக்கு பல நன்மைகள் செய்யக்கூடிய இந்த கருப்பு சாற்றை நீங்கள் தேடிப்பிடித்து சாப்பிட வேண்டிய அவசியமில்லை. போகின்ற இடமெல்லாம் கிடைக்கின்றது.
● கரும்பு சாற்றை இனி அடிக்கடி சாப்பிடுங்கள். ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் சாப்பிடும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.
கரும்பு சாறில் கொழுப்பு துளியும் இல்லை. கோடை காலத்தில் தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு பருகலாம். அதற்கு மேல் பருகக்கூடாது.
படித்தை பகிர்கிறேன்☺
Our You tube channel https://www.youtube.com/c/A2ZAMUTHAM
Our Facebook https://www.facebook.com/A2ZAMUTAHM
Reference: Books and other web source
If you have any suggestion kindly write comment section.
By Nathan PG Dip in Yoga and Holistic Heath.....
No comments:
Post a Comment