Tuesday, March 23, 2021

பச்சைப் பட்டாணியின் நன்மை GREEN PEAS BENEFITS

 பச்சைப் பட்டாணியின் நன்மை


அசைவ உணவை சாப்பிடாதவர்கள் தங்கள் உடலுக்கு தேவையான சத்துகளை தாவர உணவுகளிலிருந்தும் பெற முடியும். காய்கள், பழங்கள், பருப்பு வகைகள் என ஏகப்பட்ட உணவு வகைகள் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இருக்கின்றன. அந்த வகையில் மனிதர்களுக்கு தேவையான பல சத்துக்களை அளிக்கும் உணவாக பச்சை பட்டாணி இருக்கிறது. பச்சை பட்டாணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்

மனிதனின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு பெரிதும் உதவும் தானியங்களில் ஒன்றுதான் பட்டாணி.

ஆராச்சியாளர்களின் ஆராய்ச்சியின் படி, பச்சை பட்டணியில் உள்ள Coumestrol எனப்படும் Phytonutrients புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் ஒன்றாகும்.

இதனை நாள்தோறும் உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்று புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக அமையும்.



என்னென்ன சத்துக்கள் உள்ளன?

பச்சை பட்டாணியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. 8 விதமான உயிர்சத்துக்களும், 6 விதமான தாது உப்புகளும் மற்றும் நார்சத்து, புரதம் அதிகம் உள்ளது. புரதம் அதிகளவாக 15.5 முதல் 39.7 சதவீதம் வரை காணப்பசத்துக்கள்

100 கிராம் பச்சை பட்டாணியில் உள்ள சத்துக்கள்

நீர்ச்சத்து 75.6 சதவீதம், 

புரதம் 6.2 கிராம், 

கொழுப்புச்சத்து 0.4 கிராம், 

கார்போஹைட்ரேட் 16.9 கிராம், 

நார்சத்து 2.4 கிராம், 

கால்சியம் 32 மில்லி கிராம், 

பாஸ்பரஸ் 102 மி.கிராம், 

இரும்புசத்து 1.2 மி.கிராம், 

சோடியம் 6 மி.கிராம், 

பொட்டாசியம் 350 மி.கிராம், 

பீட்டாகரோட்டீன் 450 மி.கிராம், 

தையாமின் 34 மி.கிராம்,

ரிபோளேவின் 16 மி.கிராம், 

நியாசின் 2.7 மி.கிராம், 

அஸ்கார்பிக் அமிலம் 26 மி.கிராம், 

விட்டமின்ஏ 680 ஐயு.

மருத்துவ பயன்கள்

பச்சை பட்டாணியில் நிகோடினிக் அமிலம்(Nicotinic Acid) என்ற வேதிப்பொருள் இருப்பதால் இது ரத்தத்தில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருந்தால் அதை குறைக்கிறது. 

பச்சை பட்டாணியில் லேக்டின்(Lactin) என்ற புரதப்பொருள் இருப்பதால் ரத்த சிவப்பு அணுக்கள் உறைந்து ரத்தக் கட்டுகளாக மாறுவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கலாம்.

பச்சை பட்டாணியில் அதிகளவு விட்டமின் சி இருப்பதால் எல்லா வகையான புற்று நோய்களால் நாம் பாதிக்காதவாறு பாதுகாக்கிறது பச்சை பட்டாணியில் கரையாத நார்சத்து இருப்பதால், கொழுப்பு சத்தை குறைத்து இதயநோய், பக்கவாதம் வராமல் தடுக்கிறது.

பச்சை பட்டாணியில் லுட்டின்(Lutin) என்ற கரோட்டீனாய்டு(carotenoid) இருப்பதால் வயதானவர்களுக்கு கண்ணில் ஏற்படு புரை வளர்தலை குறைக்கிறது

பச்சை பட்டாணியில் அதிகளவு இரும்புசத்து இருப்பதால் நம் உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகையை போக்கி உடல் சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், கவனக்குறைவு ஆகியவற்றை போக்குகிறது

விட்டமின் கே இருப்பதால் எலும்புகளை பலப்படுத்தி, பாதுகாக்கிறது

பச்சை பட்டாணியில் விட்டமின் சி இருப்பதால் ரத்த புற்று, நுரையீரல் புற்று, ஆசனவாய் புற்று போன்ற எல்லா புற்று நோய் வராமல் தடுக்கிறது.

பச்சைபட்டாணியில் உள்ள விட்டமின் பி6 ரத்த குழாய் சுவர் சுருங்குதலைத் தடுத்து, இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது

பச்சைபட்டாணியில் விட்டமின் பி6, இரும்பு சத்து இருக்கிறது. இவை இரண்டுமே ஹோமோசிஸ்டைன்(Homocysteine) என்ற ஆபத்தை விளைவிக்கும் வேதிப் பொருள் உடலில் உருவாவதை தடுக்கிறது.

இந்த வேதிப்பொருள் தான் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் எலும்பு பலம் குன்றல் ஏற்பட காரணமான மூலப்பொருள்

எனவே மாதவிடாய் நின்ற பெண்கள், வயதானவர்கள் பச்சை பட்டாணியை உட்கொண்டால் எலம்பு பலமடையும். மூட்டு வலி, எலும்பு முறிவு வராமல் தடுக்கலாம்.



கேரட் பட்டாணி சாதம்

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் சூடாக்கி, கிராம்பு, பிரியாணி இலை, பட்டை வதக்கவும்.

வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதில் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும். கேரட் துருவல், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

கேரட் நன்கு வேகும் வரை மூடி வைக்கவும். பிறகு அதில் பட்டாணி சேர்க்கவும். தயாராக உள்ள சாதத்தை சேர்த்து மெதுவாகக் கிளறவும். தீ குறைத்து, 5 நிமிடம் கிளறவும். ரெய்த்தாவுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.

பயன்கள்

கேரட் கண்களுக்கு குளிர்சியை தரும் உணவாகும், மேலும் இதனை பட்டாணியுடன் சேர்த்து சேர்த்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இரண்டிலும் கால்சியம் சி நிறைந்துள்ளதால் வளரும் குழந்தைக்கு இந்த சாதத்தை கொடுப்பதன் மூலம் உடல் வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி ஏற்படும்.

பச்சை பட்டாணியை வேகவைத்து உப்பு, மிளகு சேர்த்து வாரம் 2 முறை வளரும் குழந்தைகளுக்கு தர உடல், மனம் பலப்பட்டு ஆரோக்கியமாக காணப்படுவர்

பச்சை பட்டாணி, கேரட், புதினா, பீன்ஸ் சேர்த்து வேகவைத்து உப்பு சேர்த்து சூப்பாக சிற்றுண்டிக்கு பதில் குழந்தைகளுக்குத் தரலாம்.

மனிதர்களின் உடலுக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது எலும்புகள். அவை ஒரு மனிதனுக்கு பலமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியம். பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்து அதிகம் நிறைந்துள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் மாற்றும் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.

சருமம்

மனிதர்களுக்கு இளமை காலங்களில் தோலில் பளபளப்பும், இளமை தன்மையும் அதிகம் இருக்கும். வயதுஏறிக்கொண்டு செல்லும் காலத்தில் தோலில் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும். இந்நிலைக்கு முக்கிய காரணம் நமது உணவில் மக்னீசியம் சத்து குறைவதே ஆகும். பச்சை பட்டாணியில் இந்த மக்னீசியம் அதிகமுள்ளது. பட்டாணி தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோல் சுருக்கங்கள் ஏற்படுவது தள்ளிப்போகிறது.

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் நார்ச்சத்து இருப்பது அவசியமாகும். இந்த நார்ச்சத்து தான் நமது உணவு எளிதில் செரிமானம் ஆகி மலச்சிக்கல், வயிறு கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பச்சை பட்டாணி சாப்பிடுபவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைப்பதால் செரிமான கோளாறுகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கிறது.

கொலஸ்ட்ரால் என்பது உணவில் இருக்கும் தீமையான கொழுப்புகள் உடலில் ரத்தத்தில் படிந்து எதிர்காலத்தில் இதயம் சம்பந்தமான கோளாறுகளை ஏற்படுத்துகிறது. பச்சை பட்டாணியில் பீட்டா குலுக்கன் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது. உடல் எடை அதிகமாகாமல் தடுக்கிறது.

நமது ரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்கள் குறைகிற போது நமக்கு ரத்த சோகை ஏற்படுகிறது இதை போக்க சத்து நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடுவது அவசியம். பச்சை பட்டாணியில் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்களின் பெருக்கத்தை தூண்டும் சத்துகள் அதிகமுள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை நீங்கும்.

நமது உடல் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமோ, அதே அளவிற்கு மனநலமும் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். மேலை நாடுகளில் நடைபெற்ற ஆய்வுகளில் தினமும் 100 கிராம் பச்சை பட்டாணி சாப்பிட்டு வந்த மனநலம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மனநிலை மற்றும் உடல் நிலையில் சிறந்த குணம் ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....

No comments:

Post a Comment

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...