முள்ளங்கியின் நன்மைகள்
வெள்ளை முள்ளங்கியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
வெள்ளை முள்ளங்கி பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களின் மிகச்சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.
100 கிராம் வெள்ளை முள்ளங்கி கீழ்க்கண்ட ஊட்டச்சத்தை அளிக்கின்றன.
- தண்ணீர் – 91.59 கிராம்
- கலோரி – 43 கிலோ கலோரி
- புரதம் – 0.65 கிராம்
- கொழுப்பு – 3.21 கிராம்
- கார்போஹைட்ரேட் – 3.3 கிராம்
- நார்ச்சத்து – 1.5 கிராம்
- சர்க்கரை – 1.76 கிராம்
- கால்சியம் (Ca) – 17 மிகி
- இரும்பு (Fe) – 0.15 மிகி
- மெக்னீசியம் (Mg) – 9 மி.கி
- பாஸ்பரஸ் (P) – 23 மி.கி
- பொட்டாசியம் (K) – 275 மி.கி
- சோடியம் (Na) – 267 மி.கி
- துத்தநாகம் (Zn) – 0.13 மிகி
- காப்பர் (Cu) – 0.098 மி.கி
- செலினியம் (Se) – 0.7 மைக்ரோ கிராம்
- வைட்டமின் சி – 14.6 மிகி
- ரிபோஃப்ளேவின் – 0.022 மி.கி
- நியாசின் – 0.145 மிகி
- வைட்டமின் பி -6 – 0.037 மி.கி
- ஃபோலேட் – 16 மைக்ரோ கிராம்
- கோலின் – 6.6 மிகி
- வைட்டமின் ஈ – 0.35 மிகி
- வைட்டமின் கே – 3.8 .g
- கொழுப்பு அமிலங்கள் – 0.478 கிராம்
வெள்ளை முள்ளங்கி நீண்ட
கால் போன்ற தோற்றம் கொண்டது.
இது மண்ணுக்கு அடியில்
வளரக்கூடிய ஒரு தாவரம்.
இது தரைக்கு மேலே,
அதன் மேல் பகுதியில் வேகமாக
வளரும் இலைகளைக் கொண்டுள்ளது.
முள்ளங்கியை நாம் சமைத்த பிறகோ அல்லது பச்சையாகவோ உண்ணலாம்.
முள்ளங்கி அல்லது ரேடிஸ் (Radish) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இவை முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சார்ந்தவை. ஆசியா மற்றும் ஐரோப்பாவில் இவை அதிகமாக பயிரிடப்படுகின்றன.
முள்ளங்கியில் வெள்ளை முள்ளங்கி, சிகப்பு முள்ளங்கி போன்ற பல பல வகைகள் உள்ளன.
வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருத்துவ குணம் வாய்ந்தது, சிவப்பு முள்ளங்கி சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
முள்ளங்கியில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன. மேலும் முள்ளங்கி உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும் தாது உப்புக்களையும் அளிக்கின்றன
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி, கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதில் மூள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கிறது.
முள்ளங்கியில் கால்சியம் சத்து மற்றும் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுகிறது.
முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.
முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.
பச்சிளம் குழந்தைகளுக்கு வரும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சனைகளுக்கு முள்ளங்கிப் பிஞ்சு சாறு சிறந்த மருந்தாகும்.
முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும்.
சிறுநீர்ப் பாதையில் பிரச்சினை உள்ள, சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருக்கும் பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.
முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.
ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த பயனளிக்கும்
முள்ளங்கியில் அதிகளவு உள்ள நார்ச்த்து மற்றும் நீர்ச்சத்து மலத்தினை இளக்கி கழிவாக எளிதாக வெளியேற்றுகிறது. செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை இக்காய் நீக்குவதால் மூலநோய், வாயு தொந்தரவு, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு இது சிறந்த தீர்வாக உள்ளது.
முள்ளங்கியானது சிறுநீரை நன்கு பெருகச் செய்கிறது. சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலானது முள்ளங்கிச் சாற்றினை அருந்தும்போது குணமாகிறது. இக்காயானது சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் பாதையில் உள்ள நச்சினை வெளியேற்றுகிறது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் குறைபாடுகளுக்கு இக்காய் நல்ல மருந்தாக உள்ளது.
இவை ஆயுர்வேதத்திலும்
பல நோய்களுக்கு மருந்தாக
பயன்படுத்தப்படுகின்றன.
புற்றுநோய்
வெள்ளை முள்ளங்கியில் பாலிபினால்கள்
போன்ற பினோலிக் சேர்மங்கள்
நிறைய உள்ளன. இந்த சேர்மங்கள் கருப்பை
புற்றுநோய் உள்ளிட்ட பல
புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க
உதவுகின்றன
எடை இழப்பிற்கு
வெள்ளை முள்ளங்கி குறைவான
கலோரிகளையும் மற்றும் அதிகமான
நார்ச்சத்தையும் கொண்டுள்ளதால் அது
உடல் எடையை குறைக்க உதவும்
மேலும், இது மாவுச்சத்து இல்லாத
காய்கறியாக இருப்பதால், குறைந்த
அளவே கார்போஹைட்ரேட்
கொண்டுள்ளது.
குறைந்த கார்போஹைட்ரேட்
உள்ள உணவுகளை உண்பது
உங்களுக்கு வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் எனவே,
முள்ளங்கி போன்ற மாவுச்சத்து இல்லாத
காய்கறிகளை சாப்பிடுவது ஆரோக்கியமாக
உங்கள் எடையை பராமரிக்க உதவும்.
நீரிழிவு நோய்க்கு
முள்ளங்கி மற்றும் அதில் உள்ள அதிக
நார்ச்சத்துக்கள் உணவுக்குப் பிந்தைய இரத்த சர்க்கரை அளவுகளை குறைக்க உதவும் .
மேலும், சிட்ரஸ் பழங்கள் அல்லது சிலுவை காய்கறிகளை உட்கொள்வது வகை 2 நீரிழிவு நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன .
எனவே, வெள்ளை முள்ளங்கி உட்கொள்வது டைப் 2 நீரிழிவு நோயை வராமல் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உதவும்.
இதய நோய்
வெள்ளை முள்ளங்கியில் நமது
இதயத்தை பாதுகாக்கும் வைட்டமின்கள்,
தாது உப்புக்கள் மற்றும்
நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
ரு ஆய்வில் , காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது இதய மற்றும் பிற நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும் என தெரியவந்துள்ளது.
மேலும், வெள்ளை முள்ளங்கியை போன்ற சிலுவை காய்கறிகளை உண்பது இதய நோய்கள் வராமல் தடுக்க உதவும் என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
Our You tube channel https://www.youtube.com/c/A2ZAMUTHAM
Our Facebook https://www.facebook.com/A2ZAMUTAHM
Reference: Books and other web source
If you have any suggestion kindly write comment section.
By Nathan PG Dip in Yoga and Holistic Heath.....
No comments:
Post a Comment