Tuesday, March 2, 2021

சுரைக்காயின் நன்மைகள்| BOTTLE GOURD BENIFITS

 

சுரைக்காயின்  நன்மைகள்| BOTTLE GOURD BENIFITS

சுரைக்காய் என்றால் பலரும் இதில் என்ன சத்துகள் இருக்க போகிறது என்றே நினைத்து கொள்கிறார்கள். சுரைக்காயின் பயன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

சிறுநீரக கோளாறு, உடல் சூட்டை குறைக்கும் சுரைக்காய்

சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துகளை கொண்டுள்ளது. நீர்சத்து 96.07 %, இரும்புச் சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற சத்துகளை கொண்டுள்ளது சுரைக்காய்.

சுரைக்காயின் சதைப் பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது.



அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும்.

கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைபகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.

சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும்,வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது.

மனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் பயன்படுத்தலாம்.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும்



சுரைக்காய் ஜூஸ் தயாரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான அமிலம் மட்டுப் படுத்தப்படும் மற்றும் சுரைக்காயில் சக்தி வாய்ந்த சிறுநீர்ப் பெருக்கியாக செயல்படுகிறது.

ஜீரண சக்தியை அதிகரிக்க சுரைக்காய் ஜூஸை குடித்தால் கல்லையும் ஜீரணுக்கும் சக்தியை கொடுக்கும்.

கோடை கால வெப்பம் நமது உடல் சூட்டை அதிகரிப்பதோடு, தோல் சம்பந்தமான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. சுரைக்காய் பக்குவம்  செய்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் தாக்காமல் காப்பதோடு நமது தோலுக்கு மினுமினுப்பையும் கொடுக்கும்.



உடல் எடையை குறைக்க நினைப்பவர்கல் சுரைக்காய் ஜூஸ் அதிக நீர்ச்சத்து கொண்டது. இது கொழுப்புகளைக் குறைக்கும். வளர்சிதை  மாற்றத்தை அதிகரிக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க, சுரைக்காய் மற்றும் தேன் இரண்டையும் கலந்து சாப்பிடலாம். இதனால் ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை தூண்டச் செய்வதால் ஆரோக்கியம் மேம்படும்.

கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம். இரும்பு சத்து, விட்டமின் இருப்பதால், இதனை கர்ப்பிணிகள் எடுத்துக் கொண்டால் கருவின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இவற்றை மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று எடுத்துக் கொள்ளுவது நல்லது.

மன அழுத்தத்தை போக்வதோடு, நரம்புகளில் உண்டாகும் இறுக்கங்களை போக்குகிறது. ஸ்ட்ரெஸ் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்துகிறது.

கல்லீரலில் உண்டாகும் பிரச்சனைகளை சரிப்படுத்தும். வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றும். அல்சர் வராமல் தடுக்கும்.

நல்ல செரிமானம் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளை தீர்க்கும். சுரைக்காயானது அதிக அளவு நார்சத்தினைப் பெற்றுள்ளது. இந்த நார்சத்தானது செரிமானம் நன்கு நடைபெறச் செய்கிறது. மேலும் உடலானது ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.

குடலில் உள்ள நச்சுப்பொருட்களை கழிவாக வெளியேற்றுவதிலும் நார்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இக்காயில் உள்ள நார்சத்து மற்றும் நீர்சத்து மலச்சிக்கல், செரிமானமின்மை, வாயு தொந்தரவு ஆகியவை ஏற்படுவதையும்  தடைசெய்கின்றது



சுரைக்காயானது அதிக அளவு நீர்ச்சத்துடன் குறைந்தளவு எரிசக்தியையும், உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இதனால் இக்காயை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதுடன் குறைந்த அளவு எரிசக்தியும்  கிடைக்கிறது.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இக்காயினை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டு உடல் எடையைக்  குறைப்பதோடு ஆரோக்கியத்தையும் பெறலாம்.

 சுரைக்காயினை வாங்கும்போது மேல்தோலை நகத்தினால் கீறினால் மேல்தோல் எளிதாக வரவேண்டும். இக்காயனது இளம்பச்சை வண்ணத்தில் இளமையானதாக அளவில் பொதுவானதாக இருக்க வேண்டும்.

#BOTTLE_GOURD

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTAHM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan PG Dip in Yoga and Holistic Heath.....

No comments:

Post a Comment

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...