பெருநெல்லி Indian goose berry
Phyllanthus emblica
வேறு எந்த ஒரு கனியிலும் இல்லாத அளவிற்கு வைட்டமின் ‘சி’ உடையது நெல்லிக்கனி. இந்தியா முழுவதும், பாலைப் பகுதியைத் தவிர இதர இடங்களில் இலையுதிர் காடுகளில் காணப்படுகிறது. இதன் அருமையான கனிகளுக்காகத் தோட்டங்களிலும் வீடுகளிலும் வளர்க்கப்பட்டு வருகிறது.
நெல்லி மரம் 8-12 மீட்டர் உயரம் வளரக்கூடியது. அடிமரம் 45 செ.மீ அளவிற்குப் பருத்து சிறிது உயரத்தில் கிளைகளைப் பரப்பிக் கொண்டு, ஓரளவிற்கு அடர்ந்து காணப்படும். பட்டை கருமைச் சாம்பல் நிறத்தில் சொரசொரப்பாக இருக்கும்.இவை வறட்சியை தாங்கி வளரக்கூடியவை.
புதுத்தளிர்கள் உருவாகத் துவங்கியதும் அதன் சந்துகளிலிருந்து பூக்களும் தோன்ற ஆரம்பிக்கும். தமிழகத்தில் நெல்லிமரம் இரு முறை பூக்கின்றன. பிப்ரவரியில் ஒரு முறையும் ஜூலையில் மற்றொரு தடவையும் பூக்கும். ஆனால் பிப்ரவரியில் அதிக அளவு காய்கள் உருவாவதில்லை. ஜூலையில் பூக்கும் சமயமே நிறைய காய்கள் கிடைக்கின்றன.
நெல்லியின் தழைகள் கால்நடைகளுக்குத் தீவனமாகும். தழையை எருவாகவும் பயன்படுத்துகின்றனர்.
நெல்லிக்கனியில் வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது. நெல்லிக்கனியிலுள்ள வைட்டமின் ‘சி’ சத்து 100 கிராம் சதையில் 720 மில்லி கிராம் வரை சில கனிகளில் இருக்கும். கடலில் பயணம் செய்வோரும் நெல்லிக்கனிப் பொடியை உணவுடன் கலந்து உண்டால் கடல் நோய் (sea - sictness) வராது.
நெல்லிக்கனியில் நிறைய பெக்டினும் உள்ளது. நெல்லிக்கனியுடன் கடுக்காயையும் சேர்த்து தோல் பதனிட உபயோகிக்கின்றனர்.
நெல்லிக்காயிலிருந்து எழுதும் மையும் சாயப்பொருளும் தயாரிக்கலாம். காயிலிருந்து எடுக்கப்படும் ஒருவித எண்ணெய் தலை முடியை வளர்க்கும் எனக் கருதப்படுகிறது.
இதற்கு நறுமணமும், பூசன மற்றும் பாக்டீரியா நாசினியாகச் செயல்படும் திறனும் உள்ளன. நெல்லி விதையில் புரதத்தையும் கொழுப்பையும் சிதைக்கும் என்ஸைம்கள் உள்ளன.
மரத்துண்டுகளையும், கிளைகளையும் கலங்கிய நீரில் போட்டு வைத்திருந்தால் அதாவது கிணறுகளில் நீர் தெளிந்துவிடும். மற்றும் உப்பு நீரில் உப்பின் கடுமையைக் குறைத்துவிடும்.
நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது; குளிர்ச்சித் தன்மையானது; கண்களுக்குக் குளிர்ச்சி தரும்; செரிமானத்தைக் தூண்டும்; சிறுநீர் பெருக்கும்; குடல் வாயுவை அகற்றும்; பேதியைத் தூண்டும்; உடல்சூடு, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெள்ளை, ஆண்குறிக் கொப்புளங்கள் போன்றவற்றைக் குணமாக்கும்.
நெல்லிமுள்ளி எனப்படும் உலர்ந்த காய் எல்லாக் காலங்களிலும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். நெல்லிக்காய் இலை, காய், வற்றல் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்ததாக உள்ள நெல்லிக்கனிகள் பழ வகைகளுள் மிகவும் முக்கியமானவை. நெல்லிக்காய் வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய் போன்றவை ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களாகும்.
நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுக முடியாது.
நெல்லியை வணிக ரீதியில் சாகுபடி செய்ய
ஒரு ஏக்கரில் 15 அடி இடைவெளியில் ஏறத்தாழ 200 கன்றுகள் வீதம் நடவு செய்யலாம். ... ஏக்கருக்கு 4 முதல் 6 தேனீ பெட்டி வைத்தால் மகரந்தச் சேர்க்கையின் மூலம் பூ பிடிப்பது அதிகமாக்கலாம். மரங்களை குட்டையாக வளர்க்க வேண்டும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பி.எஸ்.ஆர் 1 இரகமும், வட இந்திய இரகங்களான சாக்கியா, பனாரசி, என்.ஏ.7, கிருஷ்ணா, காஞ்சன் போன்ற இரகங்கள் தமிழகத்தில் பயிர் செய்யப்படுகின்றன. ஆயினும் பி.எஸ்.ஆர் 1 இரகமே தமிழகத்தில் சாகுபடி செய்ய உகந்ததாகவும், அதிக மருத்துவ குணம் கொண்டதாகவும் கருதப்படுகிறது.
நெல்லி எல்லாவகை மண்ணிலும் நன்கு வளரும் தன்மையுடையது. வடிகால் திறனுள்ள செம்மண் மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை (PH) 6.5 முதல் 9.5 வரை தாங்கி வளரும். ஆயினும், இதன் வளர்ச்சி 7 முதல் 8.5 வரையிலான கார அமிலத்தன்மை கொண்ட மண்ணில் துரிதமாக வளரும்.
ஒட்டுச் செடிகள் தான் நடவுக்கு பயன்படுத்தப்படுகின்றன.நெல்லிக்கன்றுகள் நட்ட முதலாம் ஆண்டு சுமாரான வளர்ச்சியே இருக்கும். இரண்டாமாண்டு முதல் வளர்ச்சி துரிதமாக காணப்படும்.ஆண்டுக்கு இரண்டு முறை மகசூல் கிடைக்கும். ஜூன் மாத கடைசியில் பூ வந்தால், நவம்பர் மாதம் வரை அறுவடை செய்யலாம். ஜனவரியில் பூத்தால் ஏப்ரல் வரை காய்கள் கிடைக்கும். ஒவ்வொரு மகசூல் முடிந்ததும் கவாத்து செய்து, உரம் வைப்பது அவசியம். அப்படி செய்த பதினைந்தாவது நாள் பூக்க ஆரம்பிக்கும்.
நடவு செய்யப்பட்ட ஒட்டுக்கன்றுகள் 4வது வருடத்தில் இருந்து சுமார் 30 கிலோ முதல் 150 கிலோ நெல்லிக் கனிகள் மகசூலாகப் பெறலாம்.
நன்றி திரு அரவிந்தன்
படித்தை பகிர்கிறேன்☺
Our You tube channel https://www.youtube.com/c/A2ZAMUTHAM
Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM
Reference: Books and other web source
If you have any suggestion kindly write comment section.
By Nathan B.com PG Dip in Yoga and Holistic Heath.....
No comments:
Post a Comment