Tuesday, March 16, 2021

மூல நோய் தீர்க்கும் துத்திக் கீரை

 

துத்திக் கீரையை தினந்தோறும் சமையலில் சாப்பிட்டு வந்தால் மூலநோய் தலைக் காட்டாது


மூலம் என்றால் ஏதோ ஒரு வகை கட்டி என்று மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மூலத்தில் மட்டும் மொத்தம் ஒன்பது வகை இருக்கிறதென்றும் 21 வகை இருக்கிறதென்றும் பலவாறு கூறப்படுகிறது. அவற்றில் சிலவற்றைக் குறித்து இங்கு பார்ப்போம். வெளி மூலம்

உள்மூலம்

பௌத்திரமூலம்

ரத்த மூலம்

சதை மூலம்

வெளுப்பு மூலம்

காற்றுமூலம்

நீர் மூலம்

தீ மூலம்

சீழ் மூலம் என பலவகை உண்டு.

எத்தகைய மூலக்கட்டிகள் வந்தாலும் துத்தி இலை மீது விளக்கெண்ணெய் தடவி, அனலில் காட்டி மூலக்கட்டியின் மீது வைத்துக் கட்டி விட, கட்டி உடைந்து விடும். மூல முனைகள் உள்ளுக்குச் சென்று விடும். வேண்டுமானால் மூலத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை செய்து பார்க்கலாம்.


சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூல நோயாக மாறுகிறது.

இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர் விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூல நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூல நோய் படிப்படியாகக் குணமாகும்.

உடல் சூடு தணிய:-

துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான /அளவு உப்பு சேர்த்து இரசமாக சமையத்து உண்ண  உடல் சூடு தணியம்.

துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழலாம்.

பல் ஈறு பிரச்சனை தீர:

பல் ஈறு பிரச்சனையால் அவதியுற்றுக்கொண்டிருந்த அந்த நபருக்கு துத்தி இலைக் குடிநீரை வாயிலிட்டு கொப்பளிக்கும்படி ஆலோசனை வழங்க, துத்தியின் மற்ற குறிப்புகள் பற்றியும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது

உடல் வலி, மலச்சிக்கல் தீர:

கொதிக்குற நீரில் துத்தி இலையப் போட்டு வேகவச்சு, அந்த தண்ணிய ஒரு துணியில நனைச்சுப் பிழிஞ்சு, உடல் வலிக்கு ஒத்தடமிட்டா உடல் வலி தீரும். இலைய கசாயம் செஞ்சு அதோட, பாலும் சக்கரையும் சேத்து குடிச்சு வந்தா, மலச் சிக்கல் தீரும். அதோடு மூலச்சூடும் தணியும்! அப்புறம்... இந்த துத்தி இலைய பருப்பு சேத்து சாப்பாட்டுல கலந்து சாப்பிடலாம். நம்ம முன்னோர்களெல்லாம் இந்த துத்திய உணவாதான் பாத்தாங்க, நாமதான் மருந்தா பாக்குறோம். துத்தி விதையில கூட நல்ல மருத்துவ குணங்கள் இருக்கு.

துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழலாம்.

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTAHM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan PG Dip in Yoga and Holistic Heath.....

No comments:

Post a Comment

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...