Muntingia
குடை போன்ற தோற்றத்துடன் இலேசான தொங்கு கிளைகளை கொண்ட இம்மரம் தமிழகம் முழுக்க சாலைகள் ஏரிகரைகள் மற்றும் காலியிடங்களில் காண முடியும்.இதன் சிறிய பழங்களை நசுக்கினால் நெய் போன்ற பழக்கூழ் வெளியாவதால் இதனை நெய் பழம் எனவும் அழைக்கப்படுகிறது.
இதனை சிங்கப்பூர் செர்ரி, ஜமாய்கன் செர்ரி,பனாமா பெர்ரி, பெஜ்லி மரம் மற்றும் ஸ்ட்ரா பெர்ரி மரம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
இதன் தாயகம் தென் மெக்சிக்கோவாகும். கரீபியன், மத்திய அமெரிக்கா, மேற்கு தென் அமெரிக்கா, பெரு, பொலிவியா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன.
இது 7-12 மீட்டர் உயரமுடைய கிளைகளைக் கொண்ட சிறிய மரம்.
வறட்சியையும் பல்வேறு மண் வகைகளிலும் வளரக்கூடியது.நடவு செய்த 18 மாதங்களில் விரைவாக வளர்ந்து மரமாகி பூத்து பழங்களை அளிக்க வல்லது.
விரைவாக வறண்ட நிலங்களில் பசுங்காடுகளை உருவாக்க நினைப்பவர்களும், குறுகிய காலங்களில் நிழல்தரும் மரங்களைகட்டிடங்களின் அருகில் வளர்க்க நினைப்பவர்களும் இம்மரங்களை தேர்வு செய்யலாம்.
இதன் பூ சிறியதாகவும் வெள்ளை நிறத்துடன் காணப்படும். இது சிவப்பு, இள மஞ்சள் பழங்களை விளைவிக்கின்றது.
இதன் பழங்கள் உண்ணத்தக்கதும், இனிப்பான சாற்றைக் கொண்டுள்ளது. இதனுள் மிகச்சிறிய மஞ்சள் நிற விதைகள் அதிகமாகக் காணப்படும்.
சிங்கப்பூர் செர்ரி பழத்தைத் சாப்பிட, வௌவால் மற்றும் விதவிதமான பறவைகள் தோட்டத்துக்கு வரும். அந்தப் பறவைங்களோட எச்சம் மூலமா, சந்தனம் மாதிரியான அரிய வகை செடிகள் தோட்டத்துல வளரும்.தங்கள் பகுதிகளில் நல்ல சுற்றுச்சூழலை உருவாக்க நினைப்பவர்கள் பறவைகள் அதிகம் கவரவும்,அவைகள் வசிக்க இருப்பிடத்தை உருவாக்கவும் இம்மரங்களை நடவு செய்யலாம்.
சிங்கப்பூர் செர்ரி மரங்களை, பழத்தோட்டத்தில் நடவுசெய்வதன் மூலம் பறவைகள் மட்டுமல்ல,அணில், குரங்கு,வௌவால்கள் முதலியவை இந்தப் பழங்களைதான் சாப்பிடும். இதனால, தோட்டத்துல இருக்கற பழங்களுக்கு
அதிக சேதம் வராது. வௌவால்களால் அதிகம் சேதம் ஏற்படும் பழ வகை தோட்டங்களின் எல்லைகளில் இம்மரங்களை விவசாயிகள் நடவுசெய்வதன் மூலம் பழங்களுக்கு ஏற்படும் சேதங்களை தவிர்க்க முடியும்.
மரம் விறகாகவும் கிராமப்புறத்தில் சிறிய கட்டட வேலை செய்யவும் பயன்படுகிறது! நார்சத்து உள்ளதால் தண்டு கயிர் திரிக்க பயன்படுகிறது.
மரங்களை அலங்காரத்திற்கு வளர்க்கலாம். பழங்களை அப்படியே சாப்பிடலாம். பழங்களை ஜாம் செய்தும் சாப்பிடலாம். இலைகளை கொண்டு தேனீர் தயாரித்து குடிக்கலாம். இது தலைவலிக்கும் குடற்புண்ணிற்கு மருந்தாகவும் பயன்படுகிறது பழங்கள் மூச்சு கோளாறுகளை சரிசெய்யும் .
இந்த மரம் அறுபது வகையான பறவைகள் மற்றும் சிறு விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது .
விதைகள் மற்றும் தண்டுகள் மூலமாக இதை பெருக்கம் செய்யலாம். வேகமாக வளரும் இயல்பு மற்றும் வறண்ட நிலங்களிலும் வளரும் தன்மை உடையதால் உயரம் குறைவான மலைச்சரிவுகள் மற்றும் தரிசு நிலங்களில் புதிய காடுகளை உருவாக்க இம்மரங்களை நடவு செய்யலாம். நகர்புறங்களில் அமைக்கப்படும்
சுற்றுச்சூழல் பூங்காக்களுக்கு இவை ஏற்றதொரு மரமாகும்.
அரவிந்தன்
இது போன்று மேலும் பல பயனுள்ள குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்
படித்தை பகிர்கிறேன்☺
Our You tube channel https://www.youtube.com/c/A2ZAMUTHAM
Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM
Reference: Books and other web source
If you have any suggestion kindly write comment section.
By Nathan B.com PG Dip in Yoga and Holistic Heath...