ஆசாரிப்புளி |Sour currant tree
Antidesma acidum
ஆசாரிப்புளி 10 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு குத்து மரவகையாகும்.தமிழகத்தில் இம்மரத்தை மூலிகை மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.
ஆசாரிப்புளி மரமானது கிழக்கு ஆசியா,தென்னிந்தியா,மியன்மார்,தாய்லாந்து,கம்போடியா,வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பரவலாக காணப்படுகிறது.
பொதுவாக இலை உதிர் காடுகள் மற்றும் பசுமைக்காடுகளின் எல்லைப்பகுதிகளிலும்,மூங்கில் காடுகள் மற்றும் திறந்தவெளி காடுகளிலும் காணப்படும் ஆசாரிப்புளி மரங்கள் ஒரளவு நிழலை தாங்கி வளரக்கூடியவையாகும்
இவை அனைத்து வகையான மரங்களுடன் இணைந்து வளரும் தன்மையுடயவையாகும்
ஆசாரிப்புளி ஈரமானது முதல் வறண்ட வெப்பமண்டல பகுதிகளில் வளரும். அந்தமான் தீவுகளில் மணற்பாங்கான பகுதிகளிலும்,
ஜாவாவில் எரிமலை லாவா செம்மண் பகுதிகளிலும், தாய்லாந்து மற்றும் வியட்நாமில் இரும்பொறை மண்,செம்மண் மற்றும் பாறை பாங்கான பகுதிகளிலும் வளர்கிறது.
இவை 7 முதல் 10 மீட்டர் உயரம் வளர்ந்தாலும் அடிப்பகுதியிலிருந்து எழும் 10 செ.மீ விட்டம் கொண்ட பல கிளைகளை கொண்டு விளங்குவதால் குத்து மரம் போல் தோற்றமளிக்கும்.
இதன் இலைகள் உணவுக்காக பயன்படுத்தப்படுகின்றன.மிக்க மருத்துவ பண்புகள் மிக்க ஆசாரிப்புளியின் இலைகளும் வேர்களும் மூலநோய் மற்றும் சீதபேதி ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.
இதனுடையபட்டைகள்,பூக்கள்,இலைகள்,வேர்கள் போன்ற அனைத்து பகுதிகளுமே மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகின்றன.
நாய்கடி,தசைபிடிப்பு, நிமோனியா,புண்கள் மற்றும் கால்களில் அதிகப்படியான நீர்கோத்துக் கொண்டு வீக்கம் இருப்பது ஆகியவற்றை சரி செய்ய பயன்படுகிறது.
ஆசாரிப்புளி மருத்துவம் உணவு தவிர்த்து அழகு பொருட்கள் தயாரிப்பு மற்றும் கால்நடை மருத்துவத்திலும் பயன்படும் பயனுள்ள மரமாகும்.
அரவிந்தன்
படித்தை பகிர்கிறேன்☺
Our You tube channel https://www.youtube.com/c/A2ZAMUTHAM
Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM
Reference: Books and other web source
If you have any suggestion kindly write comment section.
By Nathan B.com PG Dip in Yoga and Holistic Heath.....
No comments:
Post a Comment