Friday, April 9, 2021

அரசமரம்| Peepul tree

 அரசமரம்| Peepul tree

       Ficus religiosa



பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு. அனைத்து மரங்களையும் விட அரசமரத்திற்கு தன் சிறப்பு அதிகம்.

இம்மரம் திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம் முதலிய சிவத்தலங்களில் தலமரமாக விளங்குகிறது. இந்திய அரசால் வழங்கப்படும் பொதுப் பட்டங்களில் மிக உயர்ந்த பட்டமான பாரத ரத்னா பட்டம் அரச இலையைக் கொண்டுள்ளது.

புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் இந்தியாதான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.

அரசு என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு மரமாகும். அரசு, ஆல், அத்தி போன்றவை தொடர்புடைய மரங்கள் ஆகும். இம்மரம் பாலைக் கொண்டுள்ளது.மிகுதியான ஆக்ஸிஜனை வெளியிடும். 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இத் தாவரத்தின் அடி மரத்தின் விட்டம் 3 மீட்டர் வரை வளரக்கூடியது. 

இந்தியா முழுவதும் இயற்கையாகவும் (wild), வளர்க்கப்பட்டும், சாலையோரங்களில் நிழல் தரும் மரமாகவும், ஆற்றங்கரையில் (ஆலயங்களில்) வழிபடுவதற்காகவும் இது வளர்க்கப்படுகின்றது. விரைவாக வளரக்கூடியது. விதைகள், போத்துகள் ஆகியவற்றின் மூலம் பரப்பப்படுகின்றது. எல்லா மரங்களுக்கும் தலைமையானதாகக் கருதப்படுவதால் இதற்கு அரசு என்று பெயர் ஏற்பட்டது.

அரச மரம் பரந்த கிளைகளுடன் காணப்படும். பட்டை சாம்பல் நிறம், இலைகள் மெல்லியவை, நுனி வால்போல் நீண்டது. இலைக்காம்பு நீளமானது. கனிகள் இலைக்கோணத்தில் ஜோடியாகக் காணப்படும். இளம் பருவத்தில் இது ஒட்டு வாழ் தாவரமாகத் தொடங்கி நாளடைவில் பெரும் மரமாவதுண்டு.

அரசமரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் புனித மரமாகும். புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச மரம்தான்.



அரசுநீழலிருந்தோன் என சூடாமணி நிகண்டு கடவுட் பெயர் தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.

அரசமரத்தை சுற்றினால் குழந்தை பேறுகிடைக்கும் என்பது என்பது ஒரு நம்பிக்கை. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளளதுஅரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.

அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் ( 1 மண்டலம் ) அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

இம்மரத்தின் இலைகளும் பசுங்கிளைகளும், கால்நடைகளுக்கும் யானைக்கும் தீவனமாகக் கொடுக்கப்படுகின்றன. இலைகளில், புல்லைவிட 2-3 மடங்கு கூடுதலாகப் புரசச்சத்தும் சுண்ணாம்புச்சத்தும் இருப்பதனால் அவை எளிதில் செரிக்கப்படுவதில்லை. ஆதலால் இலைகள் அவ்வளவு சிறந்த தீவனமாகக் கருதப்படுவதில்லை. இருப்பினும் அவற்றின் சக்கையைத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.

வட இந்தியாவில் இலைகள் பட்டுப் பூச்சிகளுக்கு உணவாகப் பயன்படுகின்றன. இம்மரத்தின் கனிகள் பறவைகளால் விரும்பி உண்ணப்படுகின்றன. இதன் பட்டையில் 4% டேனின் உள்ளது. இதன் காரணமாக முற்காலத்தில் தோல் பதனிடுவதற்கு இதன் பட்டை பயன்படுத்தப்பட்டு வந்தது. துணிகளுக்குச் சாயம் மாற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்டது.

நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர்.

 இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் ஒன்றான அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.

                    அரவிந்தன்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....

No comments:

Post a Comment

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...