முள்நாரி/துரியன்| Durian
Durio zibethinus
முள்நாறிப் பழம் தென்கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்டது. தென்கிழக்காசியாவிலிருந்து முள்நாறிப் பழம் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. முள்நாறிப் பழத்தை ஏற்றுமதி செய்வதில் தாய்லாந்து முதன்மை வகிக்கின்றது. தென்கிழக்காசியாவைத் தவிர ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் முள்நாறிப் பழம் விளைகின்றது.
துரியன் பழம் பலா பழம் போன்ற தோற்றத்துடன் அளவில் சிறியதாக உள்ள பழம். பொதுவாக இதன் விலையானது மற்ற பழங்களை விட அதிகமாக உள்ளது. ஒரு வித வெறுக்கத் தக்க மணத்துடன் இனிமையான சதைப்பகுதியை இப்பழம் பெற்றுள்ளது.
இதனால் துரியன் பழத்தின் மணம் நரகத்தைப் போன்றும், சுவை சொர்க்கத்தைப் போன்றும் இருக்கும் என்ற பழமொழியை இப்பழம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஆங்கிலேயர்கள் காலத்தில் நீலகிரி மலைத்தொடரின் உயரம் குறைவான பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பழமரமே முள்நாறி எனப்படும் துரியன் பழமரமாகும்.கல்லார்,பர்லியார் மற்றும் தென்பொதிகை மலைப்பகுதிகளில் இம்மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.
இதன் பழங்கள் கிலோ ரூ600 முதல் 750 வரை முன்பதிவின் பேரில் விற்பனை செய்யப்படுகின்றன.
இம்மர பழத்தின் மேற்பரப்பு முட்கள் நிறைந்திருந்தாலும் அதில் உள்ள சுளைகள் மிகவும் சுவையாக இருக்கும். மலாய் மொழியிலும் இந்தோனேசிய மொழியிலும் இப்பழத்தை டுரியான் என்றும் டுரேன் என்றும் அழைப்பார்கள். டுரி என்றால் முள் என்று மலாய் மொழியில் பொருள்படும். இப்பழத்திற்கு இந்தப் பெயர் ஏற்படுவதற்கான காரணம் இப்பழத்தின் அமைப்பே ஆகும்.
முள்நாறிப் பழம் ஒரு பருவக் காலப் பழம். மழைக் காலங்களில் மட்டுமே இவ்வகைப் பழங்கள் கிடைக்கும்.
முள்நாறி மரம் ஏறக்குறைய 50 மீட்டர் வரை வளரக் கூடியது. முள்நாறிப் பழம் அம்மரத்தின் கிளைப் பகுதியில் காய்க்கும். மற்றத் தோட்டங்களைப் போன்று இல்லாமல், பழங்கள் காய்க்கின்ற நேரத்தில் ஒரு முள்நாறிப் பழத் தோட்டம் மிக ஆபத்தான இடமாகவே கருதப்படுக்கின்றது. காரணம், எடை அதிகமுடைய முட்கள் நிறைந்த ஒரு முள்நாறிப் பழம் ஒருவரின் மேலே விழுந்தால் அவருக்குப் பெரிய காயங்களோ அல்லது இறப்போ கூட ஏற்பட வாய்ப்புண்டு.ஆனால் பொதுவாக இவை இரவு நேரங்களில் மட்டுமே கீழே விழும் இயல்புடையவை.
சராசரியாக, ஒரு முள்நாறி மரத்தில் நான்கு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை பழங்கள் காய்க்கத்துவங்கும்.
முள்நாறி மரத்தில்அயல் மகரந்தச் சேர்க்கை மூலமே இனப்பெருக்கம் நடைபெறுகின்றது. இம்மரத்தின் அயல் மகரந்தச் சேர்க்கை இரவில் தேன் உண்ணும் வௌவால்களைப் பெரிதும் சார்ந்துள்ளது. எனவே இம்மரத்தின் பூ மொட்டுகள் பகல் பொழுதில் மூடியே இருக்கும்.
உலகில் வேறு எதனோடும் ஒப்பிட முடியாத வகை வாசனையை (சிலருக்கு வாசம்; சிலருக்கோ நாற்றம்) முள்நாறிப்பழம் கொண்டிருப்பதால் சிங்கப்பூர் தொடருந்துகளில் இப்பழத்தை எடுத்துச் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதனை மீறுவோருக்கு 500 வெள்ளி தண்டம் விதிக்கப்படுகிறது. மேலும் சிங்கப்பூரில் உள்ள சில தங்கு விடுதிகளிலும் இப்பழத்தை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது .
இப்பழத்தை உடைக்காமல் வைத்திருந்தால் ஒரு மாதம் வரை வைத்திருக்க முடியும். உடைத்து விட்டால் சில மணி நேரத்திற்குள் உண்டு விட வேண்டும். இல்லையென்றால் ஒருவாறு பிசு பிசுத்து, சுவையிழந்து பிறகு கெட்டுவிடும்.
முன்பெல்லாம் முள்நாறிப் பழம் வருடத்தில் ஒரு முறை மட்டுமே காய்க்கும். வேளாண் துறையின் வளர்ச்சியால், தற்பொழுது முள்நாறிப் பழங்கள் வருடத்திற்கு இரு முறை காய்க்கின்றன .
முள்நாறிப் பழத்தை உடைப்பதென்பது அவ்வளவு எளிதன்று. அஃது ஒரு கலை. அதனால், மக்கள் பொதுவாகப் பழத்தை உடைத்து விற்கும் கடைக்காரர்களிடமே பழத்தை வாங்க விரும்புகின்றனர். பெரும்பாலான முள்நாறிப் பழம் விற்பவர்கள், மக்கள் விருப்பத்திற்கேற்ப பழத்தை உடைத்தும் உடைக்காமலும் விற்கின்றனர்.
கல்லார் மற்றும் பர்லியார் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் நூற்றுக்கணக்கில் இம்மரங்கள் உள்ளன.இங்குள்ள மிதவெப்ப சூழ்நிலை இம்மரங்கள் நன்கு வளர சாதகமாக உள்ளது.ஜூன் முதல் செப்டம்பர் வரையிலானதென்மேற்கு பருவ காலம் இதன் பழங்கள் கிடைக்கும் காலமாகும்.
குழந்தை வரம் தரும் மருத்துவ குணம் நிறைந்த பழம் என நம்பப்படுவதால் இதனை இங்கு முன்பதிவு செய்து பலர் வாங்கி செல்கின்றனர்.
மேலும் இம்மர நாற்றுகளும் இங்கு கிடைக்கின்றன.
பழங்களின் குணப்படுத்தும் பண்புகள் பல நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில், துரியன் உடலுக்கு புத்துயிர் அளிப்பதாக நம்பப்படுகிறது.
இதில் உள்ள மாங்கனீசு மற்றும் நார்ச்சத்து நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் அவை இரத்த சர்க்கரையை சீராக பராமரிக்கிறது. சளி, பல தோல் நோய்கள் மற்றும் மஞ்சள் காமாலை ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க மரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
துரியன் குடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, புற்றுநோய்களை நீக்குகிறது, மேலும் நாட்டுப்புற மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், மற்ற பழங்களை பறிப்பதுபோல் இந்த பழத்தை நாம் பறிக்க முடியாது. இந்த பழம் நம் கையில் கிடைக்க நாம்தான் காத்திருக்க வேண்டும். பழங்கள் தானாகவே மரத்திலிருந்து கீழே விழும். அதைதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் தோல் மேல் உள்ள முட்கள் பலா பலத்தை விட கூரியதாக இருக்கும்.இதன் விதை பெரியதாகவும்,கடினமானதாகவும் இருக்கும்.இதன் கொட்டைகள் எளிதாக முளைத்துவிடும்.
அரவிந்தன்
படித்தை பகிர்கிறேன்☺
Our You tube channel https://www.youtube.com/c/A2ZAMUTHAM
Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM
Reference: Books and other web source
If you have any suggestion kindly write comment section.
By Nathan B.com PG Dip in Yoga and Holistic Heath.....
No comments:
Post a Comment