Thursday, April 22, 2021

என் மேல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே ! என்னை பற்றி தெரியுமா? |EARTH DAY

 என் மேல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே ! என்னை பற்றி தெரியுமா?


(1) எனது பெயர் – பூமி (மனிதர்கள் வைத்தது)

(2) எனது பிறப்பு - 454 கோடி ஆண்டுகளுக்கு முன்பு

(3) எனது உடன் பிறப்புகள் – 8 பேர் (இது வரையில் மனிதர்கள் கண்டுபிடித்து எனக்கு சொன்னது> (புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், ப்ளூட்டோ)

(4)  நான் சூரிய மண்டலத்தில் - மூன்றாவது கோள்

(5)  எனது துணைக்கோள் - சந்திரன்

(6)  எனது அண்டை வீட்டார் - வெள்ளியும், செவ்வாயும்

(7) எனக்கு மிகவும் தொலைவிலுள்ள சொந்தம் – ப்ளூட்டோ.

(8) என் பாதுகாவலன் – வியாழன் (என்னை நோக்கி வரும் சிறு கற்கள் முதல் பெரும் எறி நட்சத்திரங்கள் வரை தன்னுடைய ஈர்ப்பு விசையால் தன் மேல் விழச் செய்யும்)

(9) என்னுடைய நண்பர்கள் – என்னில் வாழ்ந்து என்னையும் வாழவைக்கும் மரங்கள்.

(10) என்னுடைய எதிரிகள் – என் நண்பர்களான மரங்களை அழிக்கும் மனிதர்கள்

(11) நான் சுழலும் முறை - இடமிருந்து வலமாக (மேற்கிலிருந்து கிழக்காக)

(12) என்னை நானே சுற்றும் கால அளவு -23 மூன்று மணி நேரம் 56 நிமிடங்கள் 4.100 நொடிகள்

(13)  நான் சூரியனைச் சுற்றும் கால அளவு - 365.256366 நாட்கள்

(14)  சூரியனிலிருந்து நான் இருக்கும் தூரம் - 14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர்

(15) நான் சூரியனைச் சுற்றும் சுற்றுப்பாதை வேகம் - நொடிக்கு வேகம் 29.783 கிலொ மீட்டர்

(16) எனது விட்டம் - நிலநடுக் கோட்டின் வழியாக பூமியின் விட்டம் 12,756 கிலோ மீட்டர், ஆனால் வட தென் துருவம் வழியாக பூமியின் விட்டம் 12,713 கிலோ மீட்டர் ஆகும்.

(17) என்னுடைய எடை - 5,980,000,000,000,000,000,000,000 கிலோ கிராம் ஆகும்.

(18) என்னுடைய மொத்தப் பரப்பளவு - 510,072,000 கிலோ மீட்டர் அதில் நீர்ப்பரப்பளவு : 361,132,000 கிலோ மீட்டர் (70.8 %), நிலப்பரப்பளவு : 148,940,000 கிலோ மீட்டர் (29.2 %)

(19) என்னுடைய மேற்பரப்பு வெப்பம் - அதிகபட்சம் : 331 கெல்வின் 57.7 ° செல்சியஸ், குறைந்தபட்சம் : 184 கெல்வின் −89 °செல்கியஸ்.

(20) என்னுடைய மையப் பகுதியின் வெப்பம் - 7000 கெல்வின்

(21) என்னுடைய வெளிப்புற அழுத்தம் - ஒரு சதுர அடிக்கு 14.7 பவுன்ட்ஸ்

(22) என்னுடைய மையப்புற அழுத்தம் - 360 ஜிகாபேஸ்கல்ஸ்

(23)  என்னுடைய சுற்றளவு - 40,075.02 கிலோ மீட்டர்.

(24) நான் சுழலும் விதம் - 23.5 டிகிரி சாய்வாக

(25) என்னைப் பிரிப்பது - அட்ச ரேகைகள், தீர்க்க ரேகைகள்

(26) எனக்கு மேல் வாயு (வளிமண்டலம்) பரந்திருக்கும் தூரம் - 1000 கி.மீ

(27) எனக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் - 240,000 கி.மீ

(28)  எனக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது - அமாவாசை

(29) சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நான் வருவது - பெளர்ணமி

(30) சூரிய ஒளி என்னை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம் - 480 விநாடிகள் (சுமார் 8 நிமிடங்கள்)

(31) சூரியனுக்கும் எனக்கும் இடையில் வரும் சந்திரன் சூரியனை மறைப்பதால் ஏற்படும் நிழல் என் மீது விழும் போது ஏற்படுவது - “சூரிய கிரகணம்" அதாவது அமாவாசையில் வரும்.

(32) சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நான் வரும்போது என்னுடைய நிழல் சந்திரனை மறைக்கும் போது ஏற்படுவது - “சந்திரகிரகணம்" அதாவது பெளர்ணமியில் வரும்.

(33) என் மேல் இருக்கும் நிலப்பரப்பின் கண்டங்கள் – மொத்தம் 7 > ஆசியா கண்டம், ஆப்பிரிக்க கண்டம், ஐரோப்பாக் கண்டம், தென் அமெரிக்க கண்டம், வட அமெரிக்க கண்டம், ஆஸ்திரேலியாக் கண்டம், அண்டார்டிகா கண்டம். இவற்றில்தான் அனைத்து நாடுகளும் உள்ளடங்கி உள்ளது.

(34) என் மேல் இருக்கும் பெருங்கடல்கள் மொத்தம் 5 - பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லான்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல். 

இவற்றில்தான் மற்ற அனைத்து சிறு கடல்களும் உள்ளது.

(35)  என்னுடைய தற்போதைய பிரச்சனை – சுற்றுச் சூழல் சீர்கேட்டால் நான் வெப்பமடைந்து கொண்டிருக்கிறேன். அதனால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கின்றது.

(36) என்னுடைய வேண்டுகோள் – மனிதர்களே, மரங்களை வெட்டாதீர்கள் அப்படி அடிப்படைத் தேவைக்காக வெட்டினால், அதைவிட அதிக மரங்களை நட்டு பராமரியுங்கள். 

கரியமில வாயுவை வெளியேற்றும் எரி பொருளையும், உபகரணங்களையும் முடிந்த அளவு குறையுங்கள். 

அதற்கு மாற்று எரிபொருளை உருவாக்குங்கள்.

நினைவிருக்கட்டும் நான் இருந்தால் தான் நீங்கள் வாழ முடியும்.

இயற்கை வளம் காப்போம் பூமியைப் பாதுகாப்போம்.

இது போன்று மேலும் பல பயனுள்ள குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....

No comments:

Post a Comment

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...