Saturday, April 24, 2021

அச்சி நறுவலி மரம் | ஒரு அழகு மற்றும் நிழல் தரும் மரம் | Geiger tree

 Cordea sebestena

அச்சி நறுவலி மரம் மூக்குசளி மர குடும்பத்தை சார்ந்தது. இதனை Scarlet cardea எனவும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

நடுத்தர உயரத்தை உடைய குறுமரமாக இருப்பதால் வீடுகளிலும்,வீட்டின் முன்புறமும் இதனை வளர்க்கலாம்.

கோடை மற்றும் இலையுதிர் காலங்களில் கண்டை கவரும் இளம் சிவப்பு வண்ணத்தில் கொத்து கொத்தாக பூக்கும் தன்மை கொண்டவை.

இவை வெப்பமண்டல அமெரிக்காவை தாயகமாக கொண்டவை.இயற்கையாகவே தெற்கு புளோரிடா,பஹாமா மற்றும் மத்திய அமரிக்காவில் வளர்கின்றன.

வறட்சியையும்,வெப்பத்தையும் தாங்கி வளரும் தன்மை கொண்டதால் இந்தியாவில் பரவலாக மலரழகு மரமாக பூங்காக்களில் வளர்க்க அறிமுகப்படுத்தப்பட்டு இன்று பல்வேறு நகரங்களிலும் வளர்க்கப்பட்டு வருகிறது.தென்னிந்தியாவில் பெங்களுரு,

சென்னை மற்றும் ஆந்திர,கேரள நகர தெருக்கள்,தோட்டங்கள்மற்றும் பூங்காக்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தென்னிந்தியாவில் இவை இலைகளை உதிர்காமல் மார்ச் முதல் பூத்து குலுங்கும் இயல்புடையவை.

உப்புக்காற்றை தாங்கி வளர்வதால் கடற்கரை பகுதிகளில் வளர்க்க ஏற்ற மரமாகும்.மேலும் பூச்சி தாக்குதலும் குறைவு.இருப்பினும் அதிக பனியை தாங்கி வளராது. வடிகால் வசதிக்கொண்ட

பலதரப்பட்ட மண்ணிலும் வளரும் தன்மை கொண்டதால் தமிழகத்தின் சமவெளிப்பகுதிகளில் எளிதாக வளர்க்க இயலும்.

இம்மரங்கள் விதைகள்.தண்டு குச்சிகள் மற்றும் விண் பதியன் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. மிக மெதுவாக வளரும் தன்மை கொண்டதால் இரண்டு முதல் மூன்றடி உயரமுடைய நாற்றுகளை நடவு செய்தால் வளர்ப்பது எளிதாக இருக்கும்.

இயற்கையாக வளரும் மரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிமர தண்டுகள் காணப்படும். முறையாக பக்ககிளைகளை அகற்றி ஒற்றை தண்டில் வளர்க்கப்படும் மரங்கள் அதிகப்படியாக  25 முதல் 30 அடி உயரமும்,25 செ.மீ குறுக்களவு கொண்டதாகவும் இருக்கும்.அதிகமான மிதமான தொங்கு கிளைகளை கொண்டு இதன் தலை பகுதி ஒரு மலர் குடுவை தோற்றத்தில் இருக்கும்.

இதன் இலைகள் அடர்த்தியாகவும், அகன்றும் 18 செமீ நீளம் கொண்டதாகவும்,தோல் போன்று தடித்தும்,

நுண்ணிய முடிகளை கொண்டதாகவும் இருக்கும்.எனவே இம்மரங்களை நிழலுக்காகவும் குறுகிய அகலம் கொண்ட தெருக்களிலும் நடவு செய்யலாம்.

நுனிதண்டுகளில் பூங்கொத்துக்கள் உருவாகும்.இதில் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் என இரு வகைகள் உள்ளன.

இம் மரத்தண்டுகள் சற்றே கடினத்தன்மை கொண்டிருப்பதால் இதன் கிளைகள் காற்றில் அதிகம் முறிவதில்லை.இதன் மர தண்டுகள் உள்ளூர் மரவேலைகளுக்கு பயன்படுத்தலாம்.


இதன் இலைகளை உப்புத்தாள் போன்று உராய்வு பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.

இதன் இலைகள்,பழங்கள் மற்றும் மரப்பட்டைகள் போன்றவை மருத்துவத்திலும் பயன் படுத்தப்படுகின்றன.

இதன் இலை கசாயம் குடல்,வயிறு மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாகிறது.இதன் பழங்கள் பறவைகளுக்கு உணவாகின்றன.


காற்றில் நிலவும் தூசிகளை வடிகட்டி,பிராண வாயுவை நமக்களிப்பதுடன்,  பூவழகு மரமாக நில எழில் கலை வடிவமைப்பிலும் அதிகமாக பயன்படும் அச்சி நறுவலி  மரங்களை காலியிடங்களில் நடவு செய்து சுற்றுச்சூழல் காப்போம்.

 அரவிந்தன்

இது போன்று மேலும் பல பயனுள்ள குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....

No comments:

Post a Comment

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...