Saturday, April 3, 2021

அரிநெல்லி |STAR GOOSE BERRY

 அரிநெல்லி |STAR GOOSE BERRY |Phyllanthus acidus


அருநெல்லி என்றவுடன் எல்லோருக்கும் பொதுவாக வாயில் நீர் ஊறும். வாயில் நீர் ஊறுவதற்கு அருநெல்லிக்காயின் புளிப்பு சுவை நம் நினைவிற்கு வருவதே காரணம் ஆகும்.

பொதுவாக நாம் எல்லோரும் இக்காயினை உப்பும், மிளகாய்பொடியும் வைத்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருப்போம். நொறுக்குத் தீனியாகப் பயன்படுத்தப்படும் இக்காய் சத்து நிறைந்ததும் கூட.

அருநெல்லி பெரும்பாலும் வீட்டுத்தோட்டத்திலும், முற்றத்திலும் வளர்க்கப்படுகிறது. அலங்காரத்திற்காகவும் இதனை வளர்ப்பது உண்டு.இவை பொதுவாக சின்ன நெல்லிக்காய், அரிநெல்லிக்காய் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

அருநெல்லியின் தாயகம் மடகாஸகர் தீவுகளாகும். இங்கிருந்து கிழக்கு இந்தியப் பகுதிகளுக்கு இக்காயானது பரவியது. இங்கிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, வியட்நாம், லாவோஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கு பரவியது. பின் தென் மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு பரவியது.


அருநெல்லியானது குற்றுச்செடிக்கும், மரத்திற்கும் இடைப்பட்ட குறுமரவகையாகும். இம்மரமானது வெப்ப மண்டல மற்றும் மிதவெப்பமண்டலங்களில் அதிகளவு காணப்படுகிறது.

இம்மரமானது 10மீ உயரம் வரை வளரக் கூடியது. இம்மரத்தின் தண்டானது கிளைத்து பழுப்புநிறத்தில் எளிதில் உடையும் தன்மையுடன் காணப்படுகிறது.

இம்மரத்தின் இலைகள் தண்டில் இருந்து கிளைத்த ஈர்க்குகளில் கூட்டிலைகளாக நீள்வட்ட வடிவில் இருக்கும். ஒவ்வொரு இலையும் 5-6 செமீ நீளமும், 2-3 செமீ அகலமும் உடையதாக இருக்கும்.

மலர்கள் கொத்தாக இளஞ்சிவப்பு வண்ணத்தில் காணப்படும்.

இம்மர மலர்கள் ஆண், பெண் மற்றும் இருபால் தன்மையுடனும் இருக்கின்றன.

இம்மரத்தில் பூக்கள் இலைகள் இல்லாத முக்கிய கிளைகளில் தோன்றுகின்றன. இப்பூக்களிலிருந்து 1முதல் 1.5 செமீ அளவுடைய பச்சைநிற காய்கள் கொத்தாக தோன்றுகின்றன.அருநெல்லிக்காயானது முதிரும்போது வெளிர் மஞ்சள் வண்ணத்தில் நீர்ச்சத்துடன் கூடிய சதைப்பற்று மிகுந்து இருக்கும்.

தென்இந்தியாவில் அருநெல்லி அதிகளவு காணப்படுகிறது. தென்இந்தியாவில் இக்காய் ஏப்ரல்-மே மற்றும் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

அருநெல்லியில் விட்டமின் சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்) போன்றவை உள்ளன. மேலும் இதில் கால்சியம், இரும்புசத்து, பாஸ்பரஸ், சாம்பல் சத்து ஆகிய தாதுஉப்புக்கள் காணப்படுகின்றன. இதில் புரதச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்து, கரோடின்கள் ஆகியவை உள்ளன.

அருநெல்லியில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உணவினை நன்கு செரிக்க உதவுகின்றன.இக்காய் மலமிளக்கியாகச் செயல்படுகிறது. இதனால் மலச்சிக்கல், மூலநோய் உள்ளிட்ட நோய்களுக்கு இக்காய் தீர்வாகிறது.

இக்காயில் விட்டமின் சி அதிகளவு உள்ளது. விட்டமின் சி-யானது உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்கக்கூடியது. இதனால் சளி, இருமல் உள்ளிட்ட நோய் தொற்றுகளிலிருந்து நம்மை இக்காய் பாதுகாக்கிறது.

அருநெல்லி இலையானது உடல் எடை குறைப்பிற்கு சிறந்த தீர்வாகும்.இவ்விலையில் உள்ள சபோனின் சத்தானது குடலானது அதிகமான கொலஸ்ட்ராலை உறிஞ்சுவதைத் தடைசெய்கிறது. இதனால் உடல் எடை குறைகிறது.

அருநெல்லிக்காயில் இரும்புச்சத்தும், கால்சியமும் அதிகளவு உள்ளன. எனவே இக்காயினை உண்ணும் போது எலும்புகளின் அடர்த்தி அதிகரிப்பதோடு அவை வலுவாகவும் செய்கின்றன. எனவே வலுவான எலும்புகளைப் பெற அருநெல்லியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

அருநெல்லிக்காயானது இனிப்புகள், ஊறுகாய்கள், ஜாம்கள், கேக்குகள், குளிர்பானங்கள், சாலட்டுகள் உள்ளிட்டவை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இவை இவற்றின் மணத்திற்காகவும் சில உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகின்றன.

 அரவிந்தன்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....

 

 

 

 

No comments:

Post a Comment

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...