புங்கன் மரம்| Pongam Tree
Pongamia pinnata
புங்கன் மரமானது புங்கம்,புங்கை, புங்கு, பூந்தி மற்றும் கிரஞ்ச மரம் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. புங்கன் மரம், வெப்பமண்டலப் பகுதிகளான ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது.
சங்கப்பாடல்களில் ஒன்று இதனைப் ”புன்கு” எனக் குறிப்பிடுகிறது.
இது இந்தியா மட்டும் அல்லாது சீனா, ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகளிலும் பரவியுள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. கிழக்கே சமவெளி பகுதிகளில் உள்ள ஆற்றங்கரைகள் மற்றும் தென் பகுதிகள் வரையில் அதிகம் காணப்படுகின்றது.
உத்திரப்பிரதேசம், பீகார், ஒரிசா, மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களிலும், சுந்தரவன காடுகள் மற்றும் அந்தமான் தீவின் கடற்கரை ஓரங்களிலும் அதிகமாக வளர்கிறது.வரப்புகள்,சாலை ஒரங்கள் மற்றும் வளமானது முதல் வறண்ட பகுதிகளிலும் பல்வேறு வகையான மண் வகைகளிலும் வளரும் தன்மை கொண்டது.
கடல் மட்டத்திலிருந்து 1200 மீ உயரம் வரையிலும் இது வளரும். ஆனால் இமய மலைப்பிரதேசத்தில் 600மீ உயரத்திற்கு மேல் இதனை காண இயலாது.
இம்மரம் தனது வளர்ச்சி நிலையில் நல்ல மாற்றங்களை கொண்டதாகும். சாதகமான சூழலில் பசுமை மாறாமலும், நேர்மாறான சூழலில் இலைகள் முற்றிலும் உதிர்ந்து காணப்படும். புதிய இலைகளும், பூக்களும் உடனடியாக தோன்றும். ஏப்ரல் முதல் ஜீலை மாதம் வரையில் பூக்கள் தோன்றும். ஜனவரி முதல் மார்ச் வரையில் காய்க்கும். 4 முதல் 7 ஆண்டுகளில் பூக்க மற்றும் காய்க்க துவங்கும்.
நீர் செழிப்பின் காரணமாக மலைச்சரிவுகளில் ஓங்கி உயர்ந்து வளரும் மரமாக உள்ளது. பாலைவனப் பகுதியில் குறுமரமாகவும் காணப்படுகிறது. கடற்கரை ஓரங்களிலும் கூட பெரிய மரமாக வளருவதில்லை. எனினும் கடல்மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரப் பகுதி வரை காணப்படுகிறது.
இவை 15 மீட்டர் உயரம் வளரக்கூடியதாகும். நடுமரத்தில் பக்கக் கிளைகள் உருவாகி, படர்ந்து விரிந்திருக்கும். மார்ச்சு–ஏப்ரலில் பூத்துக் குலுங்கும்.
இவை பெரும்பாலும் நிழலுக்காகவும்,அதன் விதை எண்ணெய்க்காகவும் வளர்க்கப்படுகின்றன.
இதன் இலைகளை ஆடுமாடுகள் மேயாததாலும்,விரைந்து வளரும் தன்மை,தூசியை வடிகட்டுதல் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தன்மையினால் தற்போது அனைத்து இடங்களிலும் வளர்க்கப்படுகிறது.
ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்தது புங்கன் மரம்தான். எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை. அதிக நிழலை தரக்கூடியது. பசுமை படர்ந்த மரமாக காட்சியளிக்கும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறது. சாலை ஓரங்களில் நிழல் தரவும்,, மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கன் மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
புவி வெப்பமயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்கன் மரமும் ஒன்று. வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு.
தற்பொழுது புங்கன் எண்ணெயிலிருந்து பயோடீசல் தயார் செய்து வாகனம் மற்றும் ஆயில் இஞ்ஜின்களுக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். இந்த ஆயிலைப் பிரிக்கும் போது கிளசரின் மற்றும் மெத்தனால் கிடைக்கின்றது. இந்த ஆயில் சோப்பு செய்யப் பயன்படுத்தப் படுகிறது. அதன் புண்ணாக்கு பயிர்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.
இலைகளின் சாறு இருமல், சளி, பேதி, வயிற்றுப் பொருமல், பசியின்மை போன்றவற்றைப் போக்கும்.
இதன் விதைகள் தோல் வியாதிகளை அகற்றும்.
வேர்கள் பற்கள் மற்றும் ஈறு சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும்.
மரப்பட்டை மூல வியாதிக்கு சிறந்த மருந்து.
பூக்கள் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
விதையின் பொடி காய்ச்சல், இருமல், நெஞ்சுச் சளியைப் போக்கும்.
வித்துகளில் உள்ள எண்ணெய் வாத வியாதிகளுக்கும், மூட்டு வலிக்கும் இந்திய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இம்மரங்களை எளிதாக விதைமூலம் இனப்பெருக்கம் செய்யலாம்.
இத்தகைய சிறப்புமிக்க புங்கன் மரங்களை நாம் சுற்றுச்சூழல் காக்க அனைத்து இடங்களிலும் வளர்த்தல் அவசியம்.
அரவிந்தன்
படித்தை பகிர்கிறேன்☺
Our You tube channel https://www.youtube.com/c/A2ZAMUTHAM
Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM
Reference: Books and other web source
If you have any suggestion kindly write comment section.
By Nathan B.com PG Dip in Yoga and Holistic Heath.....
No comments:
Post a Comment