Friday, April 16, 2021

மங்குஸ்தான் மரம்| Mangosteen

 மங்குஸ்தான் மரம்| Mangosteen

      Garcinia mangostana


மங்குஸ்தான் மரத்தின் தாயகம் தெற்காசியப் பகுதி எனக் கருதப்படுகிறது. தாய்லாந்து, பர்மா, இந்தியா, இலங்கை, வியட்நாம் போன்ற இடங்களில் பல வருடங்களக இம்மரம் காணப்படுகிறது.

தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலை, நீலகிரி அடிவாரங்களில் வளர்க்கப்படுகிறது.

கேரளா,தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பகுதிகளில் காப்பி,தென்னை தோட்டங்களில் ஊடுபயிராக சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் குற்றாலம்,கல்லார்,பர்லியார்,கூடலூர் மற்றும் தாண்டிக்குடி, தடியன்குடிசை பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.

இதன் கன்றுகள் கல்லார் மற்றும் பர்லியார் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப் படுகின்றன.

இப்பழ மரமானது 6 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரும் இயல்புடையது.செழித்து வளர நல்ல வெப்பமும், மழையும் தேவை. மேலும் இது அதிக குளிரான பகுதியிலும், வறட்சியான பகுதியிலும் வளராது.


இம்மரம் பயிர் செய்து 10 வருடங்களில் பலன் அளிக்கத் தொடங்கும்.இந்தியாவில் இப்பழம் ஏப்ரல் முதல் ஜீன் வரை கிடைக்கிறது. இலங்கையில் இப்பழம் மே முதல் ஜீலை வரை கிடைக்கிறது. 

மங்குஸ்தான் பழம் தனிப்பட்ட வடிவம், சுவை மற்றும் மணத்தினை உடையது. மேலும் இது மிதவெப்ப மண்டலத்தில் நன்கு செழித்து வளரும். ஆதலால் இப்பழம் மித வெப்பமண்டல பழங்களின் ராணி எனவும், கடவுளின் பழம் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் இப்பழம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்பழம் இனிப்புச் சுவையுடன் தனிப்பட்ட மணத்தினை உடையது.

இப்பழம் வெளிப்புறத்தில் அடர்ந்த சிவப்பு நிறத்தில் சற்று கடினமான தோல் பகுதியினையும் உள்ளே பனிப் போன்ற வெள்ளை நிறத்தில் ஆரஞ்சினைப் போன்ற மென்மையான சாறுகள் நிறைந்த சுளைகளையும் கொண்டுள்ளது.

இப்பழச்சுளையினுள் வெள்ளை நிற விதைகள் காணப்படுகின்றன. இப்பழம் உருண்டையாக பார்ப்பதற்கு சிறிய ஆப்பிள் வடிவில் உள்ளது.

இப்பழத்தின் வெளிப்புறத்தில் மேற்பகுதியானது பச்சை நிற சிப்பிகளால் ஆன தொப்பியினையும், சிறிய காம்பினையும் கொண்டுள்ளது.



இப்பழத்தில் காணப்படும் ஃபாலிபீனால்களான ஆல்பா சாந்தோன்ஸ், காமா சாந்தோன்ஸ் காணப்படுகின்றன. இவை உடலுக்கு அழற்சி எதிர்ப்பு சக்தி, பாக்டீரியா எதிர்ப்பு சக்தி, புற்று நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை வழங்குகின்றன.

வைட்டமின் சி மங்குஸ்தான் பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது. எனவே அனைத்து வயதினரும் மங்குஸ்தான் பழங்களை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உடலில் புற்றுச்செல்களின் வளர்ச்சியைத் தடைசெய்து உடலினைப் பாதுகாக்கின்றன. புற்றுநோய்கான மருந்துகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

இப்பழத்தில் காணப்படும் நியூட்ரியன்கள், தாதுஉப்புகள், விட்டமின்கள், சாந்தோன்ஸ் ஆகியவை உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கின்றன. நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கக் கூடிய நோய் தொற்றுகளிலிருந்தும் இப்பழம் பாதுகாப்பு அளிக்கிறது.

இப்பழத்தில் மக்னீசியம் அதிகளவு காணப்படுகின்றது. மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைச் சீர்செய்து சீரான இதய துடிப்பிற்கு வழிவகுக்கிறது.

இப்பழமானது அதிக அளவு நார்ச்சத்தினைப் பெற்றுள்ளது. நார்ச்சத்தானது சீரான செரிமானம் நடைபெறச் செய்கிறது. 

இப்பழமானது குறைந்த எரிசக்தியையும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினையும் பெற்றுள்ளது. மேலும் இது அதிக நார்சத்தினையும், விட்டமின்களையும் கொண்டுள்ளது. எனவே இப்பழத்தினை உண்டு ஆரோக்கியமான உடல் எடையைப் பெறலாம்.

இப்பழத்தினை வாங்கும்போது புதிதாகவும், காயங்கள் ஏதும் இல்லாமலும், நிறமானது ஒரே மாதிரியாகவும் இருக்குமாறு வாங்க வேண்டும்.

இப்பழமானது விரைவில் உலர்ந்து விடுவதால் இதனை வாங்கி ஓரிரு நாளில் பயன்படுத்தவும் அல்லது குளிர்பதனப் பெட்டியில் ஒரு வாரம்வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

இப்பழத்தினை உண்ணும் போது வெளிப்புறத் தோலினை பழத்தின் குறுக்குவாக்கில் கத்தியால் கீறி மேற்புறப் பாதியை கையால் பிய்த்து எடுத்து உள்ளிருக்கும் சுளைகளை உண்ணலாம்.

இப்பழம் அப்படியே உண்ணப்படுகிறது. மேலும் இது பழச்சாறாகவும், இனிப்புகள் செய்யவும், ஜாம்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் கோயம்பும்தூர், தென்காசி, திருநெல்வேலி,திண்டுக்கல்,தேனி, நீலகிரி மாவட்டங்களில் மலை அடிவாரங்களில் 1000 மீட்டர் உயரம் வரை வளர்க்கலாம்.

   அரவிந்தன்

இது போன்று மேலும் பல பயனுள்ள குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....

No comments:

Post a Comment

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...