Tuesday, April 20, 2021

தூங்குமூஞ்சி மரம் ஒரு அழகு மற்றும் நிழல் தரும் மரம் | Rain tree

தூங்குமூஞ்சி மரம் ஒரு அழகு மற்றும் நிழல் தரும் மரம் | Rain tree

Samanea saman



பண்ணி வாகை ,தூங்கு வாகை மற்றும் காட்டு வாகை என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் தூங்குமூஞ்சி மரம் வாகை இனத்தை சேர்ந்த தெற்காசியாவை பூர்வீகமாக கொண்ட நிழல் தரும் மரமாகும். 

தூங்கு மூஞ்சி மரத்தினை சோம்பேரிகளுக்கு உதாரணப்படுத்தி பேசுவது வழக்கம். மாலை நேரமானவுடன் இதன் இலைகள் மடிந்து மூடிக்கொள்வதால் பாவம், இதற்கு இப்படி ஒரு பெயர். ஆனால் இது தன்னால் முடிந்தவரை பூமியைக் குளிர்விக்கிறது. 


பகல் நேரத்தில் தன் மேல் பட்டைகளிலும், இலைகளிலும் ஈரப்பதத்தைச் சேமித்து வைத்துக் கொள்கிறது. இரவு நேரத்தில் அதை மழைத்தூறல் போல உதிர்க்கும்.மேலும் தூங்கு மூஞ்சி மரமானது


மாலை நேரம், மேகமூட்டம் மற்றும் மழை நாளில் அதன் இலைகளை மூடிக்கொள்ளும். அப்போது தான் மழை நீர் பூமிக்கு வர ஏதுவாக இருக்கும். 

இதனாலேயே இதற்கு மழை மரம் (Rain tree)என்றும் பெயர். 

தூங்கு வாகை மரம் மற்ற மரங்களை போல் இல்லாமல் இரவிலும் ஆக்ஸிஜனை வெளியிடும். இந்தோனேசியாவில் மேற்கொண்ட ஆய்வில் 15மீ வளர்ந்த மரம் ஆண்டொன்றுக்கு 28.5டன் கார்பன்டை ஆக்ஸைடை உட்கொள்வதாக கூறுகிறது.

இது அதிகபட்சமாக 25மீ உயரமும், 40மீ சுற்றளவுடனும் வளரக்கூடியது.இதன் தலைப்பு பகுதி நீள்கோள வடிவத்தில் குடைபோன்று தோற்றமளிக்கும்.

மரத்தின் மென் பகுதி வெண்மை நிறமாகவும், வைரப் பகுதி கருமை நிறமாகவும் இருக்கும்.

அடி மரம் குட்டையாகவும், மேல் குடை போல் பரந்தும் இருக்கும்.

பனிக்காலத்தில் இம்மரங்கள் இலைகளை உதிர்த்து விடும்.பின் புதியதளிர்கள் தோன்றுவதுடன் வெளிர் சிவப்பு வண்ணத்தில் பூக்கள் மரம் முழுக்க காணப்படும். வசந்த காலத்தில் தூங்கு வாகை மரத்தை கடந்து சென்றீர்கள் என்றால், மரத்தின் அடிப்பகுதி முழுவதும் தூவிகளும், காய்ந்த தூவிகள் சடை போலவும் திரண்டு கிடக்கும். முதலில் கொஞ்ச நாளைக்கு பூக்களாகவும், பிறகு அவை காய்ந்து சடைசடையாகவும் கிடக்கும்.

நமது பாரம்பரிய மரங்களுள் ஒன்றான வாகையை போன்று இலைகளும் பூக்களும் காணப்பட்டாலும் இவை ஆசிய வெப்பமண்டலப் பகுதிகளில் இருந்து இந்தியாவில் பரவிய ஒரு வெளிநாட்டு மரமாகும்.

இதன் கனியும், இலையும் கால்நடைகளுக்கு நல்ல தீவனமாக பயன்பட்டு, பால் உற்பத்தி திறனை அதிகரிக்கிறது. பிண்ணாக்கிற்கு சமமான சத்து  இதன் மரத்தின் காய்களிலிருந்து கிடைக்கிறது.  இலைகளை தழை உரமாகவும் பயன்படுத்தலாம். இதன் கனியில் புரோட்டின் 12 சதவீதம், கொழும்பு 2 சதவீதம், கார்போஹைட்ரேட் 55g சதவீதம் உள்ளது.

இலைகளிலும், காய்களிலும் நீர், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப் பொருள், உலோக உப்புகள் அடங்கியுள்ளன. இதன் இலைகளை உலர்த்தினால் 4 சதவீத அளவில் நைட்ரஜன் கிடைக்கும்.  காய்களை இடித்துத் தூளாக்கி, கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுக்கலாம். இதன் மரப்பட்டையில் ஆல்கலாய்டுகள் உள்ளன. மேலும், காலிக் அமிலம், குளுகோஸ், சுக்ரோஸ், கொழுப்பு அமிலம் போன்றவைகளும் உள்ளன.

இதன் பட்டை அல்லது இலைகளைத் தூளாக்கி தேநீர் அல்லது சுடுத்தண்ணீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல்,அதிக இரத்த அழுத்தம், தலைவலி, வயிற்று வலி, ஆகியவை கட்டுப்படும். 


விதைகளை மென்று வந்தீர்களேயானால் நாள் பட்ட தொண்டைப் புண் விரைவில் குணமாகும். இதன் இலைகளின் சாறு காசநோய்க்கு அருமருந்து. கொலம்பியா நாட்டில் இதன் பழத்தை மயக்க மருந்து தயாரிக்க பயன்படுத்தறாங்க. 

மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசினை  பசையாகவும் பயன்படுத்தலாம்.

குறைந்த கனமுடைய மரச்சாமான்கள் செய்ய இதன் மரக்கட்டை உபயோகமாகிறது.

விரைந்து வளர்ந்து நிழல் தரும் தன்மை,பல்வேறு வகையான மண்ணில் வளர்தல்,வறட்சியை தாங்கும் திறன்,அதிக அளவு பிராண வாயுவை இரவில் தரும் காரணமாக தமிழகத்தில் இம்மரங்கள் நிழல்தரும் மரங்களாக சாலை ஓரங்கள்,கல்வி மற்றும் தொழிற்சாலை வளாகங்கள் ஆகிய பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.

                        அரவிந்தன்

இது போன்று மேலும் பல பயனுள்ள குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM

Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....

No comments:

Post a Comment

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...