Wednesday, April 21, 2021

தீக்கொன்றை | அழகு மற்றும் நிழல் தரும் மரம் | Flame tree/Gulmohar

 தீக்கொன்றை | அழகு மற்றும் நிழல் தரும் மரம் | Flame tree/Gulmohar

     


       Delonix regia

நிழலுக்காகவும்,வண்ண மலர்களுக்காகவும் அதிகமாக வளர்க்கப்படும் மரங்களில் தீக்கொன்றை முக்கிய இடத்தை வகிக்கின்றது.

மடகாஸ்கரை தாயகமாக கொண்ட இந்த மரம் 19ம் நூற்றாண்டில்தான் அறியப்பட்டது.உலகின் வண்ணமயமான மலர்களை அளிக்கும் மரங்களில் முதன்மையாக இம்மரங்கள் கருதப்படுகின்றன.

இந்தியாவில் பெரும்பாலும் சமீப காலங்களாக இம்மரங்கள் அதிக அளவில் சாலை ஓரங்களிலும்,பூங்காக்கள் மற்றும் கல்வி வளாகங்களிலும் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகின்றன.

இவற்றின் வேகமாக வளரும் தன்மை, மேலோட்டமான ஆழமில்லா வேர் வளர்ச்சி,வண்ணமயமான மலர்கள் மற்றும் பரந்து விரிந்த கிளைகளுடன் கூடிய குடை போன்ற தோற்றம் ஆகியவற்றின் காரணமாக நில எழில் கலையிலும் (Landscape gardening), மண்அரிமானத்தை தடுக்கவும்      இம்மரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

மே மலர்கள் என அழைக்கப்படும் இம்மரங்கள் மே முதல் ஜூலை வரையிலான காலங்களில் இலைகளை உதிர்த்து மரம் முழுவதும் இளஞ்சிவப்பு வண்ண மலர்களுடன் கோடைகாலங்களில் சாலை ஓரங்களில் காட்சியளிப்பது கண்ணுக்கு விருந்தாக அமையும்.

இவை சுமார் 30-40 அடி உயரமும், இதன் உயரத்தை விட பக்கவாட்டில் நீண்ட கிளைகளையும்,பெரணி போன்ற அழகான கூட்டிலைகளையும் கொண்டவை.இதன் காய்கள் 1-1.5அடி நீளமாக ஆரம்பத்தில் பச்சை வண்ணமாகவும் முற்றியபின்,பழுப்பு நிறமாகவும் இருக்கும்.இவை முற்றிய பின்னரும் மரத்திலேயே தொங்கி கொண்டிருக்கும்.

இம்மரங்களை சாலைகள்,பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களின் ஓரங்களில் பெருங்கொன்றை மரங்களுடன் கலந்து மாற்றி மாற்றி 30அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.இவ்விரண்டு மரங்களுமே ஒரே காலத்தில் சிகப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்களில் (Contrast colour) பூத்திருக்கும் போது தொலைதூரத்திலிருந்து பார்பதற்கு ரம்மியமாக இருக்கும்.

இம்மரங்களை வீட்டின் முன் சுற்றுச்சுவரை மிக ஒட்டி நட கூடாது.ஏனெனில் இவற்றின் மேலோட்டமாக பரவி வளரும் வேர்கள் சுவர்களில் விரிசலை உண்டு செய்யலாம்.குறைந்த பட்சம் 5 அடி சுவரிலிருந்து தள்ளி நடுவது அவசியம்.

இதன் கிளைகள் வலுவற்றவை.வேர்களும் ஆழமாக செல்லாமல் மேலோட்டமாக மண்ணில் பரவி இருப்பதால் காற்று காலங்களில் கிளைகள் முறியவும்,வேருடன் சாயவும்  அதிக வாய்ப்புகள்  உள்ளன.ஆகையால் மழை மற்றும் காற்று காலங்களில் நீண்ட மற்றும் தொங்கும் கிளைகளை கவாத்து செய்வதன் மூலம் குடை போன்ற அமைப்பு பராமரிக்கப்படுவதுடன் மழை  சேதங்கள் தவிர்க்கப்படும்.

இம்மரங்கள் கடல்மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரையிலும் 14°C முதல் 40°C வரை வெப்பநிலையை தாங்கி வளரக்கூடியவை.

களிமண்,மணல் போன்ற பலதரப்பட்ட மண் வகைகளில் 4.5 முதல் 7.5 வரை காரஅமில தன்மையை தாங்கி வளரும்.

மழை குறைவான பகுதிகளில் இவை வளர்ந்தாலும், ஓரளவு ஈரப்பதமான இடங்களில் நான்கு முதல் ஐந்து வருடங்களில் நன்கு வளர்ந்து பூக்க ஆரம்பிக்கும்.

SRI SAI FORESTRY Gulmohar Delonix Regia Flame Or Flamboyant Tree Seeds for Home Garden Road Side Shadow Apartments Compound Pack of 300 Grms click here

இதன் இலைகள்,பூக்கள், விதைகள் மற்றும் மரப்பட்டைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை. இதன் விதைகளை சில பகுதிகளில் உணவாகவும்,மரப்பட்டை கசாயம் வாந்தியை தூண்டவும் பயன் படுத்தப்படுகிறது.

இதன் இலைகள்,பூக்கள், விதைகள் மற்றும் பட்டைகளில் உள்ள மூலப்பொருட்கள் நோய் எதிர்ப்பு திறனை தூண்டவும்,நீரழிவு,இதய நோய்கள்,வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதுடன்,நோய்களை ஏற்படுத்தும் பூஞ்சனம் மற்றும் பாக்டீரியா தடுப்பானாகவும் பயன் படுத்தப்படுகின்றன.

இம்மரங்கள் விதைகள் மூலமாக நாற்றுகள் தயார் செய்யப்பட்டு, 3-5 அடி வளர்ந்தவுடன் நடவு செய்யப்படுகிறது.இதன் விதை உறை கடினமாக இருப்பதால் இவை மண்ணில் விதைத்தால் கூட 1-2 ஆண்டுகள் வரையிலும் கூட முளைக்காது.எனவே இதன் விதை உறக்கத்தை நீக்க விதைகளின் இருபுறத்தையும் லேசாக தரையில் தேய்த்து (scarification) பின் நீரில் 24 மணிநேரம் ஊறவைத்து விதைப்பு செய்யவேண்டும்.

 

நாற்றுகளை பொதுவாக பருவமழை காலத்திற்கு முன் நடவு செய்யவேண்டும்.10-15 அடி உயரம் வளரும் வரை பக்க கிளைகளை அகற்றிவிடவேண்டும்.

Kraft Seeds 20KG Vermicompost for All Kinds of Plants Complete Food for The Soil, Enriched with Cow Urine, Organic | Vermicompost for Agriculture Organic Farming Greenhouse | Fertiliser for All Plants https://amzn.to/3OrrXgt

உங்கள் தெருக்கள்,பள்ளிகள், ஏரிக்கரைகளில் மற்ற மரங்களுடன் கலந்து இம்மரங்களை நடவு செய்யலாம்.

 அரவிந்தன்

இது போன்று மேலும் பல பயனுள்ள குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM

Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....

No comments:

Post a Comment

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...