Saturday, April 3, 2021

மகோகனி மரம்| American Mahogany Tree

 மகோகனி மரம்| American Mahogany

    Swietenia mahagoni


சுற்றுச்சூழல் நலன் காக்கவும் வரும்கால சந்ததியினர் சுகமாக சுத்தமான காற்றை சுவாசிக்கவும் மரங்களை நட்டு பசுமைப் பரப்பை அதிகரிப்பது அவசியமாகிறது. 

அதேசமயத்தில் பொருளாதார ரீதியாகவும் மரம் வளர்த்தல் அதிக பயனை தருகிறது. அந்த வகையில் டிம்பர் வேல்யூ என சொல்லப்படும் அதிக பருமனுள்ள பெரிய மர வகைகளுக்கு சந்தையில் மதிப்பு அதிகம் உள்ளது. மரங்கள் வளர்ப்பு லாபம் நிறைந்த விவசாயமாக தற்போது வளரத் தொடங்கியிருக்கிறது.

இவற்றுள்மகோகனிஎன சொல்லப்படும் மரம் வேளாண்மை காடுகளில் எளிதாகவும்,லாபகரமாகவும் வளர்க்க ஏற்றதொரு மரமாகும்.வீட்டின் நிலைக்கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றில் பயன்படுவதோடு கப்பல் கட்டும் பணியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இசைக்கருவிகள், பென்சில்கள் செய்யவும் ஏற்றது.

வெட்டிய மரத்திலிருந்து பசைகள் எடுக்கிறார்கள். இந்த பசை மிகவும் உறுதி வாய்ந்தது.  இதன் மரப்பட்டை சடானின் நிறைந்தது என்பதால் சாயமேற்றவும் பயன்படுத்தலாம்.  இதன் மரத்திலிருந்து அழகிய வேலைப்பாடுகள் உள்ள மேசை, நாற்காலிகள், வீட்டின் நிலைக் கதவுகள், வேலைப்பாடுகளுடன் கூடிய கதவுகள், அலமாரிகள் தயாரிக்கலாம். 

டைனோசர்ஸ் காலத்தில் வாழ்ந்த மரமாக கருதப்படும் இம் மரத்தின் ஒரு பாகத்தை கனடா நாட்டு தொல்லியல் துறை அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். சுமார் 8 கோடி ஆண்டுகள், உலகிலேயே பழைமையான மரமாக இது தான் இருக்கும் என  அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்

இத்தகைய பலன்தரும் மரங்கள் பற்றாக்குறை ஏற்படும் போது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் சூழல் ஏற்படுகிறது. ஆனால், இம்மரங்களை நாமே நம் ஊர்களில் நட்டு வளர்க்க முடியும்.

மரங்களின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்கும்போது மழை பொழிவும் அதிகம் ஏற்படும்; விவசாயமும் செழிக்கும்.


நாம் காடுகளில் அதிகளவில் வித்தியாசமான மரத்தை பார்த்து அதனை ரசித்திருப்போம். அதே போல் தான் இந்த மகோகனி மரம். இந்த மரமானது, 100அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது.

மேற்கிந்திய தீவுகளை இருப்பிடமாக கொண்ட இந்த மரம் நம்நாட்டிற்கு வந்து 1000 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. நம் நாட்டில் உள்ள தேக்கு மரத்தை போலவே வலிமையாகவும், மென்மையாகவும் இருக்கும்.

இம்மரமானது, குறைவான கிளைகளுடனும், மேலும் நெருக்கமாக வளர்வதற்கும் ஏற்றது. ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் அதிகளவில் இந்த மரத்தை விரும்புவார்கள். அமெரிக்க வெள்ளை மாளிகையிலும், இங்கிலாந்து அரசியின் பங்கீங்காம் மாளிகையிலும், இதனை வெகுவாக பயன்படுத்துகின்றனர்.

தேக்கிற்கு இணையாக இம்மரம் இருப்பதால், அதிக விலைக்கு போகும். இம்மரத்தை நட்டு 15, 20 ஆண்டுகளுக்கு பிறகு பூத்து, காய்க்க தொடங்கும். இம்மரத்தின் காய்,கனி,இலைகள், விதைகள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் உடையவை. இம்மரத்தின் இலை மூடாக்கிற்கு மிகவும் சிறந்தது.

மகோகனி மரத்தின் பட்டைகளுக்கு மருத்துவக் குணமும் உண்டு. 1890-ல் பிரான்ஸ் நாட்டில்  `அமிபியாஸ்` எனப்படும் வயிற்றுப்போக்கால் பலர் உயிரிழந்த நிலையில்,  மகோகனி மரத்தின் பட்டைகள் மருந்தாகப் பயன்பட்டுள்ளன.

அதிக நிழல் விழாத மரமாக இருப்பதால் விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் நடுவதன் மூலம், மண் வளம், நீர் வளம் மேம்படுவதோடு கணிசமான வருவாயை இம்மரங்கள் ஈட்டித்தரும்.

1 ஏக்கருக்கு 80 மரங்கள் வரை வரப்பு ஓரங்களில் நட முடியும். 10 அடிக்கு ஒன்று என்ற விதத்தில் நடலாம். தோப்பாக நடுவதென்றால் ஏக்கருக்கு 130 மரங்கள் நடவு செய்யலாம்.

மகோகனி வளர்ப்பு, நம் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், ஏற்றுமதிக்கும் வழிவகுக்கும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில்

இந்த மரத்துக்கு பெரிய அளவில் சந்தை உள்ளது. இந்த மரம் வளர்ப்பதால், புவி வெப்பமயமாதலும் தடுக்கப்படும்"

மேலும் இம்மரங்கள் காற்றுத்தடுப்பு வேலியாக செயல்படுவதால், அதிக காற்றினால் பயிர்களும் மற்ற மரங்கள் சேதமாகாமல் காக்கலாம்! நகரங்களில் கட்டிட வளாகங்களில் ஒரு வரிசையாக மகாகொனி மரங்களை நடலாம். இம்மரங்கள் நகரங்களில் மாடிகளில் வசிப்பவர்களுக்கு காற்றை வடிகட்டிக் கொடுக்கும்.

அடிக்கடி புயலால் பாதிக்கப்படும் டெல்டா மாவட்டங்களில் இந்த மரத்தை நடவு செய்யலாம். காற்றின் வேகத்தை இவை தாங்கி நிற்கும்.

இவற்றுக்கு தொடர்ச்சியாக நீர் பாய்ச்சாவிட்டாலும் மரம் காய்ந்து போகாது.

எனினும், அதிக தண்ணீர் இருந்தால்,  வளர்ச்சி வேகமாக இருக்கும். வேறெந்த பராமரிப்பும் இல்லாமலே, 10 ஆண்டுகளில் 120 செ.மீ. சுற்றளவு கொண்ட பெரிய மரமாகவும், உயரமாகவும் இது வளரும்.

ஒரு மரத்தின் விலை சராசரியாக ஒரு கன அடிக்கு ரூ.1,000 விலை போகும் என்பதால், பத்து ஆண்டுகளுக்குப் பின் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் வருவாய் கிடைக்கும்.

கட்டுமானத்துறைக்கு மரத்தின் தேவைப்பாடு அதிகம் இருப்பதால் வேளாண்காடுகள் வளர்ப்பில் மகாகொனி மரம் வளர்ப்பு நல்ல லாபம் தரும் தொழிலாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.

 அரவிந்தன்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....

No comments:

Post a Comment

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...